வாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்

689025-harper-spy-1

The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace புத்தகத்தை வெளியிடும்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

பின்வருமாறு ஒரு செய்தி சங்கிகளில் வாட்ஸப் குழுக்களில் உலா வருகிறது.

This photo was taken yesterday in Delhi. Now what is special about it?
It has been taken at a 5-star hotel in Delhi, where former Prime Minister Manmohan Singh & former Vice-President Hamid Ansari are releasing a book authored by Pakistan’ ISI’s former Chief Assad Durrani! The same ISI that is hardcore enemy of India and masterminds all attacks on and in India. The same ISI which engineered attack on our Parliament and attacks in Mumbai. Present Indian Government did not give visa to Asad Durrani to attend his book launch. So these patriotic people joined him in video conferencing for releasing the book! Sometimes we wonder if they ever had any feelings for this nation which gave them high positions and put them on pedestal. What a shame to us by these shameless renegades!

இதன் சுருக்கமான அர்த்தம்: “ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அந்தப் புத்தகத்தை எழுதியது பாகிஸ்தானின் அயலக உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி. அதாவது இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எதிரியான ஐஎஸ்ஐ. இந்திய அரசு இந்த விழாவில் கலந்துகொள்ள அவருக்கு விசா அளிக்கவில்லை. அதனால், இந்த தேசபக்தர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரோடு கலந்துகொண்டு இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு உயரிய இடத்தைக் கொடுத்த இந்த தேசத்தின் மீது ஏதாவது பற்று இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்”.

30pakistan-spy-jumboஇவர்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகத்தின் பெயர் The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace. ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி, இந்திய அயலக உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏஎஸ் துலாத், மூத்த பத்திரிகையாளர் ஆதித்ய சின்ஹா ஆகிய மூவர் இடையிலான உரையாடல்தான் இந்தப் புத்தகம். பின் லேடன் சிறைப்பிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது, காஷ்மீரில் பதற்றத்தைத் தக்கவைக்க பாகிஸ்தான் என்னவெல்லாம் செய்கிறது போன்ற தகவல்களை இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை எழுதியதற்காக, அவரை பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உட்படுத்தியதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. விழா நடந்தது இந்த ஆண்டு மே மாதம். சங்கிகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வாட்ஸப்பில் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சங்கிகளுக்கு புத்தகம் என்றாலே சற்று அலர்ஜிதானே..

ஆனால், இந்த ஃபார்வர்ட் செய்தியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஐஎஸ்ஐ தலைவருடன் இணைந்து புத்தகத்திற்காக உரையாடிய ராவின் முன்னாள் தலைவர் ஏஎஸ் அதுலாத்தின் பெயரே கிடையாது.

இந்த அதுலாத் எப்போது ‘ரா’வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர். அப்போது பிரதமர் பா.ஜ.கவைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி. 2000ல் ரா தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வாஜ்பாயின் ஆட்சிக் காலம் முடியும்வரை, 2004 வரை காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்தவர்.

ஆக, வாஜ்பாயி அரசில் பாதுகாப்பு அமைப்பில் முக்கியப் பிரமுகராக இருந்தவர், ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவரோடு சேர்ந்து ஏன் புத்தகம் எழுதினார்? பா.ஜ.கவுக்கு இதில் என்ன தொடர்பு? இந்தக் கேள்வியைத்தான் அவர்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s