
மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் வெளியிட்ட செய்தி இது.
அதன் சுருக்கமான தமிழாக்கம் இதோ:
சுவாமி நித்யானந்தாவின் வீழ்ச்சிக்கு பெண், நிலம், அதிகாரம் ஆகியவற்றிற்கான போட்டியே காரணம்.
சுவாமி நித்யானந்தாவை செக்ஸ் சர்ச்சையில் சிக்க வைத்த ஸ்டிங் நடவடிக்கை அவருடன் நிலப் பிரச்னையுள்ள சில அரசியல்வாதிகளின் தூண்டுதலின்பேரிலியே நடத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சாமியார் ரஞ்சிதாவுடன் இருக்கும் காட்சிகளை முதலில் வெளியிட்ட டிவி சேனலின் உரிமையாளர்களான மாறன்களுடன் நித்யானந்தாவுக்கு சொத்துத் தகராறு இருக்கிறது. இதுதவிர, கர்நாடகத்தில் முன்னாள் தாதாவான முத்தப்பா ராயும் ஆசிரமத்தின் 19 ஏக்கர் நிலத்தின் மீது கண் பதித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த செக்ஸ் வீடியோ ஒளிபரப்பானதும் முத்தப்பாவின் ஆட்கள்தான் ஆசிரமத்தைக் கொளுத்தியது என்றும் சொல்லப்படுகிறது.
நித்யானந்தாவின் ஆசிரமம் பிடதியில் முத்தப்பாவின் வீட்டிற்கு அடுத்து அமைந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து சாமியாரிடம் முத்தப்பா பலமுறை கேட்டிருக்கிறார். மாறன்களுக்கும் சாமியாருக்கும் இடையில் பல நாட்களாகவே தகராறு உண்டு. கடந்த ஆறு மாதத்தில் இந்தத் தகராறு மோசமடைந்திருக்கிறது. “நிலத் தகராறுக்கும் நாங்கள் ஒளிபரப்பிய செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்கிறார் சன் குழுமத்தின் கர்நாடக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மூத்த துணைத் தலைவர் விஜயகுமார். “எந்த ஒரு பொறுப்பான மீடியா குழுமத்தையும்போல, இவரை அம்பலப்படுத்த வேண்டும் என்றே நினைத்தோம். எங்களுடைய ஸ்டிங் நடவடிக்கை உண்மையானது” என்கிறார் அவர்.
சாமியாரின் ஆசிரமத்திற்குச் செல்லும் சாலையில் செக் போஸ்ட்களை வைத்து, அங்கு செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுத்தி வந்திருக்கிறார் முத்தப்பா என்கிறார்கள் உள்ளூர்காரர்கள். “சாமியை நிலத்தை விட்டு வெளியேற்ற அவர்கள் செய்த தந்திரம் அது” என்கிறார்கள் அவர்கள். இது குறித்து முத்தப்பாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. “நாங்கள் ஸ்வாமியை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை. அவருடைய நிலமும் எங்களுக்குத் தேவையில்லை. மாறாக, மக்களைக் கவர்வதற்காக அவர்தான் முத்தப்பாவைப் பற்றித் தவறாகப் பேசுவார்” என்கிறார் முத்தப்பாவின் நெருங்கிய கூட்டாளியான ஜகதீஷ் கௌடா.
கடந்த ஒரு மாதமாகவே நித்யானந்தா பிளாக் மெயில் செய்யப்பட்டு வந்ததாக ஆசிரமத்தினர் தெரிவிக்கிறார்கள்.
——————————————
இந்த சதியில் இதில் சிக்கி சின்னாபின்னமானது ரஞ்சிதாதான். கொலை செய்த சாமியார்கள் கூட கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால் தப்பித்து விடுகிறார்கள். பகைக்கக்கூடாதவர்களை பகைப்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்தப் புலனாய்வை நம்மூர் பத்திரிகைகள் எதுவும் செய்யவில்லையா? Midday கட்டுரையின் இணைப்பும் தந்திருக்கலாமே.
LikeLike