காலை பத்தரை மணி இருக்கும். தர்மாம்பாள் டீச்சர் கிருஷ்ணனைக் கூப்பிட்டு, போய் மீனாட்சி காப்பி கடையில் டீ வாங்கிக் கொண்டுவரும்படி சொன்னார். துணைக்கு வரும்படி கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டான். அந்தத் தருணங்களில் அவன் கடைக் கண் பார்வை தன் மீது படாதா என்று பல மாணவர்கள் ஏங்குவார்கள். கடைக்குச் சென்றுவரும் அந்தப் பத்து – பதினைந்து மணி நிமிட சுந்திரத்திற்காகத்தான் அந்த ஏக்கம். கிருஷ்ணன் விரும்பியவர்கள், தன்னிடம் நல்லபடி நடந்துகொள்பவர்களை கடைக்குக் கூட்டிச் செல்வான். என்னை அடிக்கடி அழைத்துச் செல்கிறான் என்பதில் எனக்குப் பெருமிதத்தில் நெஞ்சம் விம்மியது. வழக்கமாக டீ வாங்கும் டம்ளரை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனோம். டீயை வாங்கி வந்து கொடுத்தான் கிருஷ்ணன். டம்ளர் மாறியிருந்தது.“என்னடா இது டம்ளர் மாறியிருக்கு“ என்றார் டீச்சர். சற்று நேரம் விழித்துவிட்டு, “ஆமாம் டீச்சர், ஒரே கூட்டம்.. அதுல மாறியிருக்கும். இன்னொரு ஆளும் இதே மாதிரி டம்ளரில் டீ வாங்க வந்தான். அவன் டம்ளராயிருக்கும்“ என்று பதிலுறுத்தான். இந்த டீயைக் குடிக்கலாமா என்று கொஞ்ச நேரம் யோசித்த டீச்சர், “சரீ… அந்த ஆளு நல்லாத்தானே இருந்தான்.. தோல் வியாதியெல்லாம் இல்லையே?” என்று கேட்டபடி டம்ளரை வாயருகில் எடுத்துக்கொண்டுபோனார் டீச்சர். “இல்ல டீச்சர்… அவன் குஷ்டரோகி மாதிரி இருந்தான்.. ஒரே புண்ணு” என்றான் கிருஷ்ணன். டீச்சர் அதற்குப் பிறகு யாரையும் டீ வாங்க அனுப்புவதில்லை. உண்மையில் அன்றைய தினம் டீக் கடையில் அம்மாதிரி யாரும் இல்லை. தினமும் கிடைக்கும் அந்த பத்து நிமிட சுதந்திரத்தை கிருஷ்ணன் ஏன் பொங்கவைத்தான் என்பது இன்னமும் புரியாத புதிர்தான். டீச்சருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி தர அவன் நினைத்திருக்கலாம்.
படிப்பில் படுமக்கான அவன் பத்தாம் வகுப்பை அடையவே பல வருடங்களானது. அவன் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு சோதனை. விஜயகாந்திற்குக் கல்யாணம். இப்போது தே.மு.தி.க. தலைவராக இருக்கிறாரே.. அவரேதான். கல்யாணத்திற்குப் போவதா, பரிட்சை எழுதுவதா என்று பலத்த ஆலோசனைகளில் ஈடுபட்டான் கிருஷ்ணன். கடைசியில் கல்யாணத்திற்குச் செல்வதென்றே முடிவெடுத்தான். அதன் பிறகு பல வருடங்கள் ஆள் எங்கே போனான் என்றே தெரியவில்லை. இப்போது வடக்கு மாசி வீதியில் பெரிய ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கிறான்.
Like this:
Like Loading...
Related
கிருஷ்ணணுக்கு படிப்பு ஏறவில்லையென்றாலும் ஆட்கள் தொடர்பில் இருப்பவன்! 🙂
LikeLike
ராஜேஷ் நான் யாரைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் போலிருக்கிறது. கிருஷ்ணன் உங்கள் செட் என்றே நினைக்கிறேன்.
LikeLike
கிருஷ்ணண் என் செட்டு மட்டுமல்ல!, வடக்கு மாசி வீதியில் பலருக்கும் செட்டு கட்டியக்காரரே!..:)..காரணம், கிருஷ்ணண் அஞ்சாப்புல அஞ்சு முறை கோட் அடித்து அஸ்திவராத்தை ஆழமா போட்டவன்!..சம்சாரம் அது மின்சாரம் படத்துல வர்ர மாதிரி, படித்தான், படிக்கிறான், படித்து கொண்டே யிருந்தான்!..ஆனா பய அப்படி, இப்படி னு ஒரு வழியா முன்னேறிட்டான்!..நல்ல பய!..சுமோ த்தான் சுத்துறத கேள்வி!..
LikeLike