முனியாண்டி குடித்துவிட்டு வந்த நாளி்ல்,
வீட்டில் சாம்பார் வைத்திருந்தால்,
அவர் மனைவியைப் பார்த்து,
திடுமாடு நெடுமுருகா,
நித்தம் நித்தம் இந்த இழவா,
வாத்தியாரு சாவாரா,
வயித்தெரிச்சல் தீராதா?
ஏண்டி, தினம் என்னை சாம்பார்
வைச்சே கொல்லப் பாக்குறீ்ங்களா? என்ற வரிகளை
ஒரு மந்திரம் போலச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவார்.
முனியாண்டிக்குப் பிடித்த மற்றொரு வரி: “நடந்தவை
நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்.” (குடித்துவிட்டு கலாட்டா செய்தபின், மைத்துனர் பொறி பறக்க அடிக்கும்போது
சொல்லும் வார்த்தைகள் இவை.)
September 15, 2006 at 10:50 am
நான் கேட்ட செய்யுள்களிலேயே ரொம்பப் பிடித்தது இதுதான். இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்தது “ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம் டூம் டையா, அஸ்கலக்கடி புஸ்கலக்கடி பாலசுந்தர கொய்யா.”
September 15, 2006 at 3:49 pm
பாராட்டுக்கு நன்றி. செய்யுளில் நீங்கள் இரண்டு வார்த்தைகளை விட்டுவிட்டீர்கள். “பாலசுந்தர கோல கொப்புர கொய்யா” என்று வர வேண்டும்.
September 15, 2006 at 5:30 pm
நோ! எங்கள் ஊரில் சொல்வதைத்தான் நான் சொன்னேன். உண்மையில் கோல கொப்புர கொய்யாவைச் சேர்த்தால் ஒலி நயம் அடிபடுகிறது.
August 21, 2007 at 8:08 pm
Enna oru medha vilasam…
Ippadi irukkum solvadaikalai thaniya eliyidalame..