கதாநாயகியின் தொப்புளும் கலாச்சாரமும்

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.
ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!
நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது.
படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.
ஷம்மு

இவர் காண்பித்தால் கெட்டுவிடும்

நமது தணிக்கைச் சட்டங்கள் வேடிக்கையானவை என்பது தெரிந்ததுதான். அதில் மேலும் ஒரு காமெடி. இந்த வெள்ளிக்கிழமை கரண் நடித்த மலையன் படம் ரிலீஸானது. அந்தப் படம் ஒடும் திரையரங்கில் அந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழையும் எந்தெந்த இடங்களில் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கின்றன என்ற பட்டியலையும் திரையரங்கில் ஒட்டியிருந்தார்கள்.

ஏதாவது சுவாரஸ்யமான காட்சியை அவர்கள் மட்டும் பார்த்துவிட்டு, நம்மைப் பார்க்கவிடாமல் வெட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள நான் அந்தப் பட்டியலை முழுமையாகப் படித்துவிடுவது வழக்கம். இந்த மலையன் படத்தின் வெட்டுப் பட்டியலில்தான் இந்தக் காமெடி. கதாநாயகி தூங்குவது போல ஒரு காட்சி. அதில் காற்றில் தாவணி விலகி, அவரது தொப்புள் தெரியும். அந்தக் காட்சியை வெட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், படத்தில் ஆரம்பத்தில் ஒரு கரகாட்டப் பாட்டு வருகிறது. அதில்  கரகாட்டம் ஆடும் நடிகை, மார்பிலும் இடுப்பிலும் ஏதோ பெயருக்கு ஆடை அணிந்துகொண்டு ஆடுவார். படு ஆபாசமான பாடல் அது. அதில் வெட்டு இல்லை!

நம் தணிக்கை அதிகாரிகளைப் பொறுத்தவரை, கதாநாயகியின் தொப்புளில்தான் கலாச்சாரம் குடியிருக்கிறது. அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது. கரகாட்டக்காரி எதைக் காட்டினாலும் சரி, கலாச்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் கிடையாது (அதாவது, குஷ்பு பாதுகாப்பான செக்ஸ் பற்றிப் பேசினால், தமிழ்க் கலாச்சாரம் கெட்டுவிடும்; வேலு பிரபாகரன் பிட்டுப் படம் மாதிரி படம் எடுத்தால் தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பது மாதிரி!).

இவர் காண்பித்தால் கெடாது

இவர் காண்பித்தால் கெடாது

படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்களும் மறுபேச்சுப் பேசாமல் இதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிடுகிறார்கள்.

This entry was posted in அனுபவம். Bookmark the permalink.

5 Responses to கதாநாயகியின் தொப்புளும் கலாச்சாரமும்

  1. உங்க ஃபீலிங்ஸ் புரியுது தல!! ​சென்சார்ல கட் வாங்கின ரீலுக எல்லாம் எங்க பூட்டி வச்சிருப்பாங்கன்னு கண்டுபுடிக்கணும்.

    Like

  2. லெட்டஸ் திங்க் இன்டர்ப்ரட்டேட்டிவ்லி. தமிழ் சினிமாவில் தொப்புள், யோனியைக் குறிக்கிறது. அவர்களால் நேரடியாக யோனியைக் காட்ட முடியாததால்தான் சிம்பாலிக்காகத் தொப்புளைக் காட்டுகிறார்கள். அதில் ஆம்லெட் போடுவது, பம்பரம் விடுவது எல்லாமே தாங்கள் விரும்புவதைக் காட்ட முடியாமை சார்ந்த ஆற்றாமையைத்தான் வெளிப்படுத்துகின்றன. இது சென்சார் போர்டுகாரர்களுக்கும் புரிந்திருக்கும். அதனால்தான் இந்தப் படத்தில் வருவதாக நீங்கள் சொல்லும் காட்சி அவர்களுக்கு ஆட்சேபகரமாகத் தெரிந்திருக்கிறது.

    கவர்ச்சிப் பாட்டு சினிமாவில் தனியாக இருக்கும் பகுதி. அதில் என்ன ஆபாசம் இருந்தாலும் அது சகஜமாகக் கருதப்படுகிறது. ஆனால் கதாநாயகி வரும் பகுதி படத்தின் முதன்மைப் பகுதி. அது எடிட்டோரியல் மாதிரி.

    Like

    • நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நம்முடைய மாண்புமிகு சென்சார் போர்டு உறுப்பினர்கள் இவ்வளவு யோசிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

      Like

  3. Dpal says:

    கதாநாயகியின் தொப்புளுக்குத்தான் எத்தனை மரியாதை!ஆனாலும் சென்சார் அதிகாரிகள் கலாச்சாரத்தைக் கொண்டுபோய் எங்கே வைத்தார்கள் பார்த்தீர்களா?

    Like

Leave a comment