October 2006


மதுரை மத்திய தொகுதிக்கு வரும் 11ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை ஆற்றிய பங்கைப் பற்றிப் பேசதான் இந்த வலைப்பதிவு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குமுதம் ரிப்போர்ட்டர் மத்தியத் தொகுதி இடைத்  தேர்தல் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்பதால் அங்கு முக்குலத்தோர் ஜாதியைச் சேர்ந்த ஒருவரைதான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற தொனியில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக அ.தி.மு.க முக்குலத்தோரைதான் நிறுத்தும் என்றெல்லாம் அந்த கட்டுரையாளர் புலம்பித் தள்ளியிருந்தார். இதற்காக பல டுபாக்கூர் புள்ளிவிவரங்களையும் அள்ளிவிட்டிருந்தார்.

மதுரை மத்திய தொகுதி என்பது மதுரையின் மையத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளை(ஏறக்குறைய)யும் வேறு சில பகுதிகளையும் உள்ளடக்கிய மிகச்சிறிய தொகுதி. அங்கே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அடுத்ததாக யாதவர்கள். அதற்கடுத்த நிலையில் சௌராஷ்ட்ரா சமூகத்தினர், நாயக்கர்கள், ஆயிரம் வைசியர், பிராமணர்கள் போன்றவர்களும் சிறிய எண்க்கையில் வசிக்கிறார்கள். ஆனால் அங்கே வசிக்கும் முக்குலத்தோரை விரல்விட்டு எண்விடலாம். பிறகு ஏன் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்தியாளர் அந்தத் தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்று கூறுகிறார்?

அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அல்லது முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த ராஜன் செல்லப்பாவிற்கு வாய்ப்புத் தர மறைமுகமாக அ.தி.மு.க   தலைமையை நிர்ப்பந்திக்க விரும்பியிருக்க வேண்டும். இந்த இரண்டாவது லட்சியத்தில் செய்தியாளருக்கு வெற்றி கிடைத்துவிட்டது. அ.தி.மு.க என்னதான் தேவர்களுக்கு சார்பான கட்சியாகக் கருதப்பட்டாலும் வேறு ஜாதியினரும் மதத்தினரும் அதிகமாக வசிக்கும் ஒரு தொகுதியில் தேவர் பாசத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அ.தி.மு.க தலைமை முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. குமுதம் ரிப்போர்ட்டரின் கட்டுரை தேர்வாளர்களை (அவர்களும் முக்குலத்தோர்தான்) அந்த நிலையை நோக்கித் தள்ளியிருக்கலாம். அல்லது தேர்வாளர்கள் அந்தக் கட்டுரையைக் காட்டி தங்கள் ஜாதியினரை வேட்பாளராக நிறுத்தியிருக்கலாம்.
ராஜன் செல்லப்பாவை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்ததும், அவரே வெற்றி பெறப் போகிறார் என்பது மாதிரி ஒரு கட்டுரையை ரிப்போர்ட்டர் வெளியிட்டது. ஆனால் உண்மை அதற்கு மாறானது. 90களின் மத்தியில் ராஜன் செல்லப்பா எம்.பியாகவும் அ.தி.மு.கவின் முக்கியப் பொறுப்பிலும் இருந்தார். அவையெல்லாம் மதுரை மக்களுக்கு மறக்க முடியாத வருடங்கள். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்பவர்கள் காலனியைப் பாதுகாக்க ரூ. 1 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தரும் சீட்டில் வெறும் 20 பைசாவே கட்டணமாக அச்சிடப்பட்டிருக்கும். இதன் பின்ணனியில் ராஜன் செல்லப்பா இருந்ததாகச் சொல்லப்பட்டது. பல்வேறு கொலை வழக்குகள், குண்டு வெடிப்பு வழக்குகள் இவர் மீது இன்னும் நிலுவையில் இருக்கின்றன. அ.தி.மு.க தலைமை இதையெல்லாம் மறந்துவிட்டாலும் மதுரை மத்தியத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் இதை மறக்க  மாட்டார்கள் என்று நம்பலாம்.

இந்தத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதும் விஜயகாந்தின் தே.மு.தி.க இரண்டாவது இடத்தை  பிடிக்கும் என்பதும் நிச்சயம். குமுதம் நிர்வாகம் திடீரென்று இதை கவனித்தது போலத் தெரிகிறது. மதுரை மத்தியத் தொகுதியைப் பற்றி வேறொருவர் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஒரு செய்தியாளர் நினைத்தால் ஒரு பெரிய கட்சியின் முடிவிலேயே தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் நிரூபித்திருக்கிறது.    ஆனால் அது அந்த  செய்தியாளரைத் தவிர வேறு யாருக்கும் நன்மையாக இருக்கப் போவதில்லை.

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதவாது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும். செல்வத்தின் வயதையொத்த அசோக்தான் இந்த குடிகார கும்பலின் புரவலர். பொறியியல் கல்லூரி மாணவன். செல்வம் கிரைண்டர் மெக்கானிக். இப்படிதான் ஒரு நாள், செல்வமும் அசோக்கும் குடிக்கப் போனார்கள். வழியில் அசோக்கின் மாமாவும் சேர்ந்து கொண்டார். இந்த இடத்தில் அசோக்கின் மாமா பற்றி சொல்ல வேண்டும். ஆபாசப் படங்களுக்குப் போனால் முதல் வரிசையில் உட்கார்ந்து கொள்ளும் பிறவி இவர். அப்போதுதான் காட்சியை முதலில் ரசிக்க முடியுமாம். அதே போல் போதை கொஞ்சம் தலைக்கு ஏறிவிட்டால் எதிரிலிருப்பவர் யாரென்றே தெரியாது. மூன்று பேரும் ஒரு அழுக்கு ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தனர். அரை ம நேரம் கழிந்தது. மாமா அப்போது அசோக்கிற்கு புத்தி சொல்லும் மூடில் இருந்தார். “தம்பி, நீங்களே சொல்லுங்க. அசோக்கு என்ன படிக்கிறான்?” “அவனுக்கென்ன ராசாவுக்கு, இன்ஜினியரிங் படிக்கிறான்” என்றான் செல்வம். “கரெக்டு. அப்போ அவன் சேர்க்கையெல்லாம் எப்படி இருக்கணும்? என்ன மாத்ரி நாலு பெரிய மனுசன், டாக்டர், வக்கீலுனு இருக்க வேணாம்?” “ஆமாமா” என்றான் செல்வம். “செல்வம்னு ஒரு நாயி தம்பி. கிரைண்டர் மெக்கானிக்கா இருக்கு. எந்நேரம் பார்த்தாலும் அதுகூடவே சுத்தறான் தம்பி. நீங்களே புத்தி சொல்லுங்க” என்று ஒரு போடு போட்டார் மாமா. லைகுலைந்து போன செல்வம் வேறொரு ஒயின் ஷாப்பிற்கு போய் எம்சி ஹாப் வாங்கி அடித்துவிட்டு தூங்கிவிட்டான். “செல்வம் ஏன் இப்பல்லாம் நம்மகூட பேசறதில்ல” என்று கேட்டுக் கொண்டு திரிகிறார் மாமா.

த்ரிஷா – தமிழ் சினிமாவின் முன்ன நடிகை. சிம்ரன் திருமணம் செய்து கொண்டு திரையுலகைவிட்டு ஒதுங்கியபின், கையறு லையில் இருந்த தமிழ் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் அபயகரம் அளித்தவர். த்ரிஷாவைப் பார்ப்பதற்காக மட்டுமே சில ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்பதை எந்த ஆய்வாளனும் மறுக்க முடியாது. கால, தேச வர்த்தமானங்கள் அர்த்தமிழந்து போயிருக்கும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் த்ரிஷா பெற்றிருக்கும் வெற்றிக்கு அவரது அழகும் நடிப்பும் மட்டும்தான் காரணமா? தமிழ் சமூகத்தின் மீது, தமிழ் சினிமாவின் மீது அக்கறை கொண்ட ஒரு வரலாற்றாய்வாளன் இக்கேள்விகளை எழுப்பிக் கொள்வது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் த்ரிஷாவின் வெற்றி என்பது அழகும் நடிப்பும் கொண்ட ஒரு பெண்ன் வெற்றி மட்டுமல்ல. த்ரிஷா தமிழ்நாட்டில்தான் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் அவர் ஒரு பாலக்காட்டு பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர். இந்த ஒரு விஷயமே பசி சத்யாவுக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போவதற்கான காரணத்தையும் த்ரிஷாவுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கிடைப்பதற்கான காரணத்தையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
கேரள-தமிழக எல்லையில் அமைந்திருக்கும் கண்ணகி கோவிலில் வருடாவருடம் நடக்கும் திருவிழாவிற்கு செல்லும் தமிழர்களை கேரள காவல்துறை தொடர்ந்து தாக்கி வருகிறது. தங்கள் தாய் தெய்வமான கண்ணகியை வழிபடவியலாத தமிழர்களின் கண்ர் இதுவரை எந்த புத்தகத்திலும் பதிவானதாக தெரியவில்லை. மற்றொரு புறம், பெரியார் அணையில் 136 அடிக்கு மேல் தண்ர் தேக்கக் கூடாது என தொடர்ந்து தடுத்து வருகிறது கேரள அரசு.
இந்த சூழலில்தான் மலையாளப் பெற்றோருக்குப் பிறந்த த்ரிஷாவின் வெற்றியைப் பொருத்திப் பார்க்க வேண்டும். த்ரிஷா அறிமுகமான முதல் படம் லேசா லேசா. அதை இயக்கிய ப்ரியதர்ஷன் ஒரு மலையாள இயக்குனர். அந்தப் படத்தில் ஒரு பெரிய குடும்பத்தின் மகளாக வருகிறார் த்ரிஷா. குடும்பம் என்ற அமைப்புதான் பெண்ணடிமைத்தனத்திற்கே காரணம் என்று முழங்கியவர் பெரியார். போகட்டும். பெரிய குடும்பம் என்பது லவுடைமை சமுதாயத்தின் எச்சம். ற்க. அந்தப் படத்தில் த்ரிஷா ரகசியமாகத் திருமணம் செய்துக் கொள்ளும் வாலிபன் (அந்தப் பாத்திரத்தை ஏற்றிருப்பவர் பார்ப்பன மரத்தினத்தின் செல்லப் பிள்ளையான மாதவன்) நக்ஸலைட்டாக இருப்பதும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதும் கதைப் போக்கிற்கு அவசியமான ஒன்றுதானா? இந்த இடத்தில் இயக்குனரும் த்ரிஷாவும் சொல்ல வரும் செய்தி ஒன்றுதான். நக்ஸலைட்டை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை முழுக்க கண்ர்தான் என்பதுதான் அந்த செய்தி.
அடுத்ததாக சாமி. இந்தப் படத்திலும் அவர் பிராமணப் பெண்தான். பெரும்பாலான படங்கள் பிராமணர்களை நடுத்தர வர்க்கமாகவும் ஒண்டுக் குடித்தனக்காரர்களாகவும் காட்டி பிராமணர்களின் மேல் அனுதாப அலையை உண்டுப் பண்ணும் காரியத்தைச் செய்கின்றன. கோயில், குளம் என்று கட்டியழும் குருக்களை மட்டும் சித்தரித்துவிட்டு (இந்த படத்தில் அந்த பாத்திரத்தை செய்பவர் தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியாக விளங்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த விவேக்) அதிகார மையங்களில் கேந்திரக் கண்களாக இருக்கும் பிராமணர்களை கண்டுக் கொள்ளாமல் இருக்கும்படி இவை தூண்டுகின்றன. இப்படியான சித்திரங்கள் பிராமணர்களை வரலாற்றில் வைத்துப் பார்க்காமலும் நடைமுறை சமூகச் சூழலில் வைத்துப் பொருத்திக் காட்டாமலும் தனித்தனியாக எடுத்து முன்னிறுத்தும் முயற்சிகளாகும்.

(தொடரும்)