Category Archives: நம்ம பயலுக

நம்ப முடியாத கதைகள் – 2

முத்துச்சாமிக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு. ஆனால், யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர், என்ன செய்கிறார் என்பதெல்லாம் தெரியாது. அதனால், மதுரை வடக்கு மாசி வீதி பழுக்குகள் எல்லாம் கிரிக்கெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அவரும் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லுவார். தனக்கு எதுவும் தெரியாது என்பது தெரிந்துவிடாதபடி பேசுவார். அது சில சமயங்களில் எடுபடும்; சில … Continue reading

Posted in நம்ம பயலுக | 5 Comments

என்னப்பா, ஓடிப்போகலையா?

மதுரை வடக்கு மாசி வீதி நண்பர்கள் பலருக்கு சினிமாவுக்கு அடுத்தபடியான பொழுதுபோக்கு வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவது. பொதுவாக சமாளிக்க முடியாத பிரச்னைகள், பரீட்சையில் தோல்விகள் ஏற்பட்டால்தான் ஓடிப்போவார்கள். ஆனால், மாசி வீதி இளைஞர்கள் புதுப்படம் ரிலீஸானாலே வீட்டில் கோவித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். முதல் தடவையாக இப்படி ஓடும்போது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கும். எல்லா இடங்களிலும் தேடுவார்கள். … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments

உலகப் போரில் வடக்குமாசி வீதி.

முதல் உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தத நேரம். 1914ஆம் வருடம் செப்டம்பர் 22ந் தேதி ஜெர்மானிய போர்க் கப்பலான எம்டன் சென்னை நகரைத் தாக்கியது. பெரிய சேதமொன்றும் ஏற்படவில்லை. பிரிட்டிஷ் நிறுவனமொன்றின் எண்ணெய்க் கிடங்கொன்று தீப்பிடித்து எரிந்ததோடு சரி. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் இந்தச் சம்பவத்தால் பெரும் பீதிக்குள்ளானார்கள். சென்னை நகர மக்களைப் பற்றிக் கேட்கவே … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments

அழிந்துபோன ஆட்டம்

வடக்கு மாசி வீதியில் மாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வலம் வருவது பழுக்குகள்தான். 10 முதல் 16 வயதுள்ள, வீட்டுக்கு அடங்காத, சாலையில் செல்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சிறுவர்களுக்குத்தான் பழுக்குகள் என்று பெயர். தனி ஒரு பழுக்கையே சமாளிப்பது கடினமான காரியம். அதில் எல்லாப் பழுக்குகளும் ஒன்றுகூடினார்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இந்தப் பழுக்குகள் … Continue reading

Posted in நம்ம பயலுக | 14 Comments

நம்ப முடியாத கதைகள்

இந்தக் கதைகளின் நாயகனின் கற்பனைப் பெயர் அம்பி. எம்சிஏ பட்டதாரி. கதைகளைப் படித்துவிட்டு, இதெல்லாம் புருடா என்று சொல்லக்கூடாது. நிஜமாகவே அம்பி நடத்திய திருவிளையாடல்கள்தான் இவை. இந்தக் கதைகள் எல்லாம், ‘என்றாரே பார்க்கலாம்!’ என்று முடியும். கி.வா.ஜவின் சிலேடைத் தொகுப்புகளைப் படித்ததன் விளைவு அது.                                                    ***** ஒரு முறை அம்பி நண்பர்களுடன் ஒரு பெரிய … Continue reading

Posted in நம்ம பயலுக | 13 Comments

வழுக்கு மரம்

கோவில் திருவிழாக்களை ஒட்டி வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு தமிழகத்தி்ன் பல ஊர்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. மீடியாக்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த இந்த வழுக்குமரம் ஏறுதல், வடக்கு மாசி வீதியிலும் வருடாவருடம் நடந்துவருகிறது. அதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு. வழுக்குமரம் என்பது சுமார் 50-60 அடி உயரமுள்ள, வழவழப்பான மரம். அது பெரும்பாலும் தேக்கு, … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments

நீங்களே புத்தி சொல்லுங்க..

அடிக்கடி அடிதடியில் ஈடுபடுபவர்களுக்கு வடக்கு மாசி வீதியில் ரசிகர்கள் உண்டு. என் நண்பன் செல்வம் அப்படி ஒரு டைப். குடித்துவிட்டால் யாருடனாவது ஏதவாது பேசி வம்பிழுப்பான் என்பதால் அவனுடன் சேர்ந்து குடிக்க கூட்டம் அள்ளும். செல்வத்தின் வயதையொத்த அசோக்தான் இந்த குடிகார கும்பலின் புரவலர். பொறியியல் கல்லூரி மாணவன். செல்வம் கிரைண்டர் மெக்கானிக். இப்படிதான் ஒரு … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments

பானுப்ரியாவுடன் ஒரு நாள்

வடக்கு மாசி வீதிகாரய்ங்களுக்கு சினிமாக்காரர்கள் மீதிருக்கும் மையல் அளவுக்கு வேறு யாருக்கும் இருக்குமா என்று தெரியவில்ல்லை. என் நண்பன் அரவிந்திற்கும் அவனது தம்பிக்கும் பானுப்ரியா மீது ஏகப்பட்ட காதல். அடிக்கடி அவரது வீட்டிற்கு போன் செய்வார்கள். பெரும்பாலும், “அம்மா அவுட்டோர் போயிருக்காங்க” என்ற பதில்தான் வரும். ஒரு முறை அரவிந்த் போன் செய்தபோது, பானுப்ரியாவே போனை … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments

முனியாண்டிக்குப் பிடித்த வரிகள்

முனியாண்டி குடித்துவிட்டு வந்த நாளி்ல், வீட்டில் சாம்பார் வைத்திருந்தால், அவர் மனைவியைப் பார்த்து,   திடுமாடு நெடுமுருகா, நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியாரு சாவாரா, வயித்தெரிச்சல் தீராதா? ஏண்டி, தினம் என்னை சாம்பார் வைச்சே கொல்லப் பாக்குறீ்ங்களா? என்ற வரிகளை ஒரு மந்திரம் போலச் சொல்லிவிட்டுத்தான் சாப்பிடுவார். முனியாண்டிக்குப் பிடித்த மற்றொரு வரி: “நடந்தவை … Continue reading

Posted in நம்ம பயலுக | 4 Comments

முனியாண்டிக்கு வந்த சோதனை

இந்தப் பதிவின் தலைப்பில் வரும் முனியாண்டி வடக்கு மாசி வீதியின் ஆயிரக்கணக்கான குடிகாரர்களில் ஒருவர். குடித்துவிட்டு மனைவியை அடிப்பது, மகன், மைத்துனன் ஆகியோரிடம் அடிவாங்குவது இவரது அன்றாட வழக்கம். இந்தச் சண்டைகள் ஒரு முறை பெரிதாகி, முனியாண்டியின் மனைவி பிறந்தவீட்டுக்குப் போய்விட்டார். முனியாண்டியின் வீட்டின் ஒரு பகுதியில் தனபால் என்பவர் சைக்கிள் கடை வைத்திருந்தார். முனியாண்டிக்கு … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments