Category Archives: பேப்பர்காரய்ங்க அட்

தொடரும் ஸ்கூப் செய்திகள்

நேற்று எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. சரத் ரெட்டி விவகாரத்தைப் பற்றி மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. அதாவது மனிதர் திங்கள்கிழமை அலுவலகத்திற்கே வீல் சேரில்தான் வந்தாராம். சரி, இந்த விவகாரத்தை கலைஞர் டிவியின் உரிமையாளர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களாம்? நிறைய நடந்திருக்கிறது. சரத் ரெட்டியைத் தாக்குவதற்கு முன்பே கலைஞர் டிவி தரப்பினரிடம் செய்து சரத்தைப் பற்றி … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 1 Comment

சுதந்திரமான மீடியா..?வெட்கக்கேடு.

ஊடகத்துறை மிகத் துடிப்புமிக்கதாக கருதப்படும் நமது நாட்டில், எடிட்டர் என்பவர் பத்திரிகைகளுக்கும் டிவிகளுக்கும் வெளியில் இருக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை. சமீபத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இதற்கு ஒரு சான்று. கடந்த சனிக்கிழமை இரவு கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் ரெட்டியின் வீட்டிற்கு மாறன் சகோதரர்கள் சென்றதாகவும் அங்கே நள்ளிரவு வரை … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | Leave a comment

கெட்ட மாம்ஸிடம் சிக்கிக்கொண்ட கதை

என்ன நினைத்து இந்த போஸ்டரின் வாசகங்களை எழுதினார்கள் என்று தெரியவில்லை. படித்தால் சிரிப்புத்தான் வருகிறது.

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 2 Comments

மதுரை சோழ நாட்டின் தலைநகரம்!

 29.07.2008ந் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னைப் பதிப்புடன் வழங்கப்படும் சென்னை டைம்ஸில் ஒரு சிறு குறிப்பு. மதுரையில் எடுக்கப்படும் படங்களெல்லாம் வெற்றிபெறுகின்றன என்பதுதான் அந்தக் குறிப்பின் சாரம். மதுரையை சோழப் பேரரசின் தலைநகரம் என்கிறது அந்தக் குறிப்பு! மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரமா, சோழ நாட்டின் தலைநகரமா என்ற சந்தேகம் வந்தால் யாரிடமாவது கேட்க … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 5 Comments

மதுரை மத்தியத் தொகுதி யாருக்கு?

மதுரை மத்திய தொகுதிக்கு வரும் 11ந் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை ஆற்றிய பங்கைப் பற்றிப் பேசதான் இந்த வலைப்பதிவு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குமுதம் ரிப்போர்ட்டர் மத்தியத் தொகுதி இடைத்  தேர்தல் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அந்த தொகுதியில் முக்குலத்தோர்தான் அதிகம் என்பதால் அங்கு முக்குலத்தோர் … Continue reading

Posted in பேப்பர்காரய்ங்க அட் | 2 Comments