பிள்ளையார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நான், டிஸ்கோ சாந்தி பெயருக்கான காரணம் தேடி பள்ளி முழுவதும் அலைந்தேன். எனக்குப் பதில் சொல்லித் தேற்றுவாரில்லை. முயற்சிகளில் தோல்வியுற்று ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, லெட்டுப் பிள்ளையே என்னை நோக்கி வந்தான். டிஸ்கோ சாந்தி என்று பெயர் வந்த காரணத்தைக் கண்ணீரோடு கூறலானான்.
பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, விளையாட்டு வகுப்புகளில் மாணவர்கள் யாரும் சட்டை அணிந்து விளையாடக்கூடாது. பனியன் அணிந்துதான் விளையாட வேண்டும் என எமது தலைமை ஆசிரியர் பிரகடனம் செய்தார். இது பள்ளியின் வரலாற்றுப் பதிவேடுகளில் ‘பனியன் பிரகடனம்‘ என்று புகழ்ச்சியோடு குறிப்பிடப்படுகிறது.
திடீரென பனியன் வாங்க வசதியில்லாத காரணத்தால் லெட்டுப் பிள்ளை அடுத்த நாள் விளையாட்டு வகுப்புக்கு தன் தந்தையின் பனியனை அணிந்து வந்தான். லெட்டுப் பிள்ளை மிகக் குட்டையான ஆள் என்பதால் அவன் தந்தையின் பனியன் மிகப் பெரியதாக இருந்தது. கழுத்தை நுழைக்கும் இடம் வயிறுவரை வந்தது. அப்போது அவனுடன் படித்த டிஸ்கோ சாந்தி ரசிகனொருவன், டிஸ்கோ சாந்தியின் ஆடைகளைப் போலவே இவனது பனியனிலும் கழுத்து மிகக் கீழிறங்கி இருப்பதால், இவனுக்கும் டிஸ்கோ சாந்தி என்று பெயர் சூட்டிவிடலாம் என்று சொன்னான். இதைப் பிற மாணவர்களும் மகிழ்ச்சியுடன் அமோதித்தார்கள். இப்படியாக தனக்கு டிஸ்கோ சாந்தி என்ற பெயர் அமைந்தது என்று சொல்லி முடித்தான் லெட்டுப் பிள்ளை.
எனக்கு அந்தப் பெயர்க் காரணம் தெரிந்ததில் பிள்ளையாருக்கு ஏக மகிழ்ச்சி. தன் தலைக்குப் பின்னால் சீரியல் லைட் சுத்த, என்னைப் பார்த்து புன்னகைத்தார் பிள்ளையார்.
காத்திருந்ததற்கு நீங்கள் ஏமாற்றவில்லை.
LikeLike
நன்றி!
LikeLike
சிங்கம்!!! யாரு சிங்கம் நீ? புகுந்து விளையாடறீங்களே……
கொஞ்சம் இங்கேயும் வந்து ஐக்கியம் ஆகுங்க!
http://marudhai.blogspot.com
LikeLike
Anna, Adutha kadhai eppo? Kathirukkirom..
LikeLike
அன்புள்ள செந்தில் உங்களுடைய எல்லா பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுடைய புகழுரைகளுக்குத் தகுதியாக்கிக்கொள்ள என்றும் பாடுபடுவேன். உங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
LikeLike
அப்புறம் என்ன சத்தத்தையே காணோம்? அடிக்கிற அடியில் கீபோர்டு உடைந்து சிதற வேண்டாமா?
LikeLike
Nice 🙂
LikeLike