குறைந்த செலவில் தரமான படங்கள்!

2005, 2006ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கியிருக்கிறது. அதில் சில சிறந்த படங்களின் பெயர்கள் இதோ: மந்திரன், அறிவுமணி, ஸாரி எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு, பெண் நிலா, ப்ளஸ் கூட்டணி, சூப்பர்டா, றெக்கை, வரப்போகும் சூரியனே, அலையடிக்குது, உள்ளக் கடத்தல், ரைட்டா தப்பா, மறந்தேன் மெய் மறந்தேன், ஒரு காதல் செய்வீர், மழைத் துளி, அழகிய அசுரா, மது, ஆவணித் திங்கள், மனதோடு மழைக்காலம், இது காதல் வரும் பருவம். இதில் ஏதாவது ஒரு படத்தை நீங்கள் பார்த்திருந்தால் இந்தப் பட்டியலின் தரம் புரியம். இப்படி உப்புமா படம் எடுப்பவர்களுக்கு வரிப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக ரெண்டு காற்றாலையையாவது நிறுவலாம். மின்சாரம் கொடுக்கும்.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

2 Responses to குறைந்த செலவில் தரமான படங்கள்!

  1. எனக்கு ‘வரப்போகும் சூரியனே’ இப்பமே பாத்தாகணும். சீரியஸ்லி, காற்றாலையெல்லாம் பயனுள்ள சமாச்சாரங்கள். அதைச் செய்ய அரசுக்கு என்ன தலையெழுத்தா?

    Like

  2. நீங்க காதல் வரும் பருவம் பார்க்கனும் சாத்தான்… என்னமோ காலக் கொடுமை!

    Like

Leave a comment