
எனக்கு நேற்று என் பால்யகால நண்பனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
அந்த மின்னஞ்சல்:
கட்டியக்காரா,
நீ சொன்னது மாதிரியே நடந்துவிட்டது பார்த்தியா.. 2010 மார்ச் 13ந் தேதி தமிழ்நாட்டுக்கு புதுசா சட்டமன்றம் திறப்பாங்கன்னு சொன்னிடேயா. அதையும் மன்மோகன் சிங்குன்னு ஒரு பிரதமர் வந்து திறப்பார்னு சொன்னியேடா.. நாங்கள்ளாம் அப்போ சிரிச்சோம். இப்போ உண்மையாகப் போகுது.
நீ தீர்க்கதரிசிதாண்டா…
அன்புடன்,
மூர்த்தி
மார்ச் 3, 2010
பி.கு. நித்யானந்தா மாட்டிக்கொண்டவுடன் “நித்யானந்தா மாட்டிக்கொள்வார்ன்னு அன்னிக்கே சொன்னியேடா” என்று நித்யானந்தத்தின் பல பிராண்ட் அம்பாசிடர்களுக்கும் அந்த பிராண்ட் அம்பாசிடர்களின் அல்லக்கைகளுக்கும் நண்பர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்து குவிகின்றனவாம். ஏன் எங்களுக்கு மட்டும் மின்னஞ்சல் வராதா என்ன?
பின்குறிப்புக்குப் பி.கு: தலைப்பு, வழக்கம்போல கூட்டம் கூட்டுவதற்காக செய்த நீச காரியம். தேடிவந்தவர்கள் மன்னிக்க.
தலைப்பு … நீச காரியம் எல்லாம் இருக்கட்டும்
டி ஆர் பி யை விட்டு விட்டு பாத்தா, இந்த விஷயத்தில உங்களுக்கு என்னா தோணுது ??
LikeLike
லேட்டஸ்ட் பதிவைப் பார்க்கவில்லையா நண்பா? சன் டிவியும் பத்திரிகைகளும் செய்தது, செய்வது அயோக்கியத்தனம் என்பதுதான் எனது கருத்து. நித்யானந்தா சோரம் போனால், அவரது உபதேசங்களைக் கேட்டு மயங்கிக் கிடந்தவர்கள்தான் கோபப்பட வேண்டும். மற்றவர்களைப் பொறுத்தவரை, இன்னொரு கபட வேடதாரி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார், அவ்வளவுதான். இப்போதெல்லாம் கொலை செய்த சாமியார்கள்கூட, ஆட்சிக்கு நெருக்கமாக இருப்பதால் தப்பித்துவிடுகிறார்களே!
LikeLike