Monthly Archives: January 2007

கறுப்பே அழகு, காந்தலே ருசி!

இரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு இதுதான்:  சிவப்பாக இருப்பவர்கள் சமூகத்தில் அதிக மதிப்புப் பெறுகிறார்களா? தன்னுணர்ச்சி மிக்க யாருக்கும் அன்றைய விவாதம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு அதிக … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 14 Comments

நீதிபதிகள் கொல்லும் நீதி

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மறு ஆய்வு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு என ஜனவரி 11ந் தேதி தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்று. மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் பொதுவாக நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவை. அரசியல் சாஸனம் மக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 5 Comments

நம்ப முடியாத கதைகள்

இந்தக் கதைகளின் நாயகனின் கற்பனைப் பெயர் அம்பி. எம்சிஏ பட்டதாரி. கதைகளைப் படித்துவிட்டு, இதெல்லாம் புருடா என்று சொல்லக்கூடாது. நிஜமாகவே அம்பி நடத்திய திருவிளையாடல்கள்தான் இவை. இந்தக் கதைகள் எல்லாம், ‘என்றாரே பார்க்கலாம்!’ என்று முடியும். கி.வா.ஜவின் சிலேடைத் தொகுப்புகளைப் படித்ததன் விளைவு அது.                                                    ***** ஒரு முறை அம்பி நண்பர்களுடன் ஒரு பெரிய … Continue reading

Posted in நம்ம பயலுக | 13 Comments

ஜல்லிக்கட்டு

தமிழக தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம்தோறும் நடந்துவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த வருடம் நடத்தலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதற்குப் பல நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. சமீபத்தில் சென்னைக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும்  உயர்நீதிமன்றத் தீர்ப்பால் மிகுந்த வேதனையுற்றேன். இந்தத் தீர்ப்பு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் எதிரானது. … Continue reading

Posted in சும்மா ஒரு கருத்து | 5 Comments

Happy New Year!

வடக்கு மாசி வீதியின் வாசகர்களில் எத்தனை பேர் ஜனவரி 1ந் தேதியன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அவர்களை நோகடித்தீர்கள் என்று தெரியாது. மற்றவர்களோடு ஒப்பிட்டால் எனக்கு மிகக் குறைவாகவே வாழ்த்து அழைப்புகள் வந்தன. அன்று மதியம் வரை என் கைபேசியை நான் அணைத்து வைத்திருந்தது இதற்கு முக்கியமான காரணம். என் உறவினர் ஒருவர் … Continue reading

Posted in Uncategorized | 3 Comments

வழுக்கு மரம்

கோவில் திருவிழாக்களை ஒட்டி வழுக்கு மரம் ஏறும் விளையாட்டு தமிழகத்தி்ன் பல ஊர்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. மீடியாக்களில் அதிகம் கண்டுகொள்ளப்படாத இந்த இந்த வழுக்குமரம் ஏறுதல், வடக்கு மாசி வீதியிலும் வருடாவருடம் நடந்துவருகிறது. அதைப் பற்றியதுதான் இந்தப் பதிவு. வழுக்குமரம் என்பது சுமார் 50-60 அடி உயரமுள்ள, வழவழப்பான மரம். அது பெரும்பாலும் தேக்கு, … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments