Monthly Archives: September 2006

“நானே முதல்வர்” – சுப்ரமணிய சுவாமி பேட்டி!

தாய்லாந்தில் நடந்த ராணுவப் புரட்சி, மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவை பற்றி நம்முடைய வலைப்பதிவுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அளித்த பரபரப்பு பேட்டி: கே: இவ்வளவு நாளாக ஆளையே காணவில்லையே. எங்கே போயிருந்தீர்கள்? ப: தாய்லாந்திற்கு. அங்கே பிரதமர் தூக்கி எறியப்பட்டு, ராணுவமும் காவல்துறையும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. அதை நடத்தியதே … Continue reading

Posted in அடேங்கப்பா பேட்டிகள | 1 Comment

பானுப்ரியாவுடன் ஒரு நாள்

வடக்கு மாசி வீதிகாரய்ங்களுக்கு சினிமாக்காரர்கள் மீதிருக்கும் மையல் அளவுக்கு வேறு யாருக்கும் இருக்குமா என்று தெரியவில்ல்லை. என் நண்பன் அரவிந்திற்கும் அவனது தம்பிக்கும் பானுப்ரியா மீது ஏகப்பட்ட காதல். அடிக்கடி அவரது வீட்டிற்கு போன் செய்வார்கள். பெரும்பாலும், “அம்மா அவுட்டோர் போயிருக்காங்க” என்ற பதில்தான் வரும். ஒரு முறை அரவிந்த் போன் செய்தபோது, பானுப்ரியாவே போனை … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments

ஏன்னா.. எனக்கே….

சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சி தந்த லாபத்தால் பல பதிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஒரு பதிப்பாளர் இன்னொரு பதிப்பகத்தில் வேலை பார்ப்பவரிடம் இப்படி சொன்னாராம்: “காலச்சுவடு, உயிர்மை பதிப்பகத்துக்கு என்ன ஒரு பத்தாயிரத்துக்கு வித்திருக்கும். ஏன்னா எனக்கே அவ்வளவுதான் வித்திருக்கு.” இதில் காமடி என்னான்னா, படிக்க முடியாத அறுவை நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் … Continue reading

Posted in Uncategorized | 4 Comments

“யாருக்கும் அடியார் இல்லை”- அஜித்!

ஆழ்வார் படப்பிடிப்பில் இருந்த அஜித்தை சந்தித்த போது, தன் முந்தைய படங்களின் தோல்விக்கெல்லாம் தன் காரணமல்ல என்று சொன்னார். பல்வேறு நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். கே: உங்களுடைய சமீபத்திய படங்கள் ஏதும் ஓடவில்லையே? ப: நான் நடித்திருக்கிறேன் என்பதாலேயே அவை ஓடவில்லை. ரசிகர்கள் திரையரங்குகளின் பக்கம் வருவதையே தவிர்த்தனர். இதற்கு நான் பொறுப்பாக முடியாது. … Continue reading

Posted in அடேங்கப்பா பேட்டிகள | 12 Comments

முனியாண்டிக்குப் பிடித்த வரிகள்

முனியாண்டி குடித்துவிட்டு வந்த நாளி்ல், வீட்டில் சாம்பார் வைத்திருந்தால், அவர் மனைவியைப் பார்த்து,   திடுமாடு நெடுமுருகா, நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியாரு சாவாரா, வயித்தெரிச்சல் தீராதா? ஏண்டி, தினம் என்னை சாம்பார் வைச்சே கொல்லப் பாக்குறீ்ங்களா? என்ற வரிகளை ஒரு மந்திரம் போலச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவார். முனியாண்டிக்குப் பிடித்த மற்றொரு வரி: “நடந்தவை … Continue reading

Posted in நம்ம பயலுக | 4 Comments

முனியாண்டிக்கு வந்த சோதனை

இந்தப் பதிவின் தலைப்பில் வரும் முனியாண்டி வடக்கு மாசி வீதியின் ஆயிரக்கணக்கான குடிகாரர்களில் ஒருவர். குடித்துவிட்டு மனைவியை அடிப்பது, மகன், மைத்துனன் ஆகியோரிடம் அடிவாங்குவது இவரது அன்றாட வழக்கம். இந்தச் சண்டைகள் ஒரு முறை பெரிதாகி, முனியாண்டியின் மனைவி பிறந்தவீட்டுக்குப் போய்விட்டார். முனியாண்டியின் வீட்டின் ஒரு பகுதியில் தனபால் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். முனியாண்டிக்கு … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments

பேரீச்சம்பழம் உடலுக்கு நல்லதா?

மதுரையில் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் மற்றொரு தின்பண்டம் பேரீச்சம்பழம். ஒரு அகலமான கோபுரம் போல, மிகுந்த பளபளப்புடன் வண்டிகளில் இவை குவித்து வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோபுரத்தைப் பார்க்கும் வெளியூர்காரர்கள் (பெரும்பாலும் ஐயப்ப சாமிகள்) இதை வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. கடையில் கிடைக்கும் பேரீச்சம்பழத்தின் விலையில் பாதி விலைக்கு இங்கே கிடைக்கும். இவை ஏன் … Continue reading

Posted in Uncategorized | 3 Comments