
மதுரை பிரஸ் லோகோ
என்னுடைய நண்பர் ஒருவர் மதுரை பிரஸ் என்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார். மதுரைக்காரர். தன் பதிப்பகத்திற்கு இப்படி ஒரு பெயர் அமைந்ததில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம். தலைக்கனம் என்றுகூடச் சொல்லலாம். சற்று கர்வமாகத்தான் திரிவார். தன் ஊர்ப் பெயரும் பதிப்பகம் சார்ந்த பிரஸ் என்ற வார்த்தையும் நன்றாகப் பொருந்திப் போவதாக பார்த்தவர்களையெல்லாம் மொக்கை போடுவார். யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை பார்ப்பதுபோல, பிற பதிப்பகத்தினரையெல்லாம் படு இகழ்ச்சியாகப் பார்ப்பார். இந்த அளவுக்குப் பெயர் அமையவில்லையாம்.
ஆனால், ஆண்டவன் என்று ஒருவன் இருக்கிறானே! அந்த நாளும் வந்தது. சென்னை கோவிந்தன் ரோட்டிலிருந்து சிஐடி நகருக்குத் திரும்பும் இடத்தில் ஒரு பெயர்ப் பலகை. மதுரை மெஸ். பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த மதுரைக்காரருக்கு சுரீர் என்றது. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்த நண்பர், “’டேய் உன் கம்பனி பேரும் மதுரை மெஸ்தானே..” என்றார். மதுரைக்காரர் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார். “அது மதுரை பிரஸ்” என்றார் கொஞ்சம் சுருதி குறைந்து. “இரண்டும் ஒன்னு மாதிரிதான்டா இருக்கு.. என்ன பெரிய வித்தியாசம்?” என்றார் பில்லியன் நண்பர். அவமானத்தில் தலை கவிழ்ந்தார் மதுரைக்காரர்.
இப்போது ராத்திரியானால், அந்த மதுரை மெஸ்ஸில் புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு, “மதுரைக்காரன்னா சும்மாவா.. புரோட்டா சூப்பர்… நீங்களும் ரெண்டு சாப்பிடுங்க சார்” என்று பில்டப் கொடுத்துக்கொண்டு திரிகிறார். ஒருவர் கர்வத்தை அடக்க ஆண்டவன் என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்!
அதுக்கு என்னங்க பண்ண முடியும்? ஒவ்வொரு ஊரோட பஸ் ஸ்டாண்டு பக்கத்துலயும் அந்த ஊர் பெயர்ல ஓட்டல், சலூன், நியூஸ்பேப்பர் கடை எல்லாம் இருக்கும். மதுரை பிரஸ் புதுசாத்தான் இருக்கு. ஆனால் சந்தடி சாக்கில் ஒரு கவிஞரை வம்புக்கிழுக்கிறீர்கள் பாருங்கள்…
LikeLike