எஸ்ராஜெயமோகன் தமிழின் சீரியஸ் எழுத்தாளர்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி ரொம்ப அதிகம். அசோகமித்திரன் ஒரு விதிவிலக்கு. இப்படி ஒரு அபிப்பிராயம் மனதில் பதிந்து போயிருக்கையில், நண்பர் ஒருவர் அனுப்பிய லிங்கிற்குப் போய் பார்த்தேன். அவர் சுட்டியது ஜெயமோகனின் வலைபதிவை. அதில் எஸ். ராமகிருஷ்ணனைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார், பாருங்கள்.. அந்த ஒரு கட்டுரைக்காகவே அவருக்கு ஞானபீடம் கொடுக்கலாம். அந்தப் பதிவை காப்பியைக் குடித்துக்கொண்டே படித்தேன். மூன்றாவது பாராவிலேயே புரையேறி மானிட்டர் முழுக்க காப்பி. ஜெயமோகனைப் பற்றி உங்களுக்கு என்னவிதமான எண்ணம் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை ஒருபக்கம் வைத்துவிட்டு இதைப் படியுங்கள். தமிழ் இலக்கிய உலக அரசியல் பற்றி சிறிது பரிச்சயம் இருந்தால், கட்டுரையை வெகுவாக ரசிப்பீர்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்ஜாய்!