தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தில் நடித்திருந்தார் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. இந்தப் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.
ஆனால், டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.
தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தை இயக்கியவர் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. சுப்ரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் புதிய அலையையே, ஒரு வகைமாதிரியாக மாற்றியிருக்கிறது இந்த படம். அதாவது, ஒரு வெற்றிகரமான மசாலா படம் வந்ததும் அதைப் போலவே பத்து குப்பை மசாலா படங்கள் வருவது போல. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. மாறாக, இதைவிட பல மடங்கு மேம்பட்ட பசங்க படம் இந்த அளவு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. நாடோடிகள் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.