Category Archives: சினிமா விமர்சனம்

கபாலியை விமர்சிப்பது யாருக்கு லாபம்?

மெட்ராஸ் படத்தை அடுத்து, ரஞ்சித் ரஜினியுடன் இணைந்தபோது தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அறிவுலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு மிகச் சுமாரான வர்த்தகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த கார்த்தியை வைத்து, வடசென்னையை மையமாகக் கொண்டு, தலித் அடையாளங்களை, போராட்டங்களை முன்வைத்து மெட்ராஸ் படத்தை உருவாக்கியிருந்தார் ரஞ்சித். இந்தப் பின்னணியில் கபாலி படத்தின் மீது … Continue reading

Posted in சினிமா விமர்சனம், Uncategorized | Tagged , , , | Leave a comment

கந்தசாமி: முழுமையான பொழுதுபோக்குச் சித்திரம்

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரேயா, கிருஷ்ணா, பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: சுசி கணேசன். ஜென்டில்மேனில் கொஞ்சம், அன்னியனில் கொஞ்சம், ரமணாவில் நிறைய எடுத்துச் சேர்த்து உருவாகியிருக்கும் படம். தங்கள் பிரச்னைகளை காகிதத்தில் எழுதி போரூர் முருகன் கோவிலில் இருக்கும் ஒரு மரத்தில் கட்டிவைத்தால், அந்தப் பிரச்னைகள் தீருகின்றன. தீர்த்து … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 7 Comments

அழகர் மலை – விமர்சனம்

நடிகர்கள்: ஆர்.கே., நெப்போலியன், பானு, லால், வடிவேலு, மணிவண்ணன், சோனா, சுகன்யா, ரஞ்சிதா, சரவணன்; இயக்கம் இசை: இளையராஜா; எஸ்.பி. ராஜகுமார். தூண்டில், எல்லாம் அவன் செயல், மஞ்சள் வெயில் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஆர்.கேவுக்கு உண்மையில் இதுதான் முதல் படம். தனக்கு என்ன மாதிரி பாத்திரம் சரியாக வரும் என்று உணர்ந்து அம்மாதிரி ஒரு … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 9 Comments

ஞாபகங்கள்: விமர்சனம்

பா. விஜய் நம் கலாம் கையால் தேசிய விருது வாங்கிய பாடலாசிரியர். பாக்யாவில் படு மோசமான சித்திரங்களுடன் உருகி.. உருகி.. கவிதை நடையில் ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். திடீரென்று பார்த்தால் ஒரு நாள் தாய் காவியம் என்று ஒரு படம், ஞாபகங்கள் என்று ஒரு பூப்போட்ட படம் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. கடைசியில் ஞாபகங்கள் … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 13 Comments

நாடோடிகள் நல்ல படமா?

தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 37 Comments

அந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்

  தமிழ் சினிமாவில் த்ரில்லர் ரக படங்கள் வெளிவருவது மிக அரிதான சம்பவம். அதிலும் நல்ல த்ரில்லர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இம்மாதிரி சூழலில்தான் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொம்மலாட்டம் மிக முக்கியமான படமாகத் தோன்றுகிறது. பாரதிராஜாவின் முந்தைய த்ரில்லர்களான டிக்…டிக்…டிக்..,  சிவப்பு ரோஜாக்கள்,  கண்களால் கைது செய்  படங்களையெல்லாம்விட பல மடங்கு மேம்பட்ட த்ரில்லர் … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 5 Comments

சிவாஜி சூப்பர் படமா?

பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளிவந்திருக்கிறது சிவாஜி. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகம் முழுவதையும் சிவாஜி என்ற ஒற்றை வார்த்தை ஆக்கிரமித்திருந்தது. ரசிகர்கள் இரவெல்லாம் விழித்துக் கிடந்து முன்பதிவு செய்தார்கள். ஆனால், படத்தைப் பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியியலாளராக இருந்து ரூ. 250 கோடி பணத்துடன் இந்தியாவுக்கு வருகிறார் சிவாஜி (ரஜினி). அவருக்கு மாமா … Continue reading

Posted in சினிமா விமர்சனம் | 18 Comments