
தீவிர கொசு
அலுவலகம் விட்டுவந்த பின்
நேரத்தில்
என்ன செய்யலாம் என்று
யோசித்தபோது
கொசு அடிக்கலாம்
என்று தோன்றியது.
எனக்குச்
சின்ன வயதிலிருந்தே
கொசு அடிக்கும்
பழக்கம் உண்டு.
நண்பர்களும்
ஊக்குவித்தார்கள்.
உங்கள் முகமே
நீங்கள் திறம்வாய்ந்த
கொசு அடிப்பாளர் என்கிறது
என்றார் ஒரு நண்பர்.
எல்லாம் சேர்ந்து கொசு
அடிக்கக் கிளம்பியாயிற்று.
கொசு அடிக்கும் மின்சார
மட்டையும் வாங்கிவிட்டேன்.
முதல் நாளே எட்டுத்திக்கும்
ஜெயம்.
1000 கொசுக்கள்.
வாரத்தில் 1000 கொசுக்கள்
அடித்தாலே
வெற்றிதான் என்றார்கள்
விவரம் தெரிந்தவர்கள்.
நாட்கள் செல்லச் செல்ல
நீங்கள் வேலையை விட்டுவிட்டு
முழுநேரமும் கொசு அடிக்கலாமே
என்று சொல்ல ஆரம்பித்தாள் மனைவி.
நண்பர்களும் ஊக்குவிக்கிறார்கள்.
கொசு அடித்தே கொரெல்லோ
கார் வாங்கிவிட்டாராம்
அந்த கொசுவாளர்.
இன்னொருவருக்கு
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்
5 கோடிக்கு ஆர்டராம்.
இதோ
இறங்கிவிட்டேன் நானும்.
நாம் அடிக்கும் கொசுவுக்கு
1 கோடி கிடைத்தால்
போதாது?
இது என்னா அக்குறும்பு! 😀
LikeLike
அக்குறும்பு இல்லை. அக்கொசுறும்பு!! என்னத்தை சொல்றது 🙂
LikeLike
அந்த பயம் இருக்கட்டும்
LikeLike
antha bat i than ippo enkitta kuduthiteengale ippo eppadi kosu adikireenga?
LikeLike
வேற மட்டை வாங்க வேண்டியதுதான். உண்மையில் கொசு அடிப்பதைச் சொல்வதன் மூலம் நான் வேறொரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். உங்களுக்குமா புரியவில்லை?
LikeLike
இப்படி சேத்து விட்டு சேத்து விட்டு சீரழிஞ்ச கத நெறைய இருக்கு ஊருக்குள்ள கட்டியக்காரன்………
LikeLike
\\ இன்னொருவருக்கு
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்
5 கோடிக்கு ஆர்டராம்.\\
நீங்கள் சொல்லவந்த விடயத்தை தெரிந்தவர்கள்தானே
நாம் – தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு
LikeLike