பரத கண்டம் என்ற இந்த ஜம்புத் தீபத்திலே முன்பொரு காலத்திலே அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரையின் வடபகுதியில் வைகை நதிக்கு அருகில் சேதுபதி மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே ராமச்சந்திரன் என்றொரு மாணாக்கன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். ஆனால், அவனை யாரும் ராமச்சந்திரன் என்று அழைத்து யாம் கண்டதில்லை. எல்லோரும் லெட்டுப் பிள்ளை என்றே அன்புடன் அழைத்து வந்தனர். அதன் காரணம் யாது என்று பல்வேறு தரப்பினரிடமும் வினவியபோது, அதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் அங்கிருந்த பிள்ளையாரையே கேட்டேன். அவர் அந்தக் கதையை எனக்குக் கூறலாகினார்.
கதை வருமாறு: ராமச்சந்திரன் நீண்ட காலமாக ரீஃபிள் பேனாவை பயன்படுத்திவந்தான். வகுப்பில் பெரிதாக அவன் ஏதும் எழுதுவதில்லை என்பதால், அந்தப் பேனாவின் ரீஃபிளில் மை தீரவில்லை. கிட்டத்தட்ட ஒன்றரையாண்டுகள் இப்படியே கழிந்தன. ரீஃபிளைத் தவிர பேனாவின் பிற பாகங்கள் எல்லாம் உடைந்து சிதறிவிட்டன. வெறும் ரீஃபிளைப் பிடித்தே எழுதிவந்தான் ராமச்சந்திரன். காலம் இப்படிக் கழிகையில் அந்த கெட்ட நாளும் வந்தது. ஆம். ரீஃபிள் தீர்ந்துவிட்டது. ராமச்சந்திரனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கோவென்று கதறியழலானான். பள்ளி மாணாக்கர்கள் அந்த நாட்களில் ரீஃபிளை “லெட்டு“ என்று அழைத்து வந்தனர். அக்காரணத்தால் “என் லெட்டுப் பிள்ளை போச்சே“ என்று குமுறிக்குமுறி அழுதான் ராமச்சந்திரன். இதைக் கண்ணுற்ற பலரும் துணுக்குற்றனர். ஒரு லெட்டு தீர்ந்தததற்கா இவ்வளவு அழுகை என்று ஆச்சரியத்துடன் வினவினர். அப்போது ராமச்சந்திரன் சொல்லானான்: அது வெறும் லெட்டு அல்ல. என் பிள்ளையைப் போல அல்லவா வைத்திருந்தேன். அது இன்று தீர்ந்துவிட்டதே.. அய்யகோ.. நான் என் செய்வேன்… என்று கேட்போர் மனம் கலங்கும் வண்ணம் மீண்டும் கதறலானான். ஆகையால் அங்கு கூடியிருந்த எல்லோரும் சேர்ந்து அவனுக்கு தேறுதல் சொல்லி, அந்த லெட்டை நல்லடக்கம் செய்யும் யோசனையைக் கூறினர். ராமச்சந்திரனும் அவ்வாறே அரசமரத்தடியில் ஒரு குழியைத் தோண்டி லெட்டைப் புதைத்தான். மேலே மண்ணால் ஆன ஒரு சமாதியையும் எழுப்பினான். லெட்டை பிள்ளை என்று கருதி, உயிர் வளர்த்ததனால் அன்றைய தினத்திலிருந்து அவன் பெயர் லெட்டுப் பிள்ளை என்று வழங்கலாயிற்று.
இந்தக் கதையைச் சொல்லி முடித்த பிள்ளையார், லெட்டுப் பிள்ளைக்கு டிஸ்கோ சாந்தி என்றொரு பெயரும் வழக்கில் உண்டு. அது ஏன் என்று கண்டறியாவிட்டால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறிவிடும் என்று கூறிவிட்டு சயனத்தில் ஆழ்ந்தார்.
அந்தக் கதை…..
டெட்லி! தொடர்ச்சியைத் தாமதமின்றிப் போஸ்ட் செய்யவும்.
LikeLike
ஆகா, அற்புதமாக இருக்கிறது. ஹி,ஹி!!! இவ்வளவு நக்கல் நகைச்சுவை கதையை இணையத்தில் காண்பது அபூர்வம். மேலே, எதிர்பார்க்கிறேன்.
நன்றி
LikeLike
சாத்தான், ஜயராமன் இருவரது பாராட்டுகளுக்கும் நன்றி. ஆனால், உடனடியாக இதன் தொடர்ச்சியை வெளியிட முடியாது. அடுத்ததாக வரவிருப்பது மத்திய இணையமைச்சர் ஆர்.வேலுவின் அடேங்கப்பா பேட்டி!
LikeLike
Pingback: டிஸ்கோ சாந்தி என்ற லெ.பி. சரித்திரம் தொடர்ச்சி… « வடக்கு மாசி வீதி
Pingback: டிஸ்கோ சாந்தி என்கிற லெட்டுப்பிள்ளை சரித்திரம். « கில்லி - Gilli
Boss, kalakkuringa. Konjam oru mail anuppungaln..
nathan_thilse@yahoo.com
LikeLike