சிவாஜி சூப்பர் படமா?

பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது சிவாஜி. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகம் முழுவதையும் சிவாஜி என்ற ஒற்றை வார்த்தை ஆக்கிரமித்திருந்தது. ரசிகர்கள் இரவெல்லாம் விழித்துக் கிடந்து முன்பதிவு செய்தார்கள். ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியியலாளராக இருந்து ரூ. 250 கோடி பணத்துடன் இந்தியாவுக்கு வருகிறார் சிவாஜி (ரஜினி). அவருக்கு மாமா கம் தோழன் விவேக். இந்தப் பணத்தை வைத்து பெரிய கல்வி நிலையங்களையும் மருத்துவமனையையும் கட்டி ஏழைகளுக்கு உதவ நினைக்கிறார் சிவாஜி. ஆனால், அதே ஊரில் இம்மாதிரி கல்வி நிலையங்களின் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் ஆதிசேஷன் (சுமன்) இதை விரும்பவில்லை. திட்டத்தைக் கைவிடும்படி சிவாஜியை வற்புறுத்துகிறார்.
பல தடைகளைத் தாண்டி சிவாஜியின் திட்டம் வளர்கிறது. இதற்கிடையில் ஆதிசேஷனின் முயற்சியால், அரசு சிவாஜியின் கட்டிடத்தை இடிக்க வருகிறது. இடத்தைக் கையகப்படுத்துகிறது. நீதிமன்றமும் கைவிடுகிறது. சிவாஜியின் எல்லாச் சொத்துகளும் பறிபோகின்றன. சிவாஜியின் கையில் ஒரு ரூபாயைக் கொடுத்து, பிச்சை எடுத்துப் பிழைத்துக்கொள்ளும்படி சொல்கிறானர் ஆதிசேஷன். அந்த ஒரு ரூபாயை வைத்து ஆதிசேஷனுக்கு போன் செய்து, அவன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு வருவதாகச் சொல்லி, அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றுகிறார் சிவாஜி. அதை வைத்து மிரட்டி, ஆதிசேஷனிடமிருந்து 100 கோடியைக் கறக்கிறார் சிவாஜி. அதேபோல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா கருப்புப் பண முதலைகளிடமிருந்து இதே பாணியில் பணம் கறந்து ஏழைகளுக்காக மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளை கட்டுகிறார் சிவாஜி. சட்டவிரோதமாக கறுப்புப் பண முதலைகளிடமிருந்து பணத்தைப் பறித்ததற்காக கைது செய்யப்படுகிறார். காவலில் இருக்கும்போதே அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. தான் இறந்ததாக வில்லன்களை நம்பவைத்துவிட்டு, மொட்டை ரஜினியாக வந்து எல்லோரையும் துவம்சம் செய்கிறார் சிவாஜி. இந்த மாதிரி கதையையெல்லாம் உலகம் முழுக்க தூக்கியெறிந்துவிட்டார்கள். இந்த குப்பைக் கதையை வைத்துக்கொண்டு வண்டியை ஓட்டியிருக்கிறார் ஷங்கர். ஷங்கரைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் பிரச்னைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பஸ்ஸில் கண்டெக்டர் திட்டுவது, சாலையில் எச்சில் துப்புவது, கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது, மருத்துவமனைகளில் பணம் வாங்குவது, தாசில்தார் லஞ்சம் வாங்குவது ஆகியவைதான். இவற்றையெல்லாம் ஒழித்துவிட்டால் நாடே சுபிட்சமாகிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.இந்தப் படமும் இந்த எளிய நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. கறுப்புப் பணத்தையெல்லாம் திரட்டி ஏழைகளுக்கு நன்மை செய்கிறாராம் நாயகன். கறுப்புப் பணம் கட்டாதவர்களில் பட்டியலை எடுத்துப் பார்த்தால், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கணிசமாக இருக்கும். இதுநாள் வரை ஏவிஎம் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்தால், அதை எவ்வளவு செலவில் தயாரித்தோம், எவ்வளவுக்கு விற்றோம், எவ்வளவு லாபம் என்பதை வெளிப்படையாக அறிவித்து வந்தது. முதல் முறையாக சிவாஜி படத்திற்காக அந்த பழக்கத்தைக் கைவிட்டிருக்கிருக்கிறது ஏவிஎம். காரணம் யார்? இந்த கறுப்புப் பண எதிர்ப்புப் போராளிதானே?

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். பணம் கொடுத்து படம் பார்க்க வருபவர்களை, மனமுதிர்ச்சியில்லாதவர்களாக இந்தக் கும்பல் நினைப்பதுதான் சிக்கல். எல்லாக் காட்சிகளிலும் அமெச்சூர்தனம். ரஜினி இருக்கிறார், சுஜாதா வசனம், ஏ.ஆர். ரஹ்மான் இசை – இது போக இந்த அடிமைகளுக்கு (நாம்தான்) என்ன வேண்டும் என்ற எகத்தாளமே படம் முழுக்க தென்படுகிறது.ஒரு காட்சியில், இந்தியாவிலிருக்கும் பணத்தை அமெரிக்காவுக்கு ஹவாலா மூலம் அனுப்ப வேண்டி வருகிறது. அதற்காக முஸ்லிம்களிடம் செல்கிறார்கள் நாயகனும் மாமாவும் (விவேக்). அதாவது முஸ்லிம்கள்தான் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவார்களாம். அதேபோல, கறுப்பாக இருக்கும் தன் மகள்களைப் பற்றி ஒரு தந்தையே கிண்டலடிக்கிறார். அவர்கள் கறுப்பாக இருப்பதால், அவர்கள் தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்பதற்காக, நாயகனை சுற்றிச்சுற்றி வருகிறார்கள். நிறவெறி இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது.நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தால் ஷங்கரை மன்னிக்க மாட்டீர்கள். நீங்கள் நல்ல சினிமா ரசிகராக இருந்தால், இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் மன்னிக்க மாட்டீர்கள்.

This entry was posted in சினிமா விமர்சனம். Bookmark the permalink.

18 Responses to சிவாஜி சூப்பர் படமா?

 1. siva - from Pondicherry says:

  Thozha

  I really wonder for yor Revivew of Sivaji- The Mottai Boss………

  Ignore Waste Rajini ( 100 Better Rode side Monkey show Action and best performance the Moneky but compare to Monkey Komalli Rajini very very Waste in the South Film)

  Like

 2. பேர் எதுக்கு? says:

  //அமெரிக்காவுக்கு ஹவாலா மூலம் அனுப்ப வேண்டி வருகிறது. அதற்காக முஸ்லிம்களிடம் செல்கிறார்கள் நாயகனும் மாமாவும் (விவேக்). அதாவது முஸ்லிம்கள்தான் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடுவார்களாம்//

  இதே மாதிரியான கேள்வியை இன்னொரு பதிவிலும் பார்த்தேன்.

  அட.இதில் தவறென்ன கண்டீர்கள் சார்? தமிழகத்தின் கீழக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது தெரியுமா? அங்குள்ள ‘தொழிலதிபர்களின்’ பிரதான தொழில் என்ன தெரியுமா? உண்டியல் எனப்படும் ஹவாலா தான்.

  அவ்வளவு ஏன்? சக வலைப்பதிவர்களில் ஒருவர் (முஸ்லீம் தான்) உண்டியல் செய்வது தவறே அல்ல என்று முன்பு எழுதி அதற்கு அத்தனை அவரது அல்லக்கைகளும் கை தட்டியிருந்தன. அதில் தவறு இல்லையென்றால், அப்புறம் ஏன்யா அதை சுட்டிக்காட்டி படம் எடுப்பது மட்டும் தவறு என்று சொல்கிறீர்கள்?

  விமரிசனம் என்ற பெயரில் கேணத்தனமாக எதையோ கிறுக்கி அதற்கும் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு கேணையன் பெயரில் பின்னூட்டம். முதுகறிப்பை பரஸ்பரம் சொறிந்து கொள்ளூங்கள்.

  Like

 3. அன்புள்ள பேர் எதுக்கு?,
  ஹவாலாவில் கீழக்கரையில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்காக இஸ்லாமியர்கள்தான் இந்த வேலையைச் செய்வார்கள் என்று பொதுமைப்படுத்துவதுதான் தவறு. அதுவும் ஊரைத் திருத்துவதுபோல வேஷம்போடும் ஷங்கர் இந்தக் காரியத்தைச் செய்யும்போதுதான் கடுப்பாக இருக்கிறது. பொதுமைப்படுத்தல்களின் மன்னன் அவர். அவருக்கு கிராமம் என்றால் பூங்கொடி, மாங்கொடி என்று பெயர் வைப்பார். தமிழ் பெண் என்றால் தமிழ்ச்செல்வி என்று பெயர் வைப்பார்.
  அதுசரி, சங்கராச்சாரியார் தான் கொலை செய்ததை வாக்குமூலமாக கொடுத்து அது செய்திச் சேனல்களில் ஒளிபரப்பானது. அதைப் பார்த்து அவரது அத்தனை அல்லக்கைகளும் அதிர்ந்துபோனார்கள். ஆனால், அதற்காக, சங்கராச்சாரியார் என்றாலே ரேப், கொலை செய்பவர் என்று படம் எடுத்தால் எப்படி இருக்கும் (அதுதான் உண்மை என்றால்கூட)? அப்படித்தான் இந்த விஷயமும்.
  விமர்சனம் கேணைத்தனமாக இருக்கிறதென்றால், அது எந்த இடத்தில் ஏன் கேணைத்தனமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்ட வேண்டும். நமக்குப் பிடிக்காத கருத்தைச் சொல்பர்கள் எல்லோரும் கேணயன்கள் ஆகமாட்டார்கள்.
  அப்புறம், இந்த பரஸ்பர முதுகுசொறிதல் என்பது வலையுலக ஆர்.எஸ்.எஸ். வெறியர்களின் வேலை (ஷங்கர் பாணி பொதுமைப்படுத்தல்!). எனக்கு அதற்கு நேரம் இல்லை பேர் எதுக்கு.

  Like

 4. இங்கே கமென்ட் போடுபவர்களுக்கு ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் முஸ்லிம் வெறுப்பை விமர்சித்ததுதான் பிரச்சினையாக இருக்கிறது. இதே நவநாஜி கோஷ்டி அந்நியன் என்ற படத்தில், குற்றம் செய்பவர்கள் எல்லோரும் பிராமணரல்லாதார் என்றும் பிராமணர்கள் எப்போதாவது தவறிப்போய் தப்பு செய்தாலும் மன்னிக்கத் தக்கவர்கள் என்றும் பாடம் நடத்தியது. அப்போது இந்த ஹிந்து சமூஹப் போராளிகள் அதைக் கண்டனம் செய்திருக்க மாட்டார்கள்.

  Like

 5. காந்தி கொன்ற வீர சாவர்க்கர் says:

  இவனுகளுக்கு இதே பொழப்பு..

  Like

 6. கட்டியக்காரன் says:

  யாருப்பா அது xoak?

  Like

 7. MR கட்டியக்காரன,
  Catch me @ http://www.xoak.tk

  Like

 8. rajini rasigar says:

  good review.
  one of my friends rightly said after watching sivaji “shankar rajini i vechi comedy geemadi onnum pannalaiye??”

  Like

 9. ரஜினியை வச்சு சந்திரமுகி மாதிரி காமெடிகூட பண்ணலாம். ஆனா, இந்த தடவை நம்ம காசையும் நேரத்தையும் வைச்சு காமெடி பண்ணீட்டாரு சங்கர்.

  Like

 10. Anonymous says:

  jko;

  Like

 11. கட்டியக்காரன் says:

  jko;ன்னா என்னாது?

  Like

 12. SR says:

  The film is neither a Rajini movie (where usually there are some guest appearnaces by “logic) nor a Shankar movie (where he at least succeeds partially in driving home the point). The truth of the matter is that Shankar lost way and did not know what to do with Rajini.

  Like

 13. अछ्छा Review & बुरा जवाबे.

  अनानि.

  Like

 14. ஏன் தேவநகரி லிபியில் பின்னூட்டம் இடுகிறீர்கள் அனானி? தேவநகரியில் அனானி என்றும் தமிழில் யுநாநி என்றும் உங்கள் பெயர் இருப்பது ஏன்? யுனானி மருத்துவத்தின் மீது மிகுந்த பிரியமா?

  Like

 15. கட்டியக்காரன், நீங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அநாநிக்கு multiple linguistic orientation disorder இருக்கலாம்.

  Like

 16. Navaneetha Nachimuthu says:

  Well said Kattiyakaran.
  Ungalukku vantha athe kobam enakkum vanthathu, naanum blog-il kotti theerka ninaithen.
  Your review is one of the best I have read. Keep up the good work.
  I agree with you totally. Great minds think alike 😀

  //Navani

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s