மதுரை சோழ நாட்டின் தலைநகரம்!

 29.07.2008ந் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னைப் பதிப்புடன் வழங்கப்படும் சென்னை டைம்ஸில் ஒரு சிறு குறிப்பு. மதுரையில் எடுக்கப்படும் படங்களெல்லாம் வெற்றிபெறுகின்றன என்பதுதான் அந்தக் குறிப்பின் சாரம். மதுரையை சோழப் பேரரசின் தலைநகரம் என்கிறது அந்தக் குறிப்பு! மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரமா, சோழ நாட்டின் தலைநகரமா என்ற சந்தேகம் வந்தால் யாரிடமாவது கேட்க வேண்டியதுதானே? அது சரி, ஆங்கிலப் பத்திரிகையாளராக இருந்துகொண்டு இதையெல்லாம் கேட்க முடியுமா?

தலைநகரத்தை மாற்ற வேண்டியதுதான்.

********** 

27.07.2008 தேதியிட்ட டெக்கான் க்ரானிக்கிளின் சென்னைக் க்ரானிக்கிளில் முதல் பக்கத்தில் தமிழ் சித்திரக் கதைகளைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

Kitsch Tamil Comics come alive on the net என்று அதற்கு ஒரு அற்புதமான தலைப்பு வேறு. பல தமிழ் காமிக்ஸ்கள் இணையத்தில் கிடைக்கின்றன என்று ஆரம்பித்து, அதை உருவாக்கும் முறை, விற்பனை என்று சொதப்பலான கட்டுரை அது. கட்டுரையை விடுங்கள், இதன் தலைப்புதான் மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. Kitsch என்றால் something of tawdry design, appearance, or content created to appeal to popular or undiscriminating taste என்கிறது டிக்ஷ்னரி டாட் காம். உண்மையில் தமிழ் காமிக்ஸ் பதிப்புகள் அவ்வளவு கேவலமாகவா இருக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் Tex Willer, Lucky Luke போன்ற உலகப் புகழ் வாய்ந்த ஐரோப்பிய காமிக்ஸ்கள் இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும்தான் கிடைக்கின்றன. அதுவும் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பில். அமெரிக்கா முழுக்க தேடிப் பார்த்தாலும் டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் ஆங்கிலத்தில் கிடைக்காது. ஆனால், தமிழில் இங்கே கிடைக்கிறது. அது Kitsch Tamil Comics காமிக்ஸாம். கபி குஷி கபி கம் என்றொரு இந்திப் படம் வந்தது. அந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்லும் கோஷ்டியைச் சேர்ந்தவர் எழுதியிருப்பார் போலிருக்கிறது.

This entry was posted in பேப்பர்காரய்ங்க அட். Bookmark the permalink.

5 Responses to மதுரை சோழ நாட்டின் தலைநகரம்!

 1. ஆங்கிலப் பத்திரிகையாளர்களுக்கு தமிழ் காமிக்ஸ் பற்றி ஒரு ம-வும் தெரியாதது மட்டுமில்லை, எழுதும் விஷயத்தைப் பற்றித் தொழில் ரீதியான ஆர்வம் கூட இல்லாததால்தான் இந்த மாதிரி கேலிக்கூத்துகள் நடக்கின்றன. இவர்களெல்லாம் ஆர்ச்சி, ஃபான்டம், சாச்சா சௌதுரி தவிர வேறு எதையும் படித்திருக்க வாய்ப்பில்லை.

  டைம்ஸ் ஆஃப் இந்தியா விஷயம், எனக்குத் தெரிந்த ஒரு தமிழக ஆங்கில பத்திரிகையாளர் கேரளாவில் இருக்கும் பெரியாறு அணை பெரியார் பெயரைத் தாங்கியிருக்கிறது என்று எழுதியதைத்தான் நினைவுபடுத்துகிறது.

  Like

 2. கட்டியக்காரன் says:

  இதுவாவது பரவாயில்லை, எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகையாளர் குன்னூர் கர்நாடகத்தில் இருக்கிறது என்று திறம்பட, கம்பீரமாக, உறுதிதொனிக்கும் பாணியில் எழுதியிருந்தார். படித்தால் உங்களுக்கே சந்தேகம் வந்துவிடும்.

  Like

 3. King Viswa says:

  Hi,
  i agree with the content. Even i have covered this in my blog (http://tamilcomicsulagam.blogspot.com/2008/09/article-about-muthu-fan-in-chennai-news.html)

  I didn’t cover the topic controversy as the content itself was full of factual errors.

  Shame on these So called Journalists.

  Like

 4. நன்றி விஸ்வா. எல்லாம் காமிக்ஸ்தானே என்ற இளக்காரம். படங்கள் நிறைய இருப்பதாலேயே அறிவுக்கு எதிரானது என்று நினைத்துவிடுகிறார்கள்.

  Like

 5. ayiraramu says:

  above news is true.madurai cullture accepted by all
  tamilan

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s