நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. சரத் ரெட்டி விவகாரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. அதாவது மனிதர் திங்கள்கிழமை அலுவலகத்திற்கே வீல் சேரில்தான் வந்தாராம். சரி, இந்த விவகாரத்தை கலைஞர் டிவியின் உரிமையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களாம்? நிறைய நடந்திருக்கிறது. சரத் ரெட்டியைத் தாக்குவதற்கு முன்பே கலைஞர் டிவி தரப்பினரிடம் செய்து சரத்தைப் பற்றி புகார் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, சன் டிவி தங்கள் நிறுவனத்திற்காக வாங்க நினைத்து நிராகரித்த கருவிகளை, கலைஞர் டிவிக்காக வாங்கிக்கொடுத்து ஏகப்பட்ட பணத்தை சரத்ரெட்டி அடித்துவிட்டார் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால், கலைஞர் டிவி தரப்பும் சரத்திடம் கோபமாக இருக்கிறதாம். இந்நிலையில் உள்ளே புகுந்த சகோதரர்கள் எவ்வளவு பணம் அடித்தாய், எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்டு தாக்கினார்களாம். அடியாட்களெல்லாம் கிடையாது. அவர்களே.
கடைசியாக வந்த நம்ப முடியாத தகவல்: கலைஞர் டிவியையே மூடிவிடும் திட்டம் இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.
பயங்கரம்! கலைஞர் டிவிக்கு விளம்பரங்கள் மூலமே நல்ல வருமானம் இருக்குமே? நிறைய புதிய தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடவும் கணிசமாக செலவு செய்திருப்பார்களே? அதை மூடுவதாவது!
LikeLike