வூல்மர் கொலைக்கு தி.மு.க.தான் காரணம். – ராமதாஸ் பேட்டி

ராமதாஸ்உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ். பேட்டியிலிருந்து:

கே. இந்திய அணியின் தோல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. இன்றைக்கு தமிழ்நாட்டில் தி.மு.கவினர் எந்த அளவுக்கு அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தோல்வி ஒரு சான்று.
கே. தி.மு.கவிற்கும் கிரிக்கெட் தோல்விக்கும் என்ன சம்பந்தம்?
ப. இதே கேள்வியை கருணாநிதியிடம் கேட்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா?
கே. இந்திய கிரிக்கெட்டில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
ப. முதலில் சரத்பவாரை பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து தூக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்ற ஓரு பிற்படுத்தப்பட்டவரை அதன் தலைவராக்க வேண்டும். வேல்முருகன் எம்.எல்.ஏ போன்றவர்கள் பலமுறை கிரிக்கெட் பார்த்திருக்கிறார்கள். அவர்களை அணியில் சேர்க்க முடியாமல் எது தடுக்கிறது? உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகளை மக்கள் டிவிக்குத் தரவேண்டும். உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்ப்பவர்களில் 99 சதவீதம் பேர் தமிழர்கள். அந்த உரிமையை ஏன் ஒரு தமிழ் தொலைக்காட்சிக்குத் தரக்கூடாது?
கே. பாப் வூல்மர் கொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப. பாப் இவூல்மரின் அறையில் வீராசாமி படத்தின் வி.சி.டி இருந்ததாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். ஆரம்ப காலத்திலிருந்தே குறுஞ்செய்திகளை எதிர்ப்பவன் நான். அவை பல விதங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அதை எதிர்த்து வந்திருக்கிறேன். ஆனாலும் இந்த குறுஞ்செய்தியை நம்பாமல் இருக்க முடியவில்லை. விராசாமியை இயக்கிய வெற்றி ராசேந்தர் தி.மு.கவைச் சேர்ந்தவர். பால் இவூல்மரின் கொலையே அறிவாலயத்தில்தான் திட்டமிடப்பட்டது என்பதற்கு போதுமான ஆதரங்கள் இருக்கின்றன.
கே. ஏன் தி.மு.கவை தொடர்ந்து தாக்கிவருகிறீர்கள்?
ப. தினமும் தயாநிதிமாறன் மூலம் தில்லியுடன் பேசிவரும் கருணாநிதி, ஒரு பிற்படுத்தப்பட்டவருக்கு கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை பெற்றுத்தர முடியாதா? ஒரு ஆயா வேலைக்கு சிபாரிசு செய்தால்கூட கேட்கமாட்டேன் என்கிறார்கள்.
கே. உங்கள் பரிந்துரைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
ப. பா.ம.க. தலைவர் கோ.க. மணி தலைமையில் அறிவாலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். தமிழகம் முழுவதும் பா.ம.க. தொண்டர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாடம் நடத்துவார்கள். மக்கள் நிம்மதியாக இருக்க விடாமல் பார்த்துக்கொள்வோம்.
 

This entry was posted in அடேங்கப்பா பேட்டிகள. Bookmark the permalink.

6 Responses to வூல்மர் கொலைக்கு தி.மு.க.தான் காரணம். – ராமதாஸ் பேட்டி

  1. ரசிகருங்கோ says:

    டைமிங்கான பேட்டி. உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படி பட்ட ஸ்கூப் பேட்டியெல்லாம் கெடைக்குது?

    Like

  2. ‘இவூல்மர்’ நல்ல டச்! என்னதான் இருந்தாலும் உங்கள் அஜீத் பேட்டி மாதிரி வராது.

    Like

  3. muthukumar says:

    maruththuvar raamadoss enRu irunthirunthaal raamadoss kushi aakiyiruppaare!

    Like

  4. கட்டியக்காரன் says:

    தலைப்பில் அப்படி எழுதவில்லையென்றாலும் பேட்டியின் துவக்கத்தில் மருத்துவர் ராமதாஸ் என்றுதான் எழுதியிருக்கிறேன்.

    Like

  5. Xoak says:

    Dear கட்டியக்காரன,
    I’m invite you to visit my homepage. @ http://www.xoak.tkk

    Like

  6. பூர்ணம் விஸ்வநாதன் says:

    கட்டியக்காரம்பி, ஒன் பிளாகுல ஸ்பேம் பிளாக்குல்லாம் கெடையாதா? இப்படி கண்டவாள்ளாம் வந்து வெளம்பரம் போட்டுண்ட்ருக்காளே?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s