நானும் ஒரு காப்பி…..

வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய காப்பிக்கடை இருந்தது. பார்க்க மிகக் கச்சிதமாக இருக்கும். உரிமையாளரே கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு மாஸ்டர். எல்லாம் இருந்தும் காப்பி சகிக்காது. ஏரியாவுக்குப் புதிதாக வருபவர்கள் தெரியாமல் அங்கே காப்பி குடிப்பார்கள். சில சமயங்களில் பால் தீர்ந்துவிட்டது; லோடு வரவேண்டியிருக்கிறது என்பார் கடைக்காரர். காப்பி இவ்வளவு மோசமாக இருந்தும் பால் ஏன் இவ்வளவு சீக்கிரமாக தீர்ந்துவிடுகிறது என்ற சந்தேகம் பலருக்குண்டு. லோடு வந்து இறங்கும்போது பார்த்திருந்தால் சந்தேகமே வந்திருக்காது. காரணம், லோடு என்பது அரை லிட்டர் பால். பக்கத்திலிருக்கும் ஆவின் பூத்தில் போய் வாங்கி வருவார் மாஸ்டர். காலையில் பத்து, பத்தரை மணியளவில் மாஸ்டரை அழைப்பார் உரிமையாளர். டேய், தூக்குவாளியை நல்ல கழுவிட்டு, மீனாட்சி காப்பிக் கடையில போய் நல்ல காப்பிய ஒன்னு வாங்கிட்டு வா என்று காசை எடுத்துக் கொடுப்பார். பல சமயங்களில் காலையிலிருந்து வசூலான தொகையே மீனாட்சி காப்பிக்கடையில் காப்பி வாங்கும் அளவுக்குத்தான் இருக்கும். தான் அந்தக் கடையில் மாஸ்டராக இருந்தும், தான் போட்டுத்தரும் காப்பியைக் குடிக்காமல் வேறு கடையில் வாங்கச் சொல்லிக் குடிக்கிறாரே முதலாளி என்று மாஸ்டர் ஒருநாளும் வருந்தியதில்லை. ஒங்களுக்கு காப்பி வாங்கீட்டு, நானும் அப்படியே ஒரு காப்பி…. என்று இழுப்பார் மாஸ்டர். அன்றைக்கு வசூல் சற்று பரவாயில்லை என்றால் அனுமதி கிடைக்கும். இப்படி ஈ ஓட்டும் கடையில் கணக்கு மட்டும் கம்ப்யூட்டர் பாணியில் இருக்கும். அதாவது முதலாளியிடம் காசைக் கொடுத்து டோக்கன் வாங்கினால்தான் மாஸ்டர் காப்பி போட்டுத் தருவார். இத்தனைக்கும் மாஸ்டரும் முதலாளியும் அருகருகில் இருப்பார்கள். காப்பியென்றால் சிவப்பு டோக்கன். டீ என்றால் பச்சை டோக்கன். இரண்டும் ஒரே விலை. சிவப்பு டோக்கனை வாங்கிவிட்டு டீ கேட்டால் ஸ்ட்ரிக்டாக மறுத்துவிடுவார் மாஸ்டர். டோக்கனை மாற்ற முதலாளியிடம் சிபாரிசு வேண்டுமானால் செய்வார். நம்ம பையந்தான். தெரியாம காப்பிக்குப் பதிலா டீ டோக்கனை வாங்கீட்டான். டோக்கனை மாத்திக் குடுங்க என்பார் முதலாளியிடம். அவர்கள் பேசுவதைப் பார்த்தால் நாளைக்கே கவர்மெண்ட் ஆடிட்டர் வந்து, ஏன் டோக்கன் மாறியது என்று இவர்களை ஜெயிலில் போட்டுவிடுவார்கள் என்பதைப் போல இருக்கும். ஒரு முறை எங்கள் வீட்டில் காப்பி வாங்கிவரச் சொன்னார்கள். நான் இந்தக் கடையில் வாங்கிவந்து கொடுத்தேன். இனிமே அந்தக் கடைப்பக்கம் போவியா…, போவியா?” என்று என் முதுகுத்தோலை உரித்துவிட்டார்கள்.

This entry was posted in நம்ம பயலுக. Bookmark the permalink.

14 Responses to நானும் ஒரு காப்பி…..

  1. ரசிகருங்கோ says:

    அப்படியே ஒரு போட்டோ…

    Like

  2. அந்த டோக்கன் மேட்டர் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியது!

    Like

  3. காபி கடை ரொம்ப சூப்பருங்கோ. ஹிஹி.. கலக்கிட்டிங்க.

    Like

  4. கட்டியக்காரன் says:

    ரசிகருங்கோ, சாத்தான், சந்தோஷ் – மூவருக்கும் நன்றி.

    Like

  5. Pingback: காப்பிக்கடை - live coverage :) « கில்லி - Gilli

  6. சூப்பர்…ரசிக்கும்படி எழுதி இருக்கீங்க….

    Like

  7. கட்டியக்காரன் says:

    நிர்மல், செந்தழல் ரவி – மிக்க நன்றி. மீண்டும் வருக.

    Like

  8. Dinesh says:

    Excellent narration. I keep on laughing from initial to the final line. Keep it up

    Like

  9. Veyilaan says:

    ரொம்ப நல்லாருக்கு! கிருஷ்ணன் கோவில் எதிரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததே! அதற்குப் பக்கத்தில் ஒரு காம்பவுண்டு இருந்தது முன்னால், அதில் தான் என் உறவினர்கள் இருந்தனர். அடிக்கடி வந்து போனதால் வடக்கு மாசி வீதியுடன் அதிக பரிச்சயம் உண்டு. அதிகாலை ஆவின் பூத் காத்திருத்தலும், விழாக் கால இரவின் சாமி சப்பரக் காணக் காத்திருத்தலும், இன்னும் நினைவிருக்கிறது! நிறைய எழுதுங்கள்!

    Like

  10. Veyilaan says:

    அப்புறம் அதிகாலை பசு சாணி வாசனையும், பால் கறக்கும் சத்தமும், விழாக்கால ஜவ்வு மிட்டாயும் வடக்கு மாசி வீதியின் தனிச்சிறப்பு!

    Like

  11. Senthil Nathan says:

    Aha aha aha aha… Appadi podu sithappuu…

    Like

  12. கட்டியக்காரன் says:

    ஓருதடவை மதுரைப் பக்கம் வாங்களேன் செந்தில்!

    Like

  13. Anonymous says:

    Kattayam varanum, namakku orru Theni. madurai, namma mamiyar veedu pola..

    Like

  14. senthil nathan says:

    Kattayam varanum, namakku orru Theni. madurai, namma mamiyar veedu pola..

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s