மீண்டும் கருத்துச் சுதந்திரம்

இயக்குனர் சீமான் சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், தமிழகத்தில் கருத்துச் சுதந்திரமே இல்லை என்று குமுறுயிருந்தார். அதாவது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னையாக்குகிறார்களாம். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், எந்த நாட்டிலும் பிரச்னை வரத்தான் செய்யும். எல்டிடிஇ மீதான தடை இன்னும் நீடிப்பது சரியா என்பது வேறு பிரச்னை. ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால் பிரச்னைதான். அதை எதிர்கொண்டுதான் நம்முடைய கொள்கையை அரசிடம் முன்வைக்க வேண்டும். உடனே அதைக் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான விஷயமாக்குவது விஷயத்தை திசை திருப்புவதாகும்.

தவிர, சீமான் போன்றவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் தகுதி இருக்கிறதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் குஷ்பு, பாதுகாப்பான செக்ஸ் பற்றி சில ஆரோக்கியமான கருத்துக்களைச் சொன்னபோது, கொதித்தெழுந்து தமிழ்நாடு முழுக்க வழக்கத் தொடர்ந்தார்கள். மொத்தம் 27 வழக்குகள். இத்தனைக்கும் அந்தக் கருத்து பகுத்தறிவு சார்ந்து சொல்லப்பட்ட கருத்து. அதைத் “தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி தவறாகப் பேசிய குஷ்பு” என்று குறிப்பிட்டு அவரைப் பல மாதங்களுக்கு நீதிமன்றங்களில் இழுத்தடித்தார்கள். அதைச் செய்தவர்களை வலுவாக ஆதரித்தவர் சீமான். குஷ்புவுக்கு இல்லாத கருத்துச் சுதந்திரம் இவருக்கு மட்டும் வேண்டுமாம். இதற்கு நடுவில் தனித் தமிழ்நாடு கோரிக்கை வேறு. பசும்பொன் மாதிரி ஜாதி வெறியைத் தூக்கிப்பிடிக்கும் படங்களை எடுக்கும் இவர்கள் கையில் தனியாக ஒரு தமிழ்நாடு கிடைத்தால், கதை அதோடு கந்தல்தான்.

This entry was posted in சும்மா ஒரு கருத்து. Bookmark the permalink.

7 Responses to மீண்டும் கருத்துச் சுதந்திரம்

  1. TNG says:

    நச்சென்று நல்ல அடி. சீமான் போன்றோரின் இரட்டை வேஷத்தை சிறப்பாகவே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
    எல்லாவித சுதந்திரங்களுக்கும் எல்லைகள் உண்டு என்பதும் சரிதான்.
    ஆனால் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதாலேயே அவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் இங்கு வன்முறையில் இறங்க அனுமதிக்கப் படக்கூடாது, அது வேறு, ஆனால் அவர்களை ஆதரித்துப் பேசுவதே ஏதோ ஒரு தேசத்துரோகச் செயல் போலக் காட்டுவதும் தவறு. அதன் மீதான தடையை எதிர்த்து குரல் கொடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது.

    Like

  2. எல்டிடிஇக்கு ஆதரவாகப் பேசுவதே தவறு என்று சொல்லவில்லை. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசினால், அரசின் அடக்குமுறையை சந்தித்தாகத்தான் வேண்டியிருக்கிறது. நீங்கள் மின்சாரத்திற்காகப் போராடினாலும் இதே மாதிரியான அடக்குமுறைதான் ஏவப்படும். இவை ஒருபோதும் கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகாது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். எல்லாம் சரி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒரு பதிவு எழுதிப் பாருங்களேன்.. குடும்பத்தையே கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்பது சீமான் மாதிரி ஆட்கள் வரையறுப்பதாக மாறிவருகிறது என்பதுதான் பிரச்னை.

    Like

  3. சீமான் சூப்பர் டெனிம் சட்டை போட்டிருக்கிறார். தமிழன் சட்டை பேன்ட் போடக் கூடாது, வேட்டி கட்டி வயலில் மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும் என்பது போல் கூட அவர் ஒரு முறை பேசியிருக்கிறார்.

    Like

  4. ஆமாம், எல்லோரும் வேஷ்டி சட்டை போட்டுக் கொண்டு இவருடைய பசும்பொன், வாழ்த்துகள் போன்ற பாடாவதி படங்களை பார்க்க வேண்டும். இவர் தமிழ்த் தேசியம் ஒரு பக்கம், தன் பாடாவதி சினிமா ஒரு பக்கமுமாக வெளுத்து வாங்குவார். நாமெல்லாம் பார்த்து ஜோரா கைதட்ட வேண்டும். இல்லாவிட்டால் பாமரன் நம்மை திட்டுவார்.

    Like

  5. Dharam says:

    Fantastic. Pamaran recently wrote that he is sleepless these days on the sufferings of ealam people. However it is possible for him to have a “chaya” at nearby nair teashop. Hipocrasy to the core.In an article Gnani criticises director Balaa for showcasing poverty. He praises Slumdog Millionaire in the same series next week. I think both the films have ecploited poverty.(Same as Ray used to do in his films to get international recognition.) Nangil Naadan describes beautifully our folk arts and criticises classical dance at the same article unneacessarily. Both are arts and they cater to different masses, so is it a must to say “ozhiga” to one for to hail “vazhga” for another?. So I think we should not give much ceredence to the so called intellectuals. They are clowns in the everyday circus of our lives. We should just read them have a good laughter and relieve ouselves.

    Like

  6. roy says:

    சீமான் தமிழர்களுக்காக பேசுபவர். இந்திய அரசியல் வாதிகளின் நாடகங்களை துகிலுரிப்பவர். பல முறை தமிழக அரசின் பொய்முகத்தை வெளிக்கொண்டு வந்தவர். அதானால் பல முறை சிறை சென்றிருக்கிறார். தமிழ் நாட்டில் சிறை செல்பவர்கள் ஒரு கட்சி வைத்து அனுதாப அலையை எற்படுத்தவே செல்வார்கள். ஆனால் சீமான் அப்படியல்ல.குஸ்பு பற்றி இன்னுமொரு விவாதத்தில் பேசலாமே!!

    Like

  7. Dharam says:

    What has Seeman done for tamils in TN? I think he too makes all these emotional speeches with some ulterior agenda same as Ramadoss, Vaiko, etc. LTTE has done lot damage to the Ealam Tamils to ensure its survival and any nuetral obeserver will accept this fact. What is Seeman going to say for this? If he is really concerned about the well being of Tamils he should respond.
    OK friends, what you people think about Jayalalitha’s sudden discovery on forming seperate Ealam state?

    Like

Leave a comment