அதே பெண்ணா நான்?

Sigiriya_fresco_sacred.jpgதமிழின் சங்க காலக் கவிதைகளைப் போல, பிராகிருதியில் தொகுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு ‘காதா ஸப்தஸதி’. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டவை.

ஆகவே, அதற்கும் முன்பாகவே இவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஹல என்ற சாதவாகன மன்னனின் காலத்தில் இவை தொகுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா.

இந்தக் கவிதைகள் பெரும்பாலும் பெண்களின் குரலில் பேசுகின்றன. காதலும் காமமும் உருகி வழியும் இந்தக் கவிதைகளில் வரும் பெண்கள் மிக சுதந்திரமானவர்கள்.

என்னுடைய இந்த மொழிபெயர்ப்பு, மிக சுமாரானது. திருத்தங்களை கோரி நிற்பது. இருந்தாலும் படித்து இன்புறலாம்.

1.
ஏன் அழுகிறாய், நண்பனே?
காதல் என்றால் அப்படித்தான்;
வெள்ளரிக்காயின் தளிரிழை
அதன் சின்னம்.

2.
தன் தவறுகளுக்கு வருந்தும் கணவன்
அவள் காலடியில் விழுந்துகிடக்கிறான்;
அவர்களது சின்ன மகன்
முதுகின் மீது ஏறுகிறான்.
வருத்தத்தில் இருக்கும் மனைவி
சிரிக்கிறாள்.

3.
பயணம் செய்யும் என் கணவன்
திரும்ப வருவான்;
நான்
முகத்தைத் திருப்பிக் கொள்வேன்
அவன் என்னை
சமாதானப்படுத்த முயல்வான்:

ம்ஹும்.. ஒரு பெண்ணின் கனவுகள்
அரிதாகவே நனவாகின்றன.

4
இரவில் கன்னங்கள் சிவந்தன
ஆனந்தம், ஏதேதோ நூறு காரியங்களைச்
செய்யவைக்கிறது,
காலையில், நிமிர்ந்து பார்க்க்க்கூட
மிகவும் வெட்கமாக இருக்கிறது,
என்னால் நம்ப முடியவில்லை, அதே பெண்தான் நான்?

5
அவன் என்னிடம் மோசமாக நடந்துகொண்டாலும்
நான் அவனைச் சந்திக்கிறேன்.
தீ அழிவை ஏற்படுத்துகிறது;
ஆனாலும், நாம் நெருப்பை பற்ற வைப்பதில்லையா?

6
கூண்டில் அடைபட்ட பறவையைப் போல
நடுங்கும் கண்களுடன்
வேலிக்குப் பின்னால் இருந்து
நீ செல்வதை அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள்

7
வாயிற்கதவில் அவள்
மார்புகள் அழுந்த,
கால்கள் வலிக்கும்வரை
விரல்களை ஊன்றி நிற்கிறாள்.
வேறு என்னதான் அவளால்
செய்ய முடியும்?

8
இந்தப் பரந்த உலகம்
அழகான பெண்களால் நிறைந்திருந்தாலும்
அவளுடைய இடது பக்கத்தை
அவள் வலப் பக்கத்துடன்
மட்டுமே ஒப்பிடமுடியும்.

9
பிரிந்திருந்த தினங்களை
எண்ண முடியவில்லை.
கைகளிலும் கால்களிலும்
விரல்கள் தீர்ந்துவிட்டன
படிப்பறிவில்லாத பெண் குமுறி அழுகிறாள்

10
கடினமான நிலத்தை
உழுத களைப்பில்
விவசாயி தூங்குகிறான்.
பருவ மழையைத்
திட்டித் தீர்க்கிறாள்
விரக தாபத்தில் இருக்கும் மனைவி.

11
சூரியனை வணங்குகிறாயா, பையா?
முகச் சுழிப்புடனா, புன்னகையுடனா?

12
கீழ் உதட்டைக்
கடிக்க மாட்டேன்
என்ற வாக்குறுதி,
ஊதி அணைக்கப்படும்
விளக்கு,
கிசுகிசுப்பாகும்
பேச்சு,
திணறும்
மூச்சு,

கொண்டாட்டத்திற்குரியது
ரகசியக் காதல்.

18akm7

அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா

 

13
பாழாய்ப்போன இரவின் இருள்,
கணவன் இப்போதுதான் கிளம்பிச் சென்றான்
காலியாக இருக்கிறது வீடு:
பக்கத்து வீட்டிலிருப்பவர்களே, விழித்திருங்கள்
திருடு போவதிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

14
எனது உள்ளாடையைத்
தேடி அவன் தடவினான்
அது அங்கே
இல்லை.
அவனது குழப்பத்தைப்
பார்த்தேன்.
இன்னும் இறுக்கமாகத்
தழுவிக்கொண்டேன்.

15
கடவுள்களுக்கு நாம் தண்ணீரைக்கூட படைக்கலாம்,
பூக்களை எடுப்பதற்காகப் போகாதே, மகனே;
கோதாவரியின் கரைகள்
உன்னை அழித்துவிடும்

16
புதிய மனைவியின்
திடமான மார்புகள்:
ஒட்டிய கன்னங்களுடன்
பழைய மனைவி பெருமூச்சு விடுகிறாள்.

17
நீ எந்தப் பெண்ணைப் பார்த்துப் பயப்படுகிறாயோ,
அவளுக்குப் பேய் பிடித்திருக்கவில்லை.
தாறுமாறான இடியும்
கணவன் வீட்டில் இல்லாததும்
அவளைப் பைத்தியமாக்கியிருக்கின்றன.

18
‘மூன்றாவது கடிகாரமும் முடிந்துகொண்டிருக்கிறது,
இப்போது நீ தூங்கப் போ’

‘ஓ, நண்பர்களே, இந்த இரவின் மல்லிகை நறுமணம்
என்னைத் தூங்க விடாது’

19

கீழே விழுந்து கடுமையாகச் சண்டையிடும்
இரண்டு உயர் ரக வீர்ர்களைப் போல

தொங்கும் உனது மார்புகளும்
பார்க்க அழகுதான்.

20
“என்ன இது?” அப்பாவித்தனமாக ஆச்சரியப்படுகிறாள் அவள்.

இப்போது கழுவுகிறாள், தேய்க்கிறாள், சுரண்டுகிறாள்
தன் மார்பில் இருக்கும் நகக்குறிகளை.

21
மழை நின்றுவிட்டது
உயரத்தில் இருக்கும் மேகங்கள்

(இளம் முலைகளைப் போல)
பறந்துவிட்டன

வயது முதிர்ந்த பூமியின் தலையில்
நரைமுடியைப் போல
முதல் பேக்கரிம்பு பூக்கள் தோன்றுகின்றன

22
நான் எப்போதுமே உன்னுடையவளாக
இருக்க விரும்புகிறேன்,
எப்படி என்றுதான் தெரியவில்லை:
சொல்லிக் கொடு.

23
‘மரணம் சீக்கிரமே வந்துவிடுகிறது
ஒரு பெண்ணை அவளுடைய
மலர்களில் தொடுபவர்களுக்கு’

‘மருண்ட பார்வையுடையவளே,
என்னுடைய மரணம் இப்போதே
வரட்டும்’

24
அவன் அவளைத் தழுவ
முன்னோக்கி வரும்போது,

அவளுடைய நளினமான கர்வம்
சற்றுப் பின்வாங்குகிறது.

25
“தோழி, நான் வாழாமல்
போனால்தான் என்ன?”

தன்னை மன்னிக்கும்படி அவன் கெஞ்சினான்
நானும் மன்னித்தேன்.

26
அவன் இல்லாதபோது,
அவனுடைய பல ஒழுக்கமில்லாத செயல்கள்
மனதில் வட்டமிடுகின்றன:
பார்த்துவிட்டாலோ, எதுவும் தோன்றுவதில்லை.

27
வெளிப்படையாகச் சொல்லாமல், கீழ்ப்படிந்து,
அக்கறையுடன்
வெளிப்படுத்துகிறாள்
கடும் கோபத்தை.

28
இலுப்பைப் பூ எதற்காக மலர்கிறது, மகனே?
நீ எனது பாவாடையை பிடித்து இழுத்தால்கூட

இந்தக் காட்டில் எனது குரல் யாருக்குக் கேட்கும்?

கிராமம் வெகுதூரத்தில் இருக்கிறது,
நான் தனியாக இருக்கிறேன்.

29

தூது போனவன் வரவில்லை,
சந்திரன் எழுந்துவிட்டது,

இரவு கடந்துசெல்கிறது, எல்லாம் போகிறது,
சொல்லி ஆற்றிக்கொள்ள யாருமில்லை.

30
உண்மையான மனைவிகள்
அவர்கள் பேசுவதைப் பேசட்டும்,

நான் என் கணவனுடன் படுக்கும்போதும்
கணவனுடன் படுப்பதில்லை.

31

ஏதாவது காரணத்தால் அவள் தன்
கண்களை மூடாவிட்டால்,

அவளது காதுகளில் நடனமாடும்
அல்லி மலர்களை யார் கவனிப்பார்கள்?

கிராமம் அரவமற்றுக் கிடக்கிறது,
மட்டமான ஆட்கள் உடனிருக்கிறார்கள்

என் பார்வையையோ, சந்தோஷத்தையோ,
துக்கத்தையோ, சிரிப்பையோ
பகிர்ந்துகொள்ள யாருமில்லை.

32
தங்கத்துடன் புதைக்கப்பட்ட
பானையின் வாயைப் பார்த்துவிட்டதுபோல 

அவளுக்கு மகிழ்ச்சி

மகளின் பாவாடை காற்றில்
பறக்கும்போது  பார்த்துவிட்டாள்,

பிறப்புறுப்புக்கு அருகில்
பற் தடம்.

33
யாருக்காக, நான் எனது
வெட்கத்தை, கற்பை,
கௌரவத்தை விட்டொழித்தேனோ

அவன் என்னை வெறும்
இன்னொரு பெண்ணாகத்தான் பார்க்கிறான்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to அதே பெண்ணா நான்?

  1. இதுவும் சூப்பர். ஒரே ஒரு திருத்தம்: காதா சப்தசதி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s