நாடோடிகள் நல்ல படமா?

தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தில் நடித்திருந்தார் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.
ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. இந்தப் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.
ஆனால், டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.

நாடோடிகள்தமிழில் கடந்த சில மாதங்களாக வெளிவரும் படங்களைப் பார்க்கும் சினிமா ரசிகனுக்கு விரக்திதான் மிச்சம். பசங்க படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக ஒரு படமும் வரவில்லை. இதற்கிடையில் டிவிகளில் நாடோடிகள் படத்தின் விளம்பரம் வெளிவந்தபோது, சட்டென எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. சமீப காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட படமான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கிய சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பதும், இந்தப் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்ததும்தான் இந்த எதிர்பார்ப்பிற்குக் காரணம். இந்த சமுத்திரக்கனி, இதற்கு முன்பு நிறைஞ்ச மனசு படத்தை இயக்கியவர் என்பதும் பிறகு டிவி சீரியல்களை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் கொஞ்ச நாள் மறந்துபோய், அந்த டிரெய்லர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித பரவசம் ஏற்பட்டது.

ஆனால், படத்தைப் பார்த்தவுடன் கடும் விரக்தி ஏற்படுகிறது. சசிகுமார் என்ற இயக்குனர் – நடிகரின் பெயரில் இருக்கும் பிராண்ட் வேல்யூவை வைத்துக்கொண்டு ஒரு அமெச்சூரான படத்தைக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. மூன்று நண்பர்கள். மூவருக்கும் வெவ்வேறு இலக்குகள். அப்போது, சசிகுமாரைத் தேடி பழைய நண்பர் ஒருவர் வருகிறார். அவருடைய காதலில் பிரச்னை. அந்த இளைஞரையும் அவரது காதலியையும் பல்வேறு இழப்புகளைத் தாண்டி சேர்த்து வைக்கிறார்கள் இந்த மூவரும். பிறகு, நண்பரும் காதலியும் பிரிந்துவிட, மூவரும் அந்த இளைஞரையும் அந்தக் காதலியையும் பழிவாங்கத் துடிக்கிறார்கள்.

படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்தே இது தேறாத படம் என்று தெரிந்துவிடுகிறது. அதற்கடுத்த காட்சியில் ஹீரோவின் அறிவுரை. தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். அதில் பல காதலின் கீழ்மையையும் நட்பின் மேன்மையையும் உரத்த குரலில் அறிவிக்கின்றன. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் குமுறித் தீர்க்கப்பட்டவை. தாங்க முடியவில்லை. இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கும் இரண்டு பெண்கள்தான் ஒரே ஆறுதல்.

திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளையெல்லாம் பட்டியலிடுவது சரியான கடி வேலை. சுப்ரமணியபுரம் புலி என்றால் நாடோடிகள் பூனை. சுப்ரமணியபுரம் போக்கிரி என்றால், நாடோடிகள் தோரணை. சுப்ரமணியபுரம், பசங்க போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் புதிய அலையையே, ஒரு வகைமாதிரியாக மாற்றியிருக்கிறது இந்த படம்.  அதாவது, ஒரு வெற்றிகரமான மசாலா படம் வந்ததும் அதைப் போலவே பத்து குப்பை மசாலா படங்கள் வருவது போல. இதில் புரியாத மேட்டர் என்னவென்றால், இணையதளங்களில் எப்படி இப்படி கொண்டாடித் தள்ளுகிறார்கள் என்பதுதான். ஒரு எதிர்மறையான விமர்சனம்கூட கண்ணில் படவில்லை. மாறாக, இதைவிட பல மடங்கு மேம்பட்ட பசங்க படம் இந்த அளவு உற்சாகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை. நாடோடிகள் படத்தை எதிர்த்து எழுதுவதே தமிழினத்திற்கு செய்யும் துரோகம் (இப்போது இந்த துரோகம்தான் பேமஸ்) என்பது மாதிரி ஆகிவிட்டது. எவ்வளவோ செய்துவிட்டோம், இந்தத் துரோகத்தையும் செய்துவிடுவோம் என்றுதான் இந்த விமர்சனம்.

This entry was posted in சினிமா விமர்சனம். Bookmark the permalink.

37 Responses to நாடோடிகள் நல்ல படமா?

 1. வாசகன் says:

  இப்படி நல்ல படம் ஒன்றுக்கு எதிர்வினையாக பதிவு எழுதுவது ஒருவித சாடிசம் அல்லது சைக்கோத்தனம் எனலாம். நல்ல டாக்டரை அனுகவும்

  Like

 2. asker says:

  தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நல்ல திரைப்படத்தை நான் பார்த்ததே இல்லை அவளவு அருமையான படம் இதை போய் நல்ல இல்லன்னு எப்படி சொல்லலாம் .
  தயவு செய்து விமர்சனம் எழுதுவதை விட்டுவிடுங்கள் உங்களுக்கு எல்லாம் பேரரசு தான் சரி பட்டு வரும்

  Like

  • என் விமர்சனம் உங்களுக்குப் பிடிக்கவில்லை, என்னைத் திட்டுகிறீர்கள் சரி. ஆனால் தலைவன் பேரரசுவை ஏன் சம்பந்தமில்லாமல் திட்டுகிறீர்கள்? திருப்பாச்சியில் ஆரம்பித்து, சிவகாசி, தருமபுரி, பழனி என்று பட்டையைக் கிளப்பிய அவரது அரிய கலைப் பணியை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்? ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசம் ஸ்வாமி.

   Like

 3. raj says:

  இவரு மெண்டல் போல அதான் இப்படி லூசுதனமா எழுதுறாரு

  Like

 4. sunder says:

  ultimate movie

  Like

 5. asker says:

  இந்த படத்தில் வரும் சசிகுமாரின் தங்கை உண்மையில் காது கேக்காது வாய் பேச முடியாது இவரை நடிக்க வச்ச சமுதிரகனிக்கு ஒரு சபாஷ்

  Like

  • ரொம்ப நன்றாகச் சொன்னீர்கள். ஆனால், காதும் கேட்கிற, வாயும் பேசுகிற சசிக்குமாரை ஏன் சமுதிரகனியால் ஏன் நடிக்க வைக்க முடியவில்லை?

   Like

 6. dhinesh says:

  கொய்யாலா விஜய்க்குதான் அறிவுறை சொல்ற தகுதி இருக்கா… நீல்லாம் பேசாம பேரரசுக்கு போய் விளக்கு புடி..

  Like

  • தினேஷ் உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி மிக அதிகம் என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள்!

   Like

 7. thagavalkaran says:

  டிரெய்லரைப் பார்த்துப் பரவசப்பட்டு, படத்துக்குப் போகும் என்னை மாதிரி ஆட்களையெல்லாம், வாயில் ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்துவிட்டு, இன்னொரு செருப்பாலேயே அடிக்க வேண்டும்.எனக்கும் எது பொருந்தும் .

  என்ன பண்றது படத்துக்கு செருப்படேயே மேல் .

  Like

 8. இந்த Asker, raj, sunder எல்லாம் ஒரே ஆள் போலிருக்கிறது. நம் வலைபதிவில் வந்து ட்ரிபிள் ஆக்ட் கொடுக்கிறார்கள். நடக்கட்டும், நடக்கட்டும்!

  Like

 9. யாரோ, உங்களுக்கு என்ன? says:

  கட்டியக்காரன், சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. ஆனால் உங்களுடைய நகைச்சுவை உணர்வு இங்கு ஏன் பலருக்கு புரியவில்லை?! கஷ்ட காலம்.

  Like

 10. நல்ல விமரிசனம்! சில பேரைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவது பத்திரிகைளின் பழக்கம். இது வரை ஹைப்ரொஃபைல் ஆட்களைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். இப்போது கொஞ்சம் சின்ன நட்சத்திரங்கள்தான் பேசன் என்பதால் சின்னவர்களைக் கொண்டாடுகிறார்கள்.

  ரஜினிகாந்த், விஜய்காந்த், விஜய், அஜித், சீமான் போன்றோரின் ரசிகர்கள் எவ்வளவு நாகரிகமானவர்கள் என்பது தெரிந்ததுதானே. அவர்களுக்காகவாவது கமென்ட் மாடரேஷனை செயல்படுத்தலாம். அவசரப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் இடும் கமென்ட்களைத் தடுக்கத்தான் அந்த வசதி.

  Like

  • ரஜினி, விஜயகாந்த் ரசிகர்கள் சற்று பரவாயில்லை சாத்தான். கொஞ்சமாவது நாகரீக உணர்ச்சியும் ஜனநாயகப் பண்பும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

   Like

 11. zakir says:

  unkalukku padam eppadi pidikkalaiyo,athu pola enakku unka vimarsanam pidikkalai,aana enakku padam romba pidichirukku.
  zakir

  Like

 12. Dpal says:

  அருமையான விமர்சனம். உண்மையில் இந்தப் படத்தைக் கொண்டாடுவது ‘பசங்க’, ‘சுப்ரமணியபுரம்’ போன்ற நல்ல படங்களுக்கு செய்யும் துரோகம்.

  Like

 13. ம்…. உங்கள் பார்வையில் நாடோடிகளைச் சொல்லியிருக்கீங்க. சொன்னவரைக்கும் சரி! அதிலிருக்கும் நல்ல விசயங்களையும் சொல்லியிருக்கலாமே கட்டியக்காரன்.

  Like

 14. sangeetha says:

  marubadiyum neengal vimarsanagal ezhutha arambithuiruppathu varaverkathakkathu.

  naan naadodigal padam paarka villai.anal ungal vimarsanathai paditha piragu antha padam paarkum aaval korainthu varukirathu.

  oru padam entertaining aaga irukka vendum enbathai pathi en yaarum yosikka mattengiralgal enbathu puriyavilai.message kudukiren pervazhi enru sothapu kirargal.onrum sariyillai.

  Like

 15. நண்பா உங்களைப் போலவே படத்தைப் பற்றி எனக்கும் சில விமர்சனங்கள் உண்டு,இருப்பினும் அதை பெருசு படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் தனி மனித துதிப் பாடும் படங்களும்,கதாநாயகியரின் சதைகளை நம்பி வரும் படங்களும் குறைந்து வேறு திசையில் தமிழ் சினிமா பயணப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.”பசங்க” மாதிரியான தரமான படங்கள் நிறைய வரும் பட்சத்தில் நாடோடிகள் மாதிரியான படங்களின்(நாடோடிகளும் ஓரளவிற்கு தரமான படமே) மேல் வேறுமாதிரியான விமர்சனங்களை வைக்கலாமே.தவிரவும் நாடோடிகள் படத்தின் திரைக்கதையிலும் நிறைய ஓட்டைகளை கண்டுபிடிக்கலாம்.விமர்சனம் எழுதிய அனேக நண்பர்களுக்கும் அது தெரியும் என நினைக்கிறேன்.இருப்பினும் அதைப் பெரிது படுத்தாதற்குக் காரணம் மேற்சொன்ன விஷயங்கள்தான்.எல்லாவற்றிற்கும் மேலாக நாடோடிகள் நல்லதொரு மெஸேஜை தாங்கி வந்திருப்பதாக நினைக்கிறேன்.மாற்று முயற்சிகளை முதலில் வரவேற்போம்.சொல்ல வந்ததை சரியாகச் சொன்னேனா என்பது தெரியவில்லை,இருப்பினும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  நன்றி.

  Like

  • நண்பா,
   பசங்க, படத்தில் நடோடிகள் படத்திற்கு இணையாக பல ஓட்டைகள் உண்டு. இருந்தும் பசங்க படத்தை ஏற்பதற்கும், இந்தப் படத்தை நிராகரிப்பதற்கும் காரணம், பசங்க மிக நேர்மையான முயற்சி என்பதுதான். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி செய்திருப்பது, சசிகுமாரின் பிராண்ட் வேல்யூவைப் பயன்படுத்தி, நம்மைக் கூப்பிட்டு அமர்த்தி மெஸேஜ் சொல்வது. நான் மெஸேஜ் எல்லாம் காலெண்டர் தாளில் மட்டுமே படிப்பது வழக்கம். நூற்றுக்கணக்கில் பணத்தையும் 4 மணி நேரத்தையும் செலவழித்து, “நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே” என்பது மாதிரியான மெஸேஜையெல்லாம் புரிந்துகொள்வதில்லை. தனி மனித துதி பாடாவிட்டால், கதாநாயகியின் சதையைக் காண்பிக்காவிட்டால் அது நல்ல படம் என்ற ஃபார்முலாவில் எல்லாம் நமக்கு ஒப்புதல் இல்லை. நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் இன்னொரு விஷயம், மாற்று முயற்சி. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுகூட மாற்று முயற்சிதான். அதற்காக?

   Like

 16. //நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே//

  இதுதான் அந்த படத்தின் மெசெஜா?

  நான் புரிந்து கொண்ட வரையில் நட்பு என்கின்ற பெயரில் கண்மூடித்தனமாக செயல்படுபவர்களுக்கு மறைமுகமாக சில உண்மைகளை சொல்லியிருப்பதாகவே படுகிறது.

  //நான் மெஸேஜ் எல்லாம் காலெண்டர் தாளில் மட்டுமே படிப்பது வழக்கம்//
  அப்போ உங்க பார்வை சரிதான்.வேறொன்றும் சொல்வதற்கில்லை.

  //தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுகூட மாற்று முயற்சிதான். அதற்காக?//

  இப்படி நிறைய சொல்லலாம்.சரி நமக்குள் எதற்கு வீண் விவாதம்.

  Like

  • இலக்கியன், வார்த்தைகளில் விளையாடி உங்களைப் புண்படுத்துவது என் நோக்கமில்லை. அந்தப் படத்தை எடுத்தவர்கள் என்னென்னவோ டுபாக்கூர் வேலைகள் செய்தும் நீங்கள் மிகவும் நேர்மையாக அந்தப் படத்தை அணுக முயற்சிக்கிறீர்கள். அதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு மாற்று முயற்சி நடந்தால் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்களைப் போல லட்சக்கணக்கான உண்மையான சினிமா ரசிகர்களை ஏதோ ஒருவகையில் இந்தப் படம் ஏமாற்ற முயல்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. அதனால்தான் இவ்வளவு ஆத்திரம் வருகிறது. தோரணை மாதிரி படங்களோடு ஒப்பிட்டால் இது நல்ல படம்தான். ஆனால், நீங்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கும் இடம், இந்தப் படத்திற்கு உகந்தது அல்ல. “நட்பு என்கின்ற பெயரில் கண்மூடித்தனமாக செயல்படுபவர்களுக்கு மறைமுகமாக சில உண்மைகளை சொல்லியிருப்பதாகவே படுகிறது.” – இந்த வகையில் படத்தை புரிந்துகொள்ள விடாமல் படம் முழுக்க உபதேசம் பண்ணித் தீர்க்கிறார்களே.. அதை எப்படிப் புறக்கணிப்பது?

   Like

 17. முத்துச்சாமி says:

  தமிழில் எடுக்கப்படும் குப்பைப் படங்களுக்கு விமர்சனம் தேவையா?
  தேவை.. இவர்களுக்கு நல்ல படமெடுக்கும் அளவிற்கான பயிற்சி கொடுப்பதுதான்.

  பெரும் நோயில் விழுந்துகிடக்கும், சினிமாவுக்குத்தேவை, நல்ல வைத்தியம்.. விமர்சனமோ, அறிவுரையோ தேவையில்லை.
  இது போன்ற விமர்சனங்கள் எழுதுவதை தயவுசெய்து விட்டுவிடுங்கள்.
  அதற்குப் பதிலாக நல்லசினிமா எடுக்கத் துடித்துக்கொண்டிருப்பவர்களின், வெறி தணிந்துவிடாமல் பாதுகாருங்கள். உங்களால் முடிந்த உதவியை, அவர்களுக்குத் தேவைப்படும் உதவியை செய்ய மறக்காதீர்கள்.

  அதுதான், நீங்கள் நல்ல சினிமாவை நேசிப்பதற்கான அடையாளம்.

  Like

 18. Vijay fan - Moolai Mudekelaam Kaatru says:

  அட நம்ம தலைவருக்கு அட்வைஸ் சொல்ற தகுதி இல்லைன்னு உலகத்துக்கே தெரியும்.

  Dont compare vijay movies with nadodigal.Nadodigal is 1000 times better than any heroic movie.(let alone vijay)It may have loop holes in screen play but that doesnt make it a bad movie.

  Like

 19. இங்கே வருபவர்களின் நகைச்சுவை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. //தமிழ் சினிமாவில் அறிவுரை சொல்வதற்கான உரிமை ரஜினிகாந்திற்கும் அதற்குப் பிறகு விஜய்க்கும்தான் இருக்கிறது என்பது தெரியாமல் போகிற போக்கில் பலரும் பல அறிவுரைகளைக் கத்துகிறார்கள். // இந்த வரியை சீரியஸான வரியாக எடுத்துக்கொண்டு ஆளாளுக்குப் பதில் சொல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
  நம் ஆட்களைப் பொறுத்தவரை நகைச்சுவை என்பது, “ஒரே சிரிப்பு.. ஹா..ஹா.. ” இப்படியெல்லாம் எழுதினால்தான் போலிருக்கிறது.

  Like

 20. Joe says:

  அறிவுரைக் காட்சிகள் செம அறுவை.

  Like

 21. jyothsna says:

  நாடோடிகள் படத்தை பற்றி சில வரிகள்
  வாய் விட்டு உதவி கேட்காமல் தற்கொலை செய்ய தெரிந்த ஒரு இடமாக நண்பனின் வீட்டுக்கு வந்தவனை துருவி விஷயத்தை தெரிந்து கொண்டு நிதானித்து செயல்படாமல் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனேனு உடன் இருப்பவர்களும் செயல் படுவதில் ஒரு அவசர தனம் தான் தெரிகிறது மிக பெரிய தியாகம் தெரியவில்லை இருந்தாலும் பாராட்டுவதில் ஒரு அர்த்தம் உண்டு சின்ன குழந்தைகள் எதாவது செய்தால் பிரமிப்பது போல் நடித்து ஊக்க படுத்துவது உண்டே அதை போன்றது தான் இதுவும் தவறான தொழில் புரியும் பெண் கூட அசிங்கமாக காட்டப்படாத ஒரு படமல்லவா பாராட்டுவோம்
  anbudan

  Like

 22. Anonymous says:

  Hey…
  even am a Rajini n vijay fan..
  however …nadodigal is 10,000 times better than the other movies released this year…hope u consult with a good doctor as soon as possible…

  Like

 23. கொய்யாலு says:

  உனக்கு கண்ணு தெரியுமாடா?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s