உடல், வெளி, மெய்ஞ்ஞானம், வாழ்வியல்..etc..

suhasini.jpg பெண்ணியம் என்பதை பொத்தாம்பொதுவாக விளக்குவதானால், சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஆணாதிக்கத் தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்று சொல்லலாம். பல ஆண்டுகளாக இது குறித்த கருத்துகள், சிந்தனைகள் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. மேரி டாலி, சார்லோட் பஞ்ச், மெரிலின் ஃப்ரை போன்ற பெண்ணியவாதிகள் பெண் விடுதலையை முன்வைத்து தொடர்ந்து போராடியும் எழுதியும் வந்தனர். நம்மிடத்தில் இப்படிச் சிந்தனையாளர்கள் யாரும் இல்லை. அது பெரிய பிரச்னையாகவும் இல்லை. மேலை நாட்டு பெண்ணியவாதிகளின் சிந்தனைகளை நம் நாட்டிற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். அல்லது அப்படியே பயன்படுத்தலாம்.

ஆனால் சமீப காலமாக சில பெண் கவிஞர்கள், மார்க்கெட் இழந்த நடிகைகள் ஆகியோர் பெண்ணியவாதிகளாகவும் இலக்கியம், சினிமா, கலை ஆகிய துறைகளில் உன்னதம் விரும்புபவர்களாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில் ஒரு பெரிய பத்திரிகை நடத்தும் இலக்கிய இதழில் ஒரு பெண் கவிஞர் பெண், பெண் உடல், பெண் வெளி என்றெல்லாம் ஏதேதோ பேத்தியிருந்தார். ஒருவரிகூட யாருக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக எழுதியிருந்தார் (உதா: போதுமான அளவுக்கு உள்கிடங்குகளில் நிறையும் உளக்கிடக்கைகளோ பழுப்பேறி புழுதிபடிந்து, மூச்சுமுட்டும் அளவுக்கானவை. இக்கட்டத்தில் ஒரு இல்லத்தை அல்லது வீட்டை ஒரு பெண்ணின் உடல் மெய்ஞ்ஞானம் எய்துவதற்கான வெளியாகவோ வாழ்வியல் இன்பங்களை நுகர்வதற்கான ஒரு பரப்பாகவோகூட ஒருபொழுதும் நுகர முடியாது!). தமிழ் உரைநடை தெரியாதவர்கள் மட்டுமே இப்படிக் கிறுக்க முடியும்.  உலகையே புரட்டிப்போட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைகூட படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிதாகத்தான் இருந்தது.  இருந்தும் பாருங்கள், அந்தக் கவிஞர் நம் சமூகத்தில் ஒரு முக்கியமான சிந்தனையாளர். படைப்பாளி. சினிமாகூட தெரியும். இதனால்தான் இந்தப் பாழாய்போன பெண்ணியம் மு.மேத்தா வாயிலெல்லாம் விழ வேண்டியிருக்கிறது.

நடிகைகளான ரேவதி, சுகாசினி ஆகியோர் தங்கள் கேரியரின் உச்சத்தில் இருந்தபோதுகூட, அவர்களைவிட சிறந்த நடிகைகள் கோலிவுட்டில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னும் நிறைய நடிகைகள் அவர்கள் தொட்ட சிகரங்களையெல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, குஷ்பு, சிம்ரன். ஆனால், அவர்கள் ஒருபோதும் சிறந்த நடிகைகளாக நம் அறிவுஜீவிக் கூட்டத்தால் கருதப்பட்டதில்லை. காரணம் நல்ல நடிகைகள் என்பதற்கு நம் அறிவுஜீவிகள் வைத்திருக்கும் இலக்கணம். அந்த இலக்கணங்கள் இதோ: குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கக்கூடாது; ஒருபோதும் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கக்கூடாது; படங்களில் கண்ணியமாக (எல்லாம் so called கண்ணியம்தான்) நடித்திருக்க வேண்டும். குஷ்பு, சிம்ரன் ஆகியோர் இந்த இலக்கணத்திற்கு வெளியே இருப்பதால் அவர்களுக்கு அறிவாளி அந்தஸ்து கிடையாது.

இப்போது மேலே சொன்ன நடிகைகள் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். அறிவுஜீவி அந்தஸ்து அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.  எந்த ஒரு பொதுப் பிரச்னையிலும் குரல்கொடுக்காதவர்கள் சமூக போராளிகளாக முன்னிறுத்தப்பட்டு, குடிசைகளின் நடுவே, ஏழைகளின் நடுவே, உண்மையாகப் பணியாற்றும் பெண்களுக்கு அவமானம் சேர்க்கப்படுகிறது.  சிபிஎம்மின் வாசுகி கலந்து கொண்ட பெண்கள் தினக் கூட்டங்களைவிட இந்த நடிகைகள் கலந்து கொண்ட பெண்கள் தினக்கூட்டங்கள் அதிகமாக இருக்கும். இந்த நடிகைகள் எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதாலேயே எல்லா இடங்களுக்கும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், இது இவர்களது தப்பேயில்லை. கூட்ட அமைப்பாளர்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும் (அதற்குத் தண்டனையாக சுகாசினி, ரேவதி நடித்த புதுமைப்பெண், மனதில் உறுதி வேண்டும் போன்ற படங்களைப் பத்துப் பத்து தடவை பார்க்கச் சொல்ல வேணடும்). கூட்டங்களுக்கு வருபவர்களும் சீரியஸ் சினிமாவுக்கு, சீரியஸ் எழுத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பதில்லை.

இந்த இடத்தில் ஒன்றை விளக்கிவிடவேண்டும். ஒருவர் நடிகையாக இருப்பதாலேயே அவருக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்ல வரவில்லை. நடிகைகளைக் கூட்டங்களுக்கு அழைப்பதை எதிர்க்கும் ஆச்சாரப் பார்வையையும் இங்கே முன்வைக்கப்படவில்லை. சீரியஸான நடிகைக்கான இலக்கணம் என்பது அவர்கள் காட்டும் கவர்ச்சியை வைத்தே முடிவெடுக்கப்படுகிறது என்ற ஆதங்கம்தான் இங்கே கொட்டப்படுகிறது.
விரைவில் இந்த வரிசையில் சொர்ணமால்யாவும் சேரக்கூடும். அவர் சிறப்பாக நடனம் ஆடுகிறார் என்பது அதற்குக் காரணமாக இருக்காது. அவர் நடித்த மொழி திரைப்படம், ஐநாக்ஸ், சத்யம் போன்ற மல்டிப்ளெக்ஸ்களில் நன்றாக ரசிக்கப்படுகிறது; கண்ணிய நடிகை என்று பெயர் அவர் விரும்பியோ, விரும்பாமலோ அவர் மீது ஒட்டிக்கொண்டதுதான் காரணமாக இருக்கும்.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

4 Responses to உடல், வெளி, மெய்ஞ்ஞானம், வாழ்வியல்..etc..

  1. TNG says:

    I hate to post my response in Tamil. I tried various tricks, it didnt click. Some sign of disconnect?
    Anyway some of our feminists talk in language we cant understand, I think the approach sd be to coax them into writing or speaking more lucidly, not dismiss them as irrelevant. Even more problematic your taking it out on the likes of Suhasini and Revathi. I personally like their acting a lot. Kushboo too, yes, but Simran? I dont know. Fr what I saw i was not too very impressd.
    Anyway both Suhasini and Revathi deserve all our admiration for putting their feet down and refusing to star in titillating roles. In a medium that thrives on skin shows, for someone to disrobe calls for a lot of gumption. I dont think that is a vice. In a milieu, someone tries to stand out, naturally, he or she, does get attention. Why should one object to it?
    According them recognition as feminsits is an insult to others, you claim, I dont think.
    Suhasini’s Raj TV serial was very good. So also Revathi’s show KTV was/is a welcome attempt to make ordinary housewives to go beyond their daily routines and families.
    That Revathi did not come out in the open in support of kushboo is certainly unacceptable. that doesnt mean one can deny her the credit due to her as an actress who has carried on with a certain amount of dignity on and off the screen.
    am willing to forgive her bjp stint in view of her other achievements, she has tried her hand in direction, making sensible serials and so on.
    there is a lot of hypocrisy in all of us, true, still given the pathetic situation of women in this patriarchal society, any woman trying to be different in any way and not go by the expectation of the male deserves warm appreciation.

    Like

  2. சீரியஸாகப் பேசும்போது வெளி, பரப்பு, கருத்தியல், கவிகிறது, விரிகிறது இதெல்லாம் இல்லாமல் பேசிவிட முடியுமா?

    பெண் நடிப்பு (பெண் மொழி மாதிரி) கவர்ச்சி காட்டாமையின் அடிப்படையில் அளவிடப்படுகிறது என்பது உண்மைதான். ரேவதி, சுகாசினி போன்றவர்கள் மசாலா குறைந்த படங்களில் சராசரியாகவோ அதற்கும் கீழோ நடித்தார்கள் என்றால் சிம்ரன் போன்ற ஒரு சிலர் மசாலா படங்களில் நன்றாக நடித்தார்கள்.

    நடிப்புத் தொழில் முடிவுக்கு வந்துவிட்டது. பேங்க் அக்கவுன்ட்டில் பணம் இருக்கிறது. இனி இமேஜைக் கட்டிக் காக்கப் பொதுச் சேவை மாதிரி வருமா?

    Like

  3. அன்புள்ள டிஎன்ஜி,
    உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லும் கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
    1. நம் பெண்ணியவாதிகளில் சிலர் எழுதுவது புரியவில்லையென்றால், புரியும்படி எழுதச்சொல்லி அவர்களிடம் கேட்கலாமே தவிர, அவர்களை நிராகரிக்கக்கூடாது.
    2.கவர்ச்சியையே மூலதனமாகக் கொண்டு இயங்கும் சினிமாத் துறையில், கவர்ச்சிகாட்ட மறுத்து இயங்கியவர்கள் சுகாசினியும் ரேவதியும்.
    3. இவர்கள் இருவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கினார்கள்.
    4. இவர்கள் சினிமா நடிகைகள் என்பதற்காகவே இவர்களுக்கு இருக்கும் பிற தகுதிகளை மறுக்கக்கூடாது.
    5. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வரவேற்பளிக்க வேண்டும், அவற்றில் சில குறைகள் இருந்தாலும்.

    நீங்கள் சொன்ன இந்த ஐந்து கருத்துக்களையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலே சொன்ன விஷயங்களுக்காக இவர்கள் பெண்ணியவாதிகள் ஆகிவிட மாட்டார்கள் என்பதுதான். இவர்களது தொழில் நடிப்பது. அதை அவர்கள் ஒரளவுக்குச் செய்திருக்கிறார்கள் (நீங்கள் சொல்வதுபோல அவர்கள் தமிழின் ஆகச்சிறந்த நடிகைகள் என்று நான் நினைக்கவில்லை. இருவருமே ஒரே மாதிரியான உம்மணமூஞ்சி கதாநாயகிகள் பாத்திரத்தையும், ரேவதி தொடர்ந்து அழுதுவடியும் அம்மா ரோல்களையும் தொடர்ந்து செய்துவந்தவர்கள், வருபவர்கள். ராதா, குஷ்பு, சிம்ரன், ஜோதிகா போல விதவிதமான பாத்திரங்களைச் செய்யவில்லை). தான் செய்துகொண்டிருக்கும் தொழிலைச் சிறப்பாக செய்பவர்களுக்கு அதற்குரிய புகழை மட்டும்தான் தரவேண்டும். கருத்துலகிலோ, சிந்தனை உலகிலோ இடம்பெற வேண்டுமென்றால், அவர்கள் அந்தத் தளத்தில் இயங்கியிருக்க வேண்டும். வேணு ஸ்ரீநிவாஸனின் இருசக்கர வாகன நிறுவனம் நன்றாக இயங்கியதென்றால், அவருக்கு டெமிங் விருது கிடைக்கும். சமூகப் போராளி அந்தஸ்து நிச்சயமாகக் கிடைக்காது. அவர் மற்ற நிறுவனங்களைவிட பைக்குகளை விலை குறைவாக விற்றார் அதனால் அவரை போராளியாக்கிவிடலாம் என்று யாரும் நினைப்பதில்லை. தவிர, சீரியஸ் சினிமா மேடைகளை இவர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறார்கள். சீரியஸ் சினிமாவிற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ரேவதி, சுகாசினி இருவருமே வெகுஜனப் படங்களில் ஓரே மாதிரியான, ஸ்டீரியோ டைப் பாத்திரங்களைச் செய்தவர்கள். சீரியஸ் சினிமா பற்றிப் பேச வேறு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைத்தான் சீரியஸ் சினிமா பற்றிப் பேச அழைக்க வேண்டும்.
    கடைசியாக, பெண்ணியவாதிகளின் எழுத்து பற்றி. நிஜமாகவே பெண்ணியவாதிகள் புரியாமல் எழுதினால், அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். நான் மேலே சொன்ன பெண்மணி, ஒரு அடையாளத்திற்காக இம்முயற்சிகளில் ஈடுபடுபவர். பெண்ணியம் குறித்து நீங்கள் ஒரு கட்டுரை எழுதுகிறீர்கள் என்றால், அந்தக் கருத்தியல் பற்றி மற்றவர்களுக்கு ஏதோ விளங்க வைக்க முயல்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், பெண்ணியம் பற்றி எழுதுகிறேன் என்ற பெயரில், மொழியைத் திருகி, தப்புத் தப்பான தமிழில் ஒரு கட்டுரை எழுதினால், உங்கள் எழுத்தைப் பற்றி மற்றவர்களை ஆச்சரியப்படுத்த நினைக்கிறீர்கள்: அதற்குப் பெண்ணியம் என்ற கருத்தியலைப் பயன்படுத்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த இரண்டாவது காரியத்தைத்தான் மேலே சொன்ன அம்மணி செய்திருக்கிறார்.

    பி.கு.: இந்த விஷயத்தில் நான் நடிகைகளை மட்டும் குற்றம் சொல்லவில்லை. எடிட்டர் லெனின் போன்றவர்கள் சீரியஸ் சினிமா ஆட்களாக முன்னிறுத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    Like

  4. Anonymous says:

    Assessment of actor’s prowess depends on one’s understanding. To me both Suhasini and Revathi belong to a better category. Kushboo may have a better screen presence, but whether she can emote like Revathi or attempt the characters that Suhasini, I am not convinced.
    Kushboo or Simran may have more to them than running around trees or pelvic gyrations. As I said earlier, Kushboo, with some reluctance, I can accept, but certainly not Simran. May be I’m completely ignorant of post-Kushboo cinema!!
    about their hogging meetings on feminism or serious film when the material is so poor, one can only fall back upon whats available. why do u grudge them that? some representation that. this kind of an interaction sd continue, i believe.
    about yr angst on feminists, my only grievance against them is when they go overboard, dismissing all othr points of view, like dalit sectarians.
    those who use abstract images may be they are trying to show off or those who dont understand have a long way to go to understand. am happy that she makes us males squirm!!

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s