முத்துச்சாமிக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு. ஆனால், யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர், என்ன செய்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அதனால், மதுரை வடக்கு மாசி வீதி பழுக்குகள் எல்லாம் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லுவார். தனக்கு எதுவும் தெரியாது என்பது தெரிந்துவிடாதபடி பேசுவார். அது சில சமயங்களில் எடுபடும்; சில சமயங்களில் சொதப்பலாகிவிடும்.
********
எல்லோரும் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது, முத்துச்சாமியும் அங்கே வருவார். எந்த நாடு ஆடுகிறது, யார் விளையாடுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். ஒரு அரை நிமிடம் ஆட்டத்தைக் கவனிப்பார். பிறகு, “ஜெயிச்சுருவாய்ங்க” என்று தீர்ப்புச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். ஆட்டம் முடிந்த பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது மறுபடி வருவார். யார் ஜெயிச்சது என்று கேட்பார். கண்டிப்பாக யாராவது ஒருவர் ஜெயித்திருப்பார்கள் அல்லவா? “அதான், சொன்னேல்ல ஜெயிச்சிருவாய்ங்கன்னு” என்று தன் மேதமையைத் தானே புகழ்ந்து கொண்டு சென்றுவிடுவார். அந்தக் காலத்தில் மேட்ச்சுகள் வெற்றி – தோல்வியின்றி முடிவது அடிக்கடி நடக்கவில்லை என்பதால் அவர் பெரிதாக மாட்டிக்கொள்ளவில்லை (அடிக்கடி டிராவில் முடியும் டெஸ்ட் பந்தையங்களை பழுக்குகள் ரசிப்பதில்லை).
********
90களின் மத்தியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அணி உலகக் கோப்பையில் கலந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் நன்றாகவும் ஆடியது. பழுக்குகள் யுஏஇயின் ஆட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வந்து சேர்ந்தார் முத்துச்சாமி. “எதப்பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க?” என்று விசாரித்தார். யுஏஇ பற்றி என்றார்கள் பழுக்குகள். “அந்தப் பயலா?” என்றார் முத்துச்சாமி. ஓரு நாட்டையே பயல் என்கிறாரே முத்துச்சாமி என்று பார்த்தார்கள் பழுக்குகள். “அதான்யா, சிவப்பா, உயரமா இருப்பானே.. அவன்தான்யா யுஏஇ?” என்றார் முத்து. யுஏஇன்னா யுனைட்டர் அராப் எமிரேட்ஸ் என்று விளக்கமளித்தார்கள் பழுக்குகள். “அவனத்தான் சொல்லுது.. எமிரேட்ஸ் பயல எங்களுக்குத் தெரியாதாக்கும்” என்று சொல்லியபடி, அடுத்து ஒடிப்போவதற்கு வேண்டிய வேலைகளைச் கவனிக்கச் சென்றுவிட்டார் முத்துச்சாமி.
********
திலீப் வெங்சர்க்கார் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நேரம். பழுக்குகள் வழக்கம்போல அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “நல்ல பவுலர். விக்கட் கீப்பிங்கூட நல்லாப் பண்ணுவான். பாவம் ரிட்டயர்ட் ஆயிட்டான்” என்று சொல்லியபடி சென்றுவிட்டார் முத்து.
அடிக்கடி ஊரை விட்டு ஓடிப் போவாரே அந்த முத்துச்சாமியா இவரு? ‘ஜெயிச்சுருவாய்ங்க’தான் சூப்பரு!
LikeLike
moeib
youtube
LikeLike
diyerbekirli_99, உங்க பின்னூட்டத்தில் ஏகப்பட்ட ஆழமான கருத்துகள். ரொம்ப நன்றி.
LikeLike
really super by
jaihind2050@gmail.com
LikeLike
நன்றி சந்திரமோகன் அவர்களே.
LikeLike