மனைவியில்லாத வீட்டில்
தலைக்கு மேலே தொங்கும்
மின் விசிறியில்
கயிற்றை
முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது
வந்தது
அந்த மிஸ்டு கால்.
எம் 80 ஓட்டுபவர்களும்
மிஸ்டு கால் கொடுப்பவர்களும்
இன்னும் மதுரையில் மட்டுமே
மிச்சம் இருக்கிறார்கள்.
(சிக்கனமே
சிறந்த சேமிப்பு!)
தற்கொலை முயற்சியைத்
தள்ளிவைத்துவிட்டு
மிஸ்டு கால்
கொடுத்த நண்பனுக்கு
போன் செய்தேன்.
எப்படியாவது மதுரைக்கு
உடனே வா, வேட்டைக்காரன்
படத்தைச் சேர்ந்து பார்க்கலாம்
என்றான் மிஸ்டு கால் நண்பன்.
இப்படியாக, தற்கொலைகளைத்
தள்ளிப்போடுகிறது
அல்லது இல்லாமல்
செய்கிறது
நண்பர்களின் மிஸ்டு கால்கள்.
nanba..yaarupa nee..I am also part of this north masi street..
LikeLike