கபாலியை விமர்சிப்பது யாருக்கு லாபம்?

rajinikanth_kabali-wide.jpgமெட்ராஸ் படத்தை அடுத்து, ரஞ்சித் ரஜினியுடன் இணைந்தபோது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அறிவுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு மிகச் சுமாரான வர்த்தகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கார்த்தியை வைத்து, வடசென்னையை மையமாகக் கொண்டு, தலித் அடையாளங்களை, போராட்டங்களை முன்வைத்து மெட்ராஸ் படத்தை உருவாக்கியிருந்தார் ரஞ்சித்.
இந்தப் பின்னணியில் கபாலி படத்தின் மீது உருவான எதிர்பார்ப்பு மிகப் பெரியது.

கபாலி படத்தின் டீஸர், இந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு அதிகரித்தது. ஆனால், கபாலி பெரும் ஏமாற்றத்தைத் தரும், சலிப்பூட்டும் ஒரு திரைப்படம்.

மலேசியாவில் தொழிலாளர்களின் உரிமைக்குப் போராடும் கபாலீஸ்வரன், ஒரு தாதா கும்பலுக்குத் தலைவனாகிறார். அவரது வளர்ச்சியைப் பிடிக்காத அந்த கும்பலுக்குள்ளேயே இருக்கும் ஒரு குழு, கபாலியின் குடும்பத்தை அழித்துவிடுகிறது.

அந்த சண்டையில் பலரும் இறந்துவிட சிறை செல்கிறார் கபாலி. சிறையிலிருந்து வெளிவந்ததும் எதிரிகளை துவம்சம் செய்ய ஆரம்பிக்க, தன் குடும்பம் அழியவில்லை என்ற உண்மையும் தெரியவருகிறது. மெதுமெதுவாக குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். வில்லன்களை ஒழித்துக்கட்டுகிறார். முடிவில் காவல்துறை கபாலியை போட்டுத்தள்ளுகிறது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் போன்றவர்கள் எப்போதோ தங்கள் வயதுக்குத் தகுந்த பாத்திரங்களுக்கு மாற ஆரம்பித்துவிட்டார்கள். ரஜினி முதன் முறையாக அதை முயற்சித்திருக்கிறார். படத்தில் டூயட் இல்லை. எப்போதோ துவங்கியிருக்க வேண்டிய இந்தப் பயணத்தில் முதல் அடியை இப்போதுதான் எடுத்துவைத்திருக்கிறார் ரஜினி. அதுவும் தடுமாற்றம் மிகுந்த முதல் அடி. ரஜினியின் உடல்நலம் மட்டுமல்ல, திரைக்கதையும் இந்த தடுமாற்றத்திற்கு ஒரு காரணம்.

e8c9a52a3b182ea1c3ceaafaeb205a98.jpgமுதல் நாள் முதல் காட்சியிலேயே, படம் துவங்கி 15 நிமிடங்களுக்கு பிறகு ரசிகர்கள் உறைந்து போகிறார்கள். ரஜினி மலேசியாவில் சீர்திருத்தப் பள்ளியைப் போல ஒன்றை நடத்துகிறார். அங்கு படிப்பவர்களுடன் உரையாடுகிறார். இந்த உரையாடல் எப்போதுதான் முடியும் என்ற அளவுக்கு நீண்டுகொண்டே போகிறது.

அதேபோல, கபாலி மலேசியாவிலிருந்து சென்னை வரும் காட்சிகளைப் பார்க்கும்போது, நமக்கே மலேசியாவிலிருந்து சென்னை வந்ததுபோன்ற உணர்வு தோன்றுகிறது – அவ்வளவு நீளமான அலுப்பூட்டும் காட்சிகள்.

படத்தின் இறுதிப் பகுதியில் திடீரென வில்லனின் எல்லா கட்டமைப்புகளையும் சிதைக்கிறார் கபாலி. எப்படி அது சாத்தியமானது என்பது குறித்து ஒரு காட்சியும் இல்லை.

படத்தில் திடீர் திடீரென “பழைய வாழ்க்கையெல்லாம் நெனைச்சுப் பார்த்தேன்” என்றபடி புலம்புகிறார். சிவாஜி நடித்த ஞானப்பறவை படம் ஞாபகத்திற்கு வருகிறது.
முதல்முறையாக ரஜினியின் நடிப்பைப் பார்த்து தீவிர ரசிகர்களே கேலியாக சிரிக்கும் காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன. படத்தில் நகைச்சுவை பகுதி கிடையாது; ஆனால், Unintended-ஆக நிறைய உண்டு.

படத்தின் சில இடங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் காட்டப்படுகின்றன. புத்த உருவங்கள் தெரிகின்றன.

“நாங்க முன்னேறக்கூடாதில்ல..கோட் சூட் போடக்கூடாதில்லை. கால் மேல கால்போட்டா வலிக்குதுல்ல.. பிடிக்கலைனா போய் சாவுடா”, “உங்க கருணையெல்லாம் மரணத்தைவிட கொடுமையானது”, “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் காந்தி வேஷ்டி மட்டும் கட்டியதற்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கு” என்பது போன்ற வசனங்கள் இந்தப் படத்தை வேறொரு கோணத்தில் பார்க்கத் தூண்டக்கூடும். ஆனால், அப்படியான எந்தப் பரிணாமமும் இந்தப் படத்திற்கு இல்லை.

மிக மோசமாக எடுக்கப்பட்ட, மோசமான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படம் மட்டுமே. அந்த வசனங்கள் சரியான இடத்தில், சரியான கருத்தில் பொருந்தவில்லை. மெட்ராஸ் திரைப்படத்திற்கும் கபாலிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் அதுதான்.

ரஞ்சித்தின் முந்தைய படத்தை மனதில்வைத்து, இந்தப் படத்தை புகழ்ந்தால் ரஜினிக்கும் தாணுவுக்கும் நல்லது. உள்ளபடி விமர்சித்தால், ரஞ்சித்துக்கும் அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கும் நல்லது.

Advertisements
This entry was posted in சினிமா விமர்சனம், Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s