நொண்டி கடை

தற்போது வடக்கு மாசி வீதியில் வசிக்கும் பலருக்கு இப்படி ஒரு கடை இருந்ததே தெரியாது. ஆனால் 80களின் துவக்கத்தில் அப்படி ஒரு கடை இருந்தது. தற்போது கோபால் டாக்டர் அலுவலகத்திற்கு எதிரே அந்த இடம் இருக்கிறது. அந்தக் கடையின் உரிமையாளர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால், அந்தக் கடையை நொண்டி கடை என்றுதான் எல்லோரும் அழைத்து வந்தார்கள். ஃப்ளக்ஸ் போர்டுகள் இல்லாத காலம் அது. அதனால், அந்தப் பகுதியில் இருந்தவர்கள் வைக்கும் பெயர்களே நிலைத்துவிடும்.

அது ஒரு மளிகைக் கடை. அந்தக் கடைக் காரரின் முகம் மிக மங்கலாக நினைவுக்கு வருகிறது. அந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால், மற்ற கடைகளில் இல்லாத மிட்டாய்கள் அந்தக் கடையில் கிடைக்கும் என்பதுதான். தரை மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் அந்தக் கடை அமைந்திருந்தது. இரண்டு படிகளை ஏறித்தான் செல்ல வேண்டும்.

இந்தக் கடை எனக்கு நினைவில் இருப்பதற்கு மற்றும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலேயே ஒரு காசு, இரண்டு காசு ஆகியவை செல்லாமல் ஆகிவிட்டன. இந்த நொண்டி கடையில் மட்டும் அவை செலாவணி ஆகிக் கொண்டிருந்தன. அவர் அந்தக் கடையை இழுத்து மூடும் வரை அந்தக் காசுகளை வாங்கிக் கொண்டு மிட்டாய்களை சிறுவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அவர் அந்தக் கடையைக் காலி செய்த பிறகு, அந்த இடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டினார்கள். அங்கே ஒரு பேட்டரி கடை வந்தது. இப்போது ஒரு லாரி சர்வீஸின் பார்ஸல் அலுவலகம் இருக்கிறது. அந்த இடத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம், ஒரு பைசா இனிமேல் செல்லாதா என்று கேட்கத் தோன்றும். அந்தக் கடையின் வாசலில் நின்று கொண்டிருக்கும் லாரியின் ஹாரன், அந்தக் காசுகள் இனிமேல் செல்லாது என்று சொல்வதைப் போல இருக்கும். ஆமாம், அந்த உரிமையாளர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?

This entry was posted in நம்ம பயலுக. Bookmark the permalink.

4 Responses to நொண்டி கடை

  1. எவ்வளவு சோகமான பதிவு! சின்ன வயசில் மிட்டாய், மாங்காய், இலந்தைப் பழம் வாங்கியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தின்கிற ஐட்டங்களெல்லாம் பெரும்பாலும் பேக்கேஜ் செய்யப்பட்டுத்தான் கிடைக்கின்றன. நான் ஜவ்வு மிட்டாய்க்காரனைக் கடைசியாகப் பார்த்து 25 வருடங்கள் இருக்கும். நீங்கள் சொல்லும் கடைக்காரர் இப்போது விக்கிரவாண்டி பஸ் ஸ்டாண்டில் கடை போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    Like

  2. கட்டியக்காரன் says:

    இந்தப் பதிவு இப்படி சோகமாக இருக்க வேண்டும் என்பது என் நோக்கமில்லை. ஆனால், அப்படி அமைந்துவிட்டது. அவர் விக்ரவாண்டி பஸ் ஸ்டாண்டில் கடை போட்டிருந்தால்கூட பரவாயில்லை. ஹோட்டல் ஹில்டாவில் வேலை பார்த்தால்? நினைக்கவே பயமாயிருக்கிறது.

    Like

  3. Rajesh says:

    Dear Kattiyakaran,

    I used to read all your posting here, and best reader for your blog.

    I was also lived at North Masi st, in 75 to 1998. almost 25 yrs. I lived in Thalla muthu pillai theru, and Irullappa Konar Santhu, next behind to Anna Kadai. Antha Anna Kadai, Veththala Kadai, Venmani Coffee bar, Kittangi kadai, ellam still in front of my us. Vekil puthu theruvil cricket vilaidiyathum nenaivil ullathu.

    You must be known person to me since u also lived in the same timings in north masi st.

    Vadaku masi veethil iruthu 90 rukalin eruthil pulam peyarnthu ponavarkal nanum oruvan. And after settled in Ayyar Bungalow, am currently living in US for job.

    I would like to contact in mail or phone, please let me know your name and contact details.

    I can find out very easily and you can find out me very easily.

    Our gang used to put “top” at battery kadai opposite to harvey school. “top adippom”

    do you know any one in that group?. it is really pain harvey school is also closed there. I am very happy Mr.Anna durai has shop there.

    I may go to madurai after 6months or 1 year, first thing, I wanted to go to Anna kadai and wanted to one photo of the shop.

    I also like Anna and that small shop like everyone lived in vadakku masi veethi.

    Please mail me back with your identification at rajtredent@gmail.com.

    awaiting for your reply.

    Rajesh.

    Like

  4. Rajesh says:

    Please reply ASAP.

    Rajesh.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s