Category Archives: நம்ம பயலுக

ஒரு பாடலின் சரிதம்

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் முனியாண்டியின் ஞாபகம். அவர் மனைவியோடு சண்டையிட்டு ஒரு பாட்டுப்பாடுவார் என்று ஒரு பதிவு. ஞாபகமிருக்கிறதா? மனைவியுடன் சண்டையிட்டு அவர் பாடும் பாடல் இதுதான்: “திடுமாடு நெடுமுருகா, நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியாரு சாவாரா, வயித்தெறிச்சல் தீராதா? ஏண்டி, சாம்பார் வச்சே என்னைக் கொல்லப் பாக்குறீங்களா?” என்று அவர் தன் … Continue reading

Posted in நம்ம பயலுக | Leave a comment

ஒரு ஞாயிற்றுக்கிழமை

வடக்கு மாசி வீதியில் ஞாயிற்றுக் கிழமைகளின் மதியப் பொழுதுகள் சுவாரஸ்யமற்றவையாகவே செல்லும். சிறுவர்களாக இருந்தால் சாலையை பிட்ச்சாக மாற்றி கிரிக்கெட் விளையாடலாம். 17-18 வயதில் இருப்பவர்கள் இப்படி விளையாட விரும்பமாட்டார்கள். ஆனால், பொழுது போக வேண்டுமே… நேராக ஓயின் ஷாப்பிற்குப் (டாஸ்மாக்) போவார்கள். அங்கேயே சரக்கை வாங்கி குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து படுத்துவிடலாம். ஆனால், அப்படிச் … Continue reading

Posted in நம்ம பயலுக | Leave a comment

கிருஷ்ணன் ஏன் அப்படிச் செய்தான்?

காலை பத்தரை மணி இருக்கும். தர்மாம்பாள் டீச்சர் கிருஷ்ணனைக் கூப்பிட்டு, போய் மீனாட்சி காப்பி கடையில் டீ வாங்கிக் கொண்டுவரும்படி சொன்னார். துணைக்கு வரும்படி கிருஷ்ணன் என்னைக் கூப்பிட்டான். அந்தத் தருணங்களில் அவன் கடைக் கண் பார்வை தன் மீது படாதா என்று பல மாணவர்கள் ஏங்குவார்கள். கடைக்குச் சென்றுவரும் அந்தப் பத்து – பதினைந்து … Continue reading

Posted in நம்ம பயலுக | 3 Comments

வடக்கு மாசி வீதியில் விஜயகாந்த்

தலைப்பைப் பார்த்தால் “பட்டணத்தில் பூதம்” தொனியில் இருக்கிறதே என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள். நடிகரும் தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் பிறந்து, வளர்ந்தது வடக்கு மாசி வீதியில் உள்ள ஒரு தெருவில்தான். அவர் முதல்வரானால், தமிழகத்திற்கு ஒரு முதல்வரைத் தந்தை பெருமையும் இந்த வீதிக்குக் கிடைத்துவிடும். ஆனால், சொல்ல வந்த விஷயமே வேறு. 80களின் இறுதியில் விஜயகாந்த் … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments

நொண்டி கடை

தற்போது வடக்கு மாசி வீதியில் வசிக்கும் பலருக்கு இப்படி ஒரு கடை இருந்ததே தெரியாது. ஆனால் 80களின் துவக்கத்தில் அப்படி ஒரு கடை இருந்தது. தற்போது கோபால் டாக்டர் அலுவலகத்திற்கு எதிரே அந்த இடம் இருக்கிறது. அந்தக் கடையின் உரிமையாளர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால், அந்தக் கடையை நொண்டி கடை என்றுதான் எல்லோரும் அழைத்து … Continue reading

Posted in நம்ம பயலுக | 4 Comments

அண்ணாவின் மாயா பஜார்

வடக்கு மாசி வீதியின் அடையாளங்களில் ஒன்று அண்ணா கடை. அறிஞர் அண்ணாவுக்கும் இந்தக் கடைக்கும் சம்பந்தமில்லை. கடையை வைத்திருப்பவரை எல்லோரும் அண்ணா என்று அழைப்பதால் கடைக்கு இந்தப் பெயர். நான் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். என் தந்தையும் அவரை அண்ணா என்று அழைத்து, அவருடைய மாணவப் பருவத்தில் பொருள்களை வாங்கியிருக்கிறார். அதாவது, உலகம் தோன்றிய … Continue reading

Posted in நம்ம பயலுக | 2 Comments

டிஸ்கோ சாந்தி என்ற லெ.பி. சரித்திரம் தொடர்ச்சி…

பிள்ளையார் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நான், டிஸ்கோ சாந்தி பெயருக்கான காரணம் தேடி பள்ளி முழுவதும் அலைந்தேன். எனக்குப் பதில் சொல்லித் தேற்றுவாரில்லை. முயற்சிகளில் தோல்வியுற்று ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, லெட்டுப் பிள்ளையே என்னை நோக்கி வந்தான். டிஸ்கோ சாந்தி என்று பெயர் வந்த காரணத்தைக் கண்ணீரோடு கூறலானான். பள்ளியில் சில நாட்களுக்கு … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments

டிஸ்கோ சாந்தி என்ற லெட்டுப் பிள்ளை சரித்திரம்

பரத கண்டம் என்ற இந்த ஜம்புத் தீபத்திலே முன்பொரு காலத்திலே அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. மதுரையின் வடபகுதியில் வைகை நதிக்கு அருகில் சேதுபதி மேல் நிலைப் பள்ளி என்றொரு பள்ளி இருக்கிறது. அங்கே ராமச்சந்திரன் என்றொரு மாணாக்கன் ஆறாம் வகுப்பு பயின்று வந்தான். ஆனால், அவனை யாரும் … Continue reading

Posted in நம்ம பயலுக | 6 Comments

பழுக்குகள் நாய் வளர்த்த கதை

தாய்வீடு படத்தில் ரஜினிகாந்திற்கு ஒரு நாய் ரொம்பவுமே உதவி செய்யும். பல சாகசங்களில் ஈடுபடும். இதைப் பார்த்த வடக்குமாசி வீதி பழுக்குகளாகிய நாங்கள் ஒரு நாய் வளர்க்க முடிவெடுத்தோம். அதற்காக ஒரு குட்டி நாயைத் தேடி தெருத்தெருவாக சுற்றினோம். கடைசியில் ஓரிடத்தில் பிறந்து ஒன்றிரண்டு வாரங்களேயான ஒரு நாய் கண்ணில் பட்டது. அப்போது அந்தக் குட்டி … Continue reading

Posted in நம்ம பயலுக | 7 Comments

நானும் ஒரு காப்பி…..

வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய காப்பிக்கடை இருந்தது. பார்க்க மிகக் கச்சிதமாக இருக்கும். உரிமையாளரே கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஒரே ஒரு மாஸ்டர். எல்லாம் இருந்தும் காப்பி சகிக்காது. ஏரியாவுக்குப் புதிதாக வருபவர்கள் தெரியாமல் அங்கே காப்பி குடிப்பார்கள். சில சமயங்களில் பால் தீர்ந்துவிட்டது; லோடு வரவேண்டியிருக்கிறது என்பார் கடைக்காரர். காப்பி … Continue reading

Posted in நம்ம பயலுக | 14 Comments