ஒரு அடியாளின் வாக்குமூலம்

perkins_lecture_018.jpgஜான் பெர்கின்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் Confessions of an Economic Hit man என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

அந்த நூல் இப்போது தமிழில் ஓரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. கோவையிலிருக்கும் விடியல் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.

அமெரிக்க அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் (உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய மூன்றும் எப்படி கூட்டுக்களவாணிகளாகச் செயல்படுகின்றன என்பதுதான் புத்தகத்தின் சாரம்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் வளத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்ட இந்த மூன்றும் எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை விலாவாரியாக விவரிக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். இவரும் ஒரு பன்னாட்டு நிதியுதவி நிறுவனத்தில் பணியாற்றியவர்.

சதிகாரர் சங்கத்தின் உள்ளிருந்தவர் என்பதால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் எல்லா தகவல்களும் நம்பகத் தன்மை வாய்ந்தவை. இவர் இந்த நூலை எழுதப் போகிறார் என்றவுடனேயே கொலை மிரட்டல்கள் வந்தன. ஏகப்பட்ட பணம் தருவதாக ஆசை காட்டப்பட்டது. இதையெல்லாம் செய்தது சிஐஏ. அந்த வகையில் சிஐஏவே பார்த்து மிரண்ட புத்தகம் இது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. புதிதாக இம்மாதிரி டாபிக்களை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு தங்கச் சுரங்கம். பொருளாதாரப் புலிகளுக்கு மனசாட்சி இருந்தால் இந்தப் புத்தகம் அவர்கள் கண்களைத் திறக்கும். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருப்பவர்கள் கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம்.

Advertisements
This entry was posted in புஸ்தம். Bookmark the permalink.

7 Responses to ஒரு அடியாளின் வாக்குமூலம்

 1. இந்தப் புத்தகம் என் வாசிப்புப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துவிட்டது. இதை எல்லா நாடுகளிலும் பாட புத்தகமாக்க வேண்டும்.

  Like

 2. கட்டியக்காரன் says:

  அநியாயத்தைப் பாருங்க, உங்களைத் தவிர யாரும் பின்னூட்டமே போடல. எல்லாம் அமெரிக்க சதி.

  Like

 3. நீங்க இன்னும் கொஞ்சம் பெரிசா எழுதணும்!

  Like

 4. Xoak says:

  I want more நம்ம பயலுக jokes! 🙂

  Like

 5. உங்கள் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் xoak.

  Like

 6. Saamaran says:

  Naanum Antha Book Padithen. Americavin Araajaka
  mugathin Korap pakkangalil Sila innoolin Moolam
  Velichathukku Vanthullana. Ippothaikku Indiavil
  Ithai Udanadiyaga Vaangi Padikka Vendiyavargal
  World Bank-in Coolie-kalan Mr.Manmohan, Mrs. Sonia & Kaakithapuli Pa.Chidamparam Chettiar

  Like

 7. Saamaran says:

  சாமரனின் சாட்டையடி!
  இந்த புத்தகம் ஒரு வரலாற்று ஆவணம். அமெரிக்க வல்லாதிக்கத்தின் கோர முகங்களின் சில பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் ஜான் பெர்கின்ஸ். இந்த புத்தகத்தை இந்தியாவில் அவசியமாக அவசரமாக இரண்டு பேர் படிக்க வேண்டும், அவர்களில் ஒருவர் பொருளாதார புலி, அமெரிக்காவுக்கு அடிமை சாசனம் எளுதிக்கொடுக்கத் துடிக்கும் திருவாளர் மன்மோகன் சிங் இன்னொருவர் உலக வங்கியின் கூலி திருவாளர் சிதம்பரம் செட்டியார். இதை படித்த பின்பாவது
  அமெரிக்காவுக்கு நம் தேசத்தை விலை பேசும் கேவலத்தை கை விடுவார்களா?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s