தமிழ் இயக்குனர்களின் தெனாவட்டு

நான் அப்போதுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். என்னுடன் வேலை பார்த்த பெண் ஒருத்தி தன்னுடைய செல்போன் எண்ணைக் கொடுத்தாள். அடிக்கடி போன் செய் என்றாள். முதல் வாரம். வெள்ளிக் கிழமை அலுவலகத்தைவிட்டுக் கிளம்பினேன். கிளம்பிய பிறகுதான் நாளைக்கு அலுவலகம் இருக்கிறதா என்று திடீரென எனக்கு ஒரு சந்தேகம். அலுவலகத்திற்கே போன் செய்து கேட்டால் நன்றாக இருக்காது என்று இந்தப் பெண்ணுக்குப் போன் செய்தேன். போனை எடுத்தது ஒரு ஆண். என்ன வேண்டும் என்றார் அவர். நான் அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்றேன். எதற்கு என்றார். விஷயத்தைச் சொன்னேன். நாளைக்கு அலுவலகம் லீவு என்றார் அவர். நான் போனை வைத்துவிட்டேன். பிறகு மறுபடியும் போன் செய்தார். எதற்கு போன் செய்தீர்கள் என்று கேட்டார். அதுதான் சொல்லிவிட்டேனே என்றேன். போனை வைத்துவிட்டார். திங்கட்கிழமை அந்தப் பெண் வந்து புளியோதரைக்கு (அடையாளம் தெரியாமல் இருக்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) போன் செய்தாயா என்று கேட்டாள். உனக்குத்தான் போன் செய்தேன். அவர் எடுத்தார் என்றேன். அவர் பெரிய இயக்குனர். விரைவில் அவர் இயக்கும் படம் வெளிவரவிருக்கிறது என்றாள் அவள். அதற்காக உன் போனை அவர் எடுக்க வேண்டுமா என்று கேட்டேன். இது சம்பவம் நம்பர் 1.

சம்பவம் நண்பர் 2. என்னுடைய சாட் தோழி ஒருத்திக்கு ஒரு இயக்குனர் நண்பர். அவர் தன் முதல் படத்தைத் துவங்கிய நேரத்தில், அவரைப் பற்றி பத்திரிகைகளில் செய்தி வரவழைக்க முடியுமா என்றெல்லாம் இவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பிறகு அவர் படத்தை எடுத்து, வெளியிட்டுவிட்டார். பெரும் பரபரப்பைக் கிளப்பிய போலி தமிழ்ப் பற்றுப் படம் அது. ஊத்திக்கொண்டுவிட்டது. விஷயம் அதுவல்ல. ஒரு நாள் சாட்டில் அந்தப் பெண் வந்தாள். நான் ஹாய் என்றேன். பதில் சொன்னது இந்த இயக்குனர். அவள் தன் ஐடியையும் பாஸ்வேர்டையும் இந்தத் தாடிக்காரரிடம் கொடுத்திருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது.

மூன்றாவதாக நான் இங்கே குறிப்பிடும் பெண் எனக்கு நெருக்கமான தோழி. அந்த இயக்குனரும் நெருங்கிய நண்பர். அந்தப் பெண்ணின் மின்னஞ்சலை அந்த இயக்குனர்தான் பார்த்து, பதிலளிக்கிறார் என்று தெரிய வந்ததது.
இதில் நான் குறிப்பிட்ட மூன்று பெண்களுமே படித்தவர்கள். அதில் ஒருவருக்கு திருமணமும் ஆகிவிட்டது. எப்படி இவர்கள் தங்களது பிரைவசியை ஒரு ஆணிடம் அடகு வைக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இவர்கள் இயக்குனர் என்பதுதான் காரணமா? அதிலும் போனில் பேசும்போதும், சாட்டில் பேசும்போதும் இவர்களது கம்பீரம் இருக்கிறதே, அது தமிழில் நீங்கள் எம்.ஏ. படித்தாலும் கிடைக்காது.

This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

6 Responses to தமிழ் இயக்குனர்களின் தெனாவட்டு

 1. சுபாஷ் says:

  🙂
  ஒரு வேளை பெண்களின் அந்தரங்க விடயங்களில் ஆராய்ச்சி செய்து படம் பண்ணப்போறாங்களோ என்னமோ?
  ( விசில் படத்துல விவேக் பண்ணமாதிரி!!!)

  Like

 2. சுபாஷ் says:

  திருமணமுடித்த பெண்களும் இவ்வாறு பார்ஸ்வேர்ட் குடுக்கறது சுத்த லுசுத்தனமானது

  Like

 3. கட்டியக்காரன் says:

  இவர்கள் எடுக்கும் படங்களைப் பார்த்தால், இவர்களால் தங்கள் சொந்தரங்க விஷயத்தைக்கூட ஆராய முடியாது என்பது தெரியும். விஷயம் வேறொன்றுமில்லை, தன் கஸ்டடியில் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள், தான் சொன்னபடி கேட்பார்கள் என்று கெத்தைக் காட்டிக்கொள்வதுதான் இவர்கள் நோக்கம் என்று படுகிறது. இந்த லூஸுப் பெண்கள் கேட்காமலேயே அந்தரங்கத்தைக் கொட்டத் தயாராக இருக்கும்போது, இவர்கள் ஏன் இவ்வளவு சிரமப்படப் போகிறார்கள். இரண்டாவதாக நீங்கள் குறிப்பிட்டதில் எனக்கு உடன்பாடில்லை. திருமணமாகாவிட்டாலும் பாஸ்வேர்டைக் கொடுப்பது பேத்தல்.

  Like

 4. சாத்தான் says:

  ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்!

  Like

 5. கட்டியக்காரன் says:

  அந்தத் தாடிக்கார இயக்குனரைத் திட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன்…

  Like

 6. சாத்தான் says:

  தாடிக்காரர் ஆபத்தான ஆசாமிதான். எனக்கும் மின்னஞ்சல் பாஸ்வேர்டை சொன்ன தோழி ஒருவர் உண்டு. ஆனால் நீங்கள் சொல்லும் உதாரணங்கள் பயங்கரம். என் பாஸ்வேர்டை நான் எனது நண்பர்கள், உறவினர்கள் யாருக்கும் கொடுத்ததில்லை.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s