அதிரடி ரெய்டு

பிப்ரவரி 12ந் தேதி மாலை நாளிதழ்களில் பின்வருமாறு தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது: கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீடுகளில் போலீஸ் அதிரடி ரெய்டு: 6 பேர் கைது. இந்த ஆறு பேரும் என்ன செய்தார்களாம்?

ஒரு பண்ணை வீட்டில், வீட்டு உரிமையாளரின் அனுமதி பெற்று, உள்ளே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்ததுதான் அவர்கள் செய்த தவறாம். இந்தத் தவறு போதாதென்று லேப்டாப்பில் பாட்டு வேறு போட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்களாம். இந்தக் கலாச்சார மீறல்களைச் சகிக்க முடியாத காவல்துறை, அவர்கள் வைத்திருந்து விலையுயர்ந்த மதுபாட்டில்கள், லேப்டாப்களை அதிரடியாக பறிமுதல் செய்திருக்கிறது. வீட்டு உரிமையாளரைத் தேடி வருகிறது.
என்ன காமெடி இது? திருவல்லிக்கேணி பக்கம் போனால், ஒவ்வெரு டாஸ்மாக் வாசலிலும் குறைந்தது நான்கு பேராவது குடித்துவிட்டு அலம்பல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே மட்டுமில்லை, சென்னையின் பல இடங்களிலும் இதே கதைதான். இவர்களையெல்லாம் தூக்கி உள்ளே வைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. சட்டம் – ஒழுங்கு, கலாச்சாரம், மண்ணாங்கட்டி இவற்றைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் கதவைப் பூட்டிக்கொண்டு குடிப்பவர்களை அதிரடி ரெய்டு போட்டு தூக்குவது என்ன நியாயம்? இதற்கு கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மேற்பார்வை வேறு!

நமது சட்டங்களே ரொம்பவும் ஆச்சாரமானவை. அந்த ஆச்சாரங்களையும் மீறி வழங்கப்பட்டிருக்கும் சில சுதந்திரங்களையும் காவல்துறை பறிக்கிறது என்பதுதான் சோகம். நீலப்படங்களையே தனிநபர் பார்ப்பது தவறில்லை என்று சட்டம் சொல்லும் நிலையில், பூட்டிய வீட்டிற்குள் குடித்தவர்களை கைது செய்து, நாளிதழ்களுக்கும் செய்தியாகக் கொடுப்பது அராஜகம்.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

5 Responses to அதிரடி ரெய்டு

  1. ரசிகருங்கோ says:

    அட பெருமாளே! லோகம் எங்கேயோ போய்ண்டிருக்கு! இத யாருமே கேட்க மாட்டேளா?

    Like

  2. சிட்டிசன் says:

    இன்னாபா நீ பாட்டில எடுத்துட்டு பூட்டாங்கோ ணு சொல்றாரு.நீ என்னமோ இப்போ வந்து கேக்கற?அடுத்த தபா வரும்போது சொல்றோம் இப்பொ போ!

    Like

  3. மகாநதி கமல்ஹாசன் says:

    நான் எதுவும் பேசலை. கொஞ்சம் பேசாம இருக்கீங்களா சாமி?

    Like

Leave a comment