நீங்களே புத்தி சொல்லுங்க..

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதவாது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும். செல்வத்தின் வயதையொத்த அசோக்தான் இந்த குடிகார கும்பலின் புரவலர். பொறியியல் கல்லூரி மாணவன். செல்வம் கிரைண்டர் மெக்கானிக். இப்படிதான் ஒரு நாள், செல்வமும் அசோக்கும் குடிக்கப் போனார்கள். வழியில் அசோக்கின் மாமாவும் சேர்ந்து கொண்டார். இந்த இடத்தில் அசோக்கின் மாமா பற்றி சொல்ல வேண்டும். ஆபாசப் படங்களுக்குப் போனால் முதல் வரிசையில் உட்கார்ந்து கொள்ளும் பிறவி இவர். அப்போதுதான் காட்சியை முதலில் ரசிக்க முடியுமாம். அதே போல் போதை கொஞ்சம் தலைக்கு ஏறிவிட்டால் எதிரிலிருப்பவர் யாரென்றே தெரியாது. மூன்று பேரும் ஒரு அழுக்கு ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தனர். அரை ம நேரம் கழிந்தது. மாமா அப்போது அசோக்கிற்கு புத்தி சொல்லும் மூடில் இருந்தார். “தம்பி, நீங்களே சொல்லுங்க. அசோக்கு என்ன படிக்கிறான்?” “அவனுக்கென்ன ராசாவுக்கு, இன்ஜினியரிங் படிக்கிறான்” என்றான் செல்வம். “கரெக்டு. அப்போ அவன் சேர்க்கையெல்லாம் எப்படி இருக்கணும்? என்ன மாத்ரி நாலு பெரிய மனுசன், டாக்டர், வக்கீலுனு இருக்க வேணாம்?” “ஆமாமா” என்றான் செல்வம். “செல்வம்னு ஒரு நாயி தம்பி. கிரைண்டர் மெக்கானிக்கா இருக்கு. எந்நேரம் பார்த்தாலும் அதுகூடவே சுத்தறான் தம்பி. நீங்களே புத்தி சொல்லுங்க” என்று ஒரு போடு போட்டார் மாமா. லைகுலைந்து போன செல்வம் வேறொரு ஒயின் ஷாப்பிற்கு போய் எம்சி ஹாப் வாங்கி அடித்துவிட்டு தூங்கிவிட்டான். “செல்வம் ஏன் இப்பல்லாம் நம்மகூட பேசறதில்ல” என்று கேட்டுக் கொண்டு திரிகிறார் மாமா.

This entry was posted in நம்ம பயலுக. Bookmark the permalink.

2 Responses to நீங்களே புத்தி சொல்லுங்க..

 1. Kaanakan says:

  தரிஷாவின் வெற்றிக்குப் பின்னால் உள்ள சதி பற்றிய ஆய்வு சூப்பர். தமிழினதைக்காப்பதற்காகவே அவதரிதிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் திருமா, மருத்துவர் மாலடிமை, வைகோ போன்றோரும் சரி, அறிவுமதி,சீமான் வகையறாக்களும் சரி, என்ன காரணத்தாலோ வாய்மூடி மவுனிகளாய் இருக்கும்போது, துணிச்ச்லாக பார்ப்பனச் சதியினை அம்பலப்படுத்தியதற்கு கோடானுகோடி தமிழர்கள் உஙளுக்குநன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். இனிமேலாவது தமிழ்ன் விழித்துககொல்லுகிறானா பார்ப்போம். இந்த மாதிரி பிளாககியை, இணையதள பதிவுகளை நீங்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கியிருந்தால் கமல், ரஜினி போன்றவர்க்ள் தமிழன் த்லையில் மிளகாய் அறைப்பதைத் தடுத்திருககலாம். வாழ்க வளர்க உம் தமிழினத்தொண்டு
  கானகன்

  Like

 2. senthil nathan says:

  ama..ellam kadhaya? Illa unmai sambavama 😉

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s