கறுப்பே அழகு, காந்தலே ருசி!

இரு வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியின் நீயா, நானா நிகழ்ச்சியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு இதுதான்:  சிவப்பாக இருப்பவர்கள் சமூகத்தில் அதிக மதிப்புப் பெறுகிறார்களா? தன்னுணர்ச்சி மிக்க யாருக்கும் அன்றைய விவாதம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது என்று பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். சிவந்த நிறமுடையவர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற தொனியிலேயே எல்லோரும் பேசினார்கள். அவர்களிடமிருந்து வெளிவந்த அகங்காரமும் திமிரும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தன. அப்படி மதிப்பு ஏதும் கிடையாது என்று வாதிட்டவர்களின் வாதம் மிகப் பரிதாபமாக இருந்தது. தங்கள் நிலைக்குத் தாங்களே வெட்கப்படுவது போலவே பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.

நிறவெறி என்பது ஏதோ அமெரிக்க, ஐரோப்பிய சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்திருக்க வேண்டும். உண்மையில் நம்முடைய நிறம் குறித்த பிரக்ஞை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. சிவந்த நிறமுடையவர்களுக்கு பெருமிதத்தையும் கறுப்பாக இருப்பவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையையும் நம் சமூகமே ஏற்படுத்திவிடுகிறது.  இதில் டிவி விளம்பரங்களின் பங்கு மிகக் கணிசமானது. சற்று மாநிறமுள்ள பெண்ணுக்கு கல்யாணமே ஆகாதது போலவும், அவர் ஒரு க்ரீமைப் பயன்படுத்தி சிவந்த நிறம் பெற்றதும் கல்யாணம் நடப்பதுபோலவும் எத்தனை விளம்பரங்களில் காட்டப்பட்டுவிட்டன. நமக்கு சொரணை என்ற ஒன்று இருந்திருந்தால் இந்த விளம்பரங்களை எதிர்த்திருப்போம் இல்லையா?

சுமார் 80 சதவீத மக்கள் கறுப்பான மேனியுடையவர்களாக இருக்கும் ஒரு மாநிலத்தில் – சென்னைக்காரர்கள் கவனமாகப் படிக்கவும். மாநிலம் என்பது தமிழ்நாட்டைக் குறிக்கிறது. வெறும் சென்னையை மட்டுமல்ல – நீங்கள் சிவந்த நிறம் பெற வேண்டுமா என்று விளம்பரம் செய்வது எவ்வளவு பெரிய வன்முறை?

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயல்பாகவே கறுப்பு நிறம் உண்டு. சூரியக் கதிர்களால ஏற்படும் தோல்புற்று நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயற்கையே தந்த ஏற்பாடு இது. இப்போதும் சிவந்த நிறமுடையவர்களே தோல்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் கறுப்பாயிருப்பவர்களின் தாழ்வு மனப்பான்மையும் சிவந்த நிறமுடையவர்களின் திமிரும் சேர்ந்து, சிவந்த நிறமே உயர்வானது என்ற பரவலான கருத்தை உருவாக்கியிருக்கிறது.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

14 Responses to கறுப்பே அழகு, காந்தலே ருசி!

  1. Bharathi says:

    Exactly! It is all in the mind. Self confidence is the key for a solution to this problem. I remember one of my fair nephews, K come crying to me after he had had a fight with his dark cousin, A. They had been arguing who was the better fellow between the two. A had argued that he was the better one because he was dark like Rajinikanth whereas K was fair! K being a great fan of Rajini, could not digest the fact that he could never look dark like Rajini! It is all in the attitude you have! A had the right self confident attitude! First the movie comedy writers should put a stop to making fun of skin colour. Whole generations are being influenced by movies. The creative persons of this profession should stop glorifying fair coloured skin, which is a very bad inheritance from the British regime!

    Like

  2. கட்டியக்காரரே, நீங்கள் அறிவியல் ஆதாரங்கள் வரை போகத் தேவையில்லை என்பது என் கருத்து. நிற வெறி மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகளுக்குத் துணைபோகும் ஒரு கண்ணோட்டம்.

    நிற வெறி நாம் சுய விழிப்புணர்வுடன் தவிர்க்க வேண்டிய விஷயம். நம் நிறத்தை நாமே கிண்டலடித்துக்கொள்ளும்போது நம்மிடம் வெளிப்படுவதும் ஒருவகை நிற வெறிதான். கருமை அழகல்ல என்ற கருத்து கருப்பாக இருக்கும் ஒருவரிடம் இருந்தால் அவரும் நிற வெறியர்தானே? சிவப்பு நிறத்தவர்களின் பிரச்சாரத்திற்குக் கருப்பு நிறத்தவர்களும் பலியாகியிருக்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையும் தன்னம்பிக்கையின்மையும் அதில்தான் வருகின்றன.

    Fair & Lovely என்ற பெயரிலேயே நிற வெறி அப்பட்டமாக வெளிப்படுகிறது. இது பெரிய வன்முறை என்பது சரியான பாயின்ட். இந்தக் கோணத்தில் ஏன் யாரும் யோசிப்பதில்லை?

    பெண்கள் மீதான வன்முறையில் கூட நிற வெறிக்கு ஒரு பங்கு இருக்கிறது.

    Like

  3. ருக்மணி says:

    நம் சமுதாயத்தில் இது ஒழிக்க வேண்டிய ப்ரச்சனை.சாத்தான் சொல்வது போல் ” Fair & Lovely ” என்ற பெயரே தவறுதான்.நம் உடலின் நிறம் என்பது நம் கட்டுபாட்டுக்குள் இல்லாத விஷயம்.இதை வைத்து வேறுபடுத்தி ப்ரச்சனை செய்பவர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி விட வேண்டும்.
    அது சரி,உங்கள் கட்டுரைக்கு தலைப்பு ஏன் “கறுப்பே அழகு,காந்தலே ருசி” என்று வைத்துள்ளீர்கள்-வெள்ளை நிறத்துக்காரர்களை புண் படுத்தாதீர்கள். :-))

    Like

  4. கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு – என்று மாளவிகாவே பாடிவிட்டுச் சென்றிருக்கிறார். அதற்குப் பின் அப்பீல் ஏது?
    இதற்கே இப்படிச் சொல்கிறீர்களே, இன்னொரு பழமொழி இருக்கிறது. “கறுப்புக்கு நகை போட்டு காத தூரத்தில் பார்க்கனும், செகப்புக்கு நகை போட்டு ……..” – முழுவதையும் சொன்னால் சிவந்த நிறத்துக்காரர்கள் அழுதே விடுவார்கள்.

    Like

  5. kollangudi karruppaayi says:

    sivappai iruppavarkal sivappai iruppathaiye periya saathanaiyaaga ninaikiraargal. karuppai irupparval thaan unmaiyaana uzhaippaaligal. arpannippu unarvu mikkavargal. karuppai irupparvargal karuppai iruppathai ninaithu perumai pada vendum.

    Like

  6. kavitha says:

    Good write up. keep concentrating on such issues.

    Like

  7. ருக்மணி says:

    மாளவிகா கறுப்பா சிவப்பா? அதை சொல்லுங்கள் முதலில்.என்னை பொறுத்தவரை இது போன்ற பழமொழிகள் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணுகின்றன.அது மட்டுமில்லாது நிறைய மக்கள் தம் உடலின் நிறத்திற்கேற்ப உடையின் நிறத்தை தேர்வு செய்வார்கள்.எந்த கலர் உடை பிடித்திருக்கிறதோ அதை போட்டுக் கொள்ள வேண்டியது தானே?கறுப்பாக இருப்பவர்கள் பளிச் கலர் போட்டு கொண்டால் நன்றாக இருக்காது என்று தங்களுக்குள் ஒரு வட்டத்தை வேறு போட்டுக் கொள்கிறார்கள்.

    Like

  8. இது என்ன கேள்விய மாளவிகா கறுப்புதான்! நான் ஒருபோதும் உடலின் நிறத்திற்கு ஏற்ப உடை தேர்வு செய்வதை எதிர்க்கவில்லை. கறுப்பாக இருப்பவர்களோ, சிவப்பாக இருப்பவர்களோ, எந்த நிற உடை தங்களுக்கு நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் உரிமை அவர்களுக்கு உண்டுதானே? அது வட்டம் இல்லை, தேர்வு. நான் எதிர்ப்பதெல்லாம் நிறம் அடிப்படையில் மதிப்பளிப்பதைத்தான். ஒரு அலைபேசி விற்கும் கடைக்குச் சென்று பாருங்களேன். நீங்கள் கறுப்பாக இருந்தால் ஒருவிதமாகவும் சிவப்பாக இருந்தால் ஒருவிதமாகவும் உங்களிடம் பேசுவார்கள். இதைதான் நான் எதிர்க்கிறேன்.

    Like

  9. ருக்மணி says:

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு- “No one can make you feel inferior without your permission.” இதை தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.ப்ரெச்சனை நம்மிடம் தான் உள்ளது.நமக்கு தெரிந்த நிறைய பிரபலங்கள் கறுப்பு தானே?அவர்களுக்கேல்லாம் மரியாதை கிடைக்கவில்லையா?

    Like

  10. Anonymous says:

    அலோ!

    Like

  11. Most of the people participated in the program defend white are not mentally matured. Vijay tv need to select the right people rather than this sort of
    “rendunketton”

    Like

  12. பாத்தான் says:

    I like the spelling of rendunketton.

    Like

  13. Anonymous says:

    என்னமோ சொல்றேள், போங்கோ!

    Like

  14. tamilinfogoogle says:

    இந்தி சாதிகளுக்கு இடஒதுக்கீடு தரும் ‘தமிழ்’நாடு

    தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

    நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

    இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

    தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

    தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

    கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

    எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

    சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

    தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

    இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

    கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

    தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

    Like

Leave a comment