Category Archives: நவகவிதை

கலைடாஸ்கோப்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து, கோவில் கடைகளில் விற்கும் கலைடாஸ்கோப்பை கண்ணில் பொருத்தி, வர்ண ஜாலங்களைப் பார்த்து மிரள்கிறார்கள். ஏதோ ஒரு சிறுவன், ஏதோ ஒரு கலைடாஸ்கோப்பை கண்ணில் வைத்து, பார்வையைச் செலுத்தும்போது வண்ணச் சிதறல்களாய் விரிகிறது எனது பால்யம்.

Posted in நவகவிதை | Tagged | Leave a comment

“நவகவிதை நமது உயிர்” வரிசை

எல்லோரும் நல்லவரே. மாற்றுக் கருத்து சொல்லாதவரை எல்லோரும் நல்லவரே.

Posted in நவகவிதை | Leave a comment

மிஸ்டு கால்

மிஸ்டு கால் மனைவியில்லாத வீட்டில் தலைக்கு மேலே தொங்கும் மின் விசிறியில் கயிற்றை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வந்தது அந்த மிஸ்டு கால். எம் 80 ஓட்டுபவர்களும் மிஸ்டு கால் கொடுப்பவர்களும் இன்னும் மதுரையில் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். (சிக்கனமே சிறந்த சேமிப்பு!) தற்கொலை முயற்சியைத் தள்ளிவைத்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த நண்பனுக்கு போன் செய்தேன். எப்படியாவது … Continue reading

Posted in நவகவிதை, படைப்பு | 1 Comment