காவிய நாயகி த்ரிஷா

trisha1.jpgஅஜீத்தும் த்ரிஷாவும் நாயகன் – நாயகியாக நடித்த ஜி என்ற படத்தில் “டிங்டாங் கோவில் மணி” என்றொரு பாடல் இருக்கிறது.  தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த பாடல்களில் மிகச் சிறப்பான பாடல் இது என்றே தோன்றுகிறது. பாடல் வரிகள், இசை, அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம், அதில் வரும் பெண்களின் உடை, காட்சிகள், ஒளியமைப்பு, எடிட்டிங் எல்லாமே ஒரு ஒத்திசைவுடன் அமைந்திருக்கின்றன.  இருளையும் ஒளியையும் ஒளிப்பதிவாளர் இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கும் விதம் அசர வைக்கிறது. அதேபோல நீண்ட ஷாட் எதுவுமே பாடலில் கிடையாது. எல்லாம் ஒன்றிரண்டு வினாடிகளுக்குள் முடியக்கூடிய ஷாட்கள். இந்தக் காட்சிகளை அடுக்கியிருக்கும் விதம்தான் பாடலின் உச்சகட்ட உழைப்பு. அதிகம் கவனிக்கப்படாத இந்தப் பாடலை, ஒரு காவியப் பாடல் என்றே சொல்லலாம்.  அந்தப் பாடலை யாரோ புண்ணியவான் தன் வலைபதிவில் போட்டிருக்கிறார். அதன் யுஆர்எல் இதோ: http://tamilvcdsongs.blogspot.com/search/label/Ji  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: சொல்லாத காதல் சொல்ல சொல்லாகி வந்தேன் என்ற இந்தப் பாடலில் வரும் ஒரு வரியையே இந்தப் பதிவிற்கு தலைப்பாக வைக்கலாம் என முதலில் நினைத்திருந்தேன். ஆனால், த்ரிஷாவின் பெயர் தலைப்பில் வந்தால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என அராய்ச்சி முடிவுகள் காட்டுவதால், காவிய நாயகி த்ரிஷா என்றே பெயர் சூட்டிவிட்டேன்.

This entry was posted in த்ரிஷா, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to காவிய நாயகி த்ரிஷா

  1. somebody says:

    unga write-up i vida athoda title kaaranam than pullarikka vaikuthu.

    Like

  2. Xoak says:

    Are you a Tri’s fan?

    Like

  3. அன்புள்ள சம்படி,
    த்ரிஷா சம்பந்தப்பட்ட எல்லாமே புல்லரிக்கத்தான் வைக்கும்.

    Like

  4. Ravi Raja says:

    ஐயா கட்டியக்காரன், ஜி படத்தில் வரும் பாடலை அந்த வலைப்பதிவிலிட்ட “புண்ணியவான்” நான் தானுங்கோ, எனது வலைப்பதிவில் (http://tamilvcdsongs.blogspot.com) இட்டுள்ள ஹிட் கவுண்டரை எதேச்சையாக பார்த்த போது தான் தங்கள் வலைப்பதிவிலிருந்து 2 பேர் எனது வலைப்பதிவிற்கு வந்துள்ளதை அறிந்தேன். இங்கு வந்து பார்த்தால்… எனக்கு புண்ணியவான் என்று “புகழாரம்?” வேறு. நன்றிகள் உரித்தாகட்டும்.

    நன்றி
    மீண்டும் வருவேன்

    Like

Leave a comment